ஆர்யாவின் ஹலோ காதல் - முதல் பாடல் அறிவிப்பு!
ஆர்யா நடிக்கும் ஹலோ காதல் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது.
ஆர்யா - நிகிலா விமல்
ஆர்யா நடிக்கும் ஹலோ காதல் படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியானது.
நடிகர் ஆர்யா நடிப்பில் இறுதியாக வெளியான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக தோல்விப்படமானது.
தற்போது, பா. இரஞ்சித்தின் வேட்டுவம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வேட்டுவம் இந்தாண்டு இறுதியில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் ’ஹலோ காதல்’ என்ற படத்தில் ஆர்யா நடித்துள்ளார்.
ஆர்யாவின் 40-வது திரைப்படமான இதில் நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடித்துள்ளனர்.
காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தின் முதல் பாடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கண்ணும் கண்ணும் என்கிற இப்பாடல் நாளை வெளியாகின்றது.
இப்படத்தின் அறிமுக டீசர் சில நாள்களுக்கு முன் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஹலோ காதல் திரைப்படம் வருகிற டிச. 4 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Summary
Arya's Hello kaadhal- First Song Announcement!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


