பருவமழை தீவிரம்: சென்னை எழிலகத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை! வன்னி அரசு காட்டம்!எல். முருகன் ராஜிநாமா: நவ. 12ல் மாநிலங்களவை இடைத்தேர்தல்!தங்கம் விலை இன்று அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (அக். 22)வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

மீசைக்கார நண்பா, வெள்ளரிக்கா பிஞ்சு... கிருஷ்ணராஜின் மறக்க முடியாத சில பாடல்கள்!

மறைந்த பாடகர் கிருஷணராஜ் பாடிய பாடல்கள் குறித்து...

krishnaraj

பாடகர் கிருஷணராஜ் - படம்: ENS

Updated On :

தமிழ்த் திரைப்பட பாடகர் கிருஷ்ணராஜ் (75) இன்று (அக். 22) காலை காலமானார். இவர் தமிழ் சினிமாவில் 300-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

1990 - 2000 காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் குரலில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் பாடல்கள் ஏராளம். குறிப்பாக, அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா இசையில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இன்றளவும் புகழ் பெற்று இருக்கின்றது.

கிருஷ்ணராஜின் தனித்துவமான கம்பீரக் குரல், கிராமிய மனம் கொண்ட பாடல்கள், குத்துப்பாடல்கள் என பல்வேறு பாணியிலான பாடல்கள் பாடுவதற்கு பொருத்தமான குரலாக இருந்தது. இவர் குரலில் ஒலிக்கும் பாடல்களின் வார்த்தை உச்சரிப்புக்கு இவர் கொடுக்கும் அந்த உணர்வுப்பூர்வ அழுத்தமே பாடலின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கும்.

நாட்டாமை படத்தில் 'நாட்டாமை பாதம் பட்டா' பாடல் இன்றளவும் தனித்துவமான பாடலாக இருக்கிறது. காதல் கோட்டை படத்தில் 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடல் என்ற துள்ளளிசை பாடலை பாடி அப்போதைய இளைஞர்களிடையே கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, தேவா இசையமைப்பில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த பொற்காலம் படத்தில் இடம் பெற்றிருந்த 'தஞ்சாவூரு மண்ணு எடுத்து' பாடல் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.

இந்தப் பாடல் தமிழ்நாடு மட்டுமின்றி, உலகளவில் புகழ் பெற்றது. சிங்கப்பூர் முன்னாள் அதிபர் செல்லப்பன் ராமநாதன் அவரின் விருப்பப்படி, அவரின் இறுதிச்சடங்கின்போது இசைக்கப்பட்டது. இவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த பின்னணிப் பாடருக்கான மாநில திரைப்பட விருதும் 'தஞ்சாவூர் மண்ணெடுத்து'ப் பாடலுக்கு கிடைத்தது.

தொடர்ந்து, மூவேந்தர் படத்தில் சிற்பி இசையமைப்பில் 'சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரி சோக்கு சுந்தரியே' பாடல் மக்களிடையே ரசிக்கும் படியாக இருந்தது. காதலே நிம்மதி படத்தில் தேவாவுடன் 'விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி' பாடலைப் பாடியிருப்பார். இவர் மெலோடி பாடலைப் பாடுவதில் சலித்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் நட்புக்காக படத்தில் 'கருடா கருடா' என் காதலை திருப்பிக் கொடு என்று பாடி, மெல்லிசையை விரும்பும் ரசிகர்களின் மனங்களிலும் இடம் பிடித்தார்.

நினைத்தேன் வந்தாய் படத்தில் 'மனீஷா மனீஷா' பாடலில் தேவா மற்றும் சபேஷ் உடன் கிருஷ்ணராஜ் பாடியிருப்பார். பிரவுதேவாவின் நினைவிருக்கும் வரை படத்தில் 'திருப்பதி ஏழுமலை வெங்கடேசா', 'காத்தடிக்கது, காத்தடிக்குது' பாடல்கள் ஒலிக்காத இடங்களே இல்லை எனலாம். தாஜ்மஹால் படத்தில் 'ஏச்சி எலுமிச்சி' பாடலை துள்ளல் மற்றும் மெல்லிசை கலந்து வித்தியமான பாணியில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த பாடலை கிருஷணராஜ் பாடியிருந்தார்.

ஏழையின் சிரிப்பில் படத்தில் இவர் பாடிய 'யப்பா யப்பா ஐயப்பா' பாடல் ஒலிக்காத பேருந்துகளே இல்லை. இதனைத் தொடர்ந்து, ராஜகாளி அம்மன் படத்தில் பாடிய 'தங்கச்சி ஏன் தங்கச்சி' பாடல் தங்கை பாசத்துக்கான பாடலாக இன்றளவும் பேசப்படுகிறது. துள்ளளிசை, மெல்லிசை என இரண்டு பாடல்களைப் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு பார்வை ஒன்றே போதுமே படத்தில் இவர் பாடிய 'நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும்' இவருக்கும் கம்பேக் பாடலாக அமைந்தது. 'நான் ரெடி நீங்கா ரெடியா', 'வெத்தலக் கொடியே', 'எங்க ஊரு சந்தையிலே', 'மாப்புள்ள மாப்புள்ள' என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்தார் கிருஷ்ணராஜ். இதனைத் தொடர்ந்து, இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் 'பஞ்சு மெத்த கனியே பஞ்சவர்ண கிளியே' பாடல் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது.

பருத்திவீரன் படத்தில் 'அய்யய்யோ' பாடலை மாணிக்க விநாயகம், ஸ்ரேயா கோஷல், யுவன்சங்கர் ராஜாவுடன் பாடியிருந்தார். எண்ணற்ற பாடல்களை பாடி வந்த இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த முத்து முத்தாக படத்தில் இடம்பெற்ற 'காத்தடிச்சா நோகுமுனு பொத்தி பொத்தி வளர்த்தீக' பாடலைப் பாடியிருந்தார். இந்தப் பாடலில் இவரின் குரல் பெற்றோர் - மகன் பாசத்தை கேட்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. கழுகு படத்தில் 'ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்' பாடலும் இவர் பாடிய வெற்றிப் பாடல்களுள் ஒன்று. இவர் உற்சாகம் ததும்பும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இவர் பாடிய பெருபாலான பாடல்கள் தேவாவின் இசையமைப்பில் உருவானவை. இந்த நிலையில்தான் இசையமைப்பாளர் தேவா மறைந்த ஒரு சில நாள்களில் கிருஷ்ணராஜும் காலமானது தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Summary

Popular singer Krishnaraj (75) passed away this morning (Oct. 22). He had sung more than 300 songs in Tamil cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.