வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

காலங்களில் அவர் வசந்தம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட 12 மொழிகளில் மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் 'இசைமேதை' பி. பி. ஸ்ரீனிவாஸ்.

Updated On :

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்பட 12 மொழிகளில் மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் 'இசைமேதை' பி. பி. ஸ்ரீனிவாஸ்.

மகிழ்ச்சி, சோகம், காதல் உள்ளிட்ட நவரச பாவனைகளும் இவரது பாடலில் இனிக்கும். தமிழ்த் திரையுலகில் டி. எம். செளந்தரராஜன் குரல் உச்சபட்சமாக இருந்த காலகட்டத்தில் பி. பி. ஸ்ரீனிவாஸ் மென்மையான குரலில் பாடுவதில் ஒரு புதிய பாணியைக் கொண்டு வந்ததோடு, புதிய சகாப்தத்தையும் படைத்தார்.

தென் இந்தியாவின் பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகரான இவர், ஆந்திரப் பிரதேசத்தின் காக்கி

நாடா மாவட்டத்தில் 1930-ஆம் ஆண்டு செப். 22-இல் பிறந்தவர். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல மொழிகளில் புலமை பெற்றவர்.

இவருடைய முதல் பாடல், ஜெமினி நிறுவனம் 1951-ஆம் ஆண்டில் தயாரித்த 'மிஸ்டர் சம்பத்' என்னும் ஹிந்தி படத்தில் வெளியானது. 1953-ஆம் ஆண்டில் வெளியான 'ஜாதகம்' என்னும் தமிழ்ப் படத்தில் 'சிந்தனை ஏன் செல்வமே' என்னும் பாடலை இவர் முதலில் பாடினார்.

தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசனுக்கும்,

கன்னடத்தில் ராஜ்குமாருக்கும் அநேகமாக அவர்களின் அனைத்துப் படங்களிலும் பின்னணி பாடினார்.

அந்தக் காலத்தில் தன்னுடைய இனிமையான குரலால் காலத்தால் அழியாத எண்ணற்ற பாடல்களைப் பாடி ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பி.பி.

ஸ்ரீனிவாஸ் பிடித்தார். அற்புதக் கலைஞரான இவர் தமிழில் பாடிய 'நினைத்ததெல்லாம் நடந்து விட்டால்', 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்', 'நிலவே என்னிடம் நெருங்காதே', 'பூஜைக்கு வந்த மலரே வா', 'ரோஜா மலரே ராஜகுமாரி..', 'அழகிய மிதிலை நகரினிலே', 'நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் இன்றும் ரசிகர்களால் விரும்பப்படுகின்றன.

இவருடைய குரல் ஜெமினிகணேசனுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்தது. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் ஜெமினிக்காக பி. சுசீலாவுடன் பாடிய 'இன்பம் பொங்கும் வெண்ணிலா' பாடலும், 'கப்பலோட்டிய தமிழன்' படத்தில் 'காற்று வெளியிடை கண்ணம்மா' என்னும் பாடலும் அனைவராலும் விரும்பப்பட்டன.

இந்தப் பாடல்களைக் கேட்ட இயக்குநர் பீம்சிங், ஏ.வி. மெய்யப்பச் செட்டியார் ஆகிய இருவரும்

எம்.எஸ். விசுவநாதனிடம் 'பாவமன்னிப்பு' படத்தில் இவரைப் பாட வைக்க வேண்டும் என்று கேட்டனர். அந்தப் பாடல் தான் 'காலங்களில் அவள் வசந்தம்'. கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த அந்தப் பாடல் இன்றுவரை மறக்க முடியாத பாடலாக அமைந்து விட்டது. 'சுமைதாங்கி' படத்தில் வரும் 'மயக்கமா கலக்கமா' எனும் பாடலும் மறக்க முடியாத பாடல்தான்.

'ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியே வந்தபோது ஒரு ரசிகர், 'எனக்கு மனம் கவலைப்பட்டு தற்கொலை எண்ணம் வந்தபோது இந்த பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு மனம் திருந்தி வாழவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது' என்று அந்த ரசிகர் சொன்னார்'' என்று பி.பி.

ஸ்ரீனிவாஸ் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். இப்பாடல் திரைப்படக் கவிஞர் வாலி அவர்களுக்குப் பிடித்த சிறந்த பாடலாகும்.

ஒருகாலத்தில், சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பி பி. ஸ்ரீனிவாûஸ எப்போதும் பார்க்கலாம். இவர் தன் சட்டைப் பையில் நான்கு, ஐந்து பேனாக்களை வைத்திருப்பார். அவை ஒவ்வொன்றும் ஒரு கலரில் இருக்கும். அத்துடன் பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு பேனா நண்பர்களுடன் தொடர்பு கொள்வது மிகவும் பிடிக்கும்.

2013-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-இல் இவர் காலமானார்.

-தங்க. சங்கரபாண்டியன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.