
ரன்பீர் - ஆலியா பட் நடிக்கும் லவ் அன்ட் வார் படத்தின் ரிலீஸ் தேதி!
பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகிவரும் லவ் அன்ட் வார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து...

லவ் அன்ட் வார் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் . பன்சாலி புரடக்ஷன்ஸ்
நடிகர் ரன்பீர் கபூர் - நடிகை ஆலியா பட் நடிப்பில் உருவாகிவரும் லவ் அன்ட் வார் படத்தின் அதிகாரபூர்வமான வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ரன்பீர் கபூர் 2007-ல் தனது முதல் படமான சாவாரியாவில் நடித்தார். அதை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தற்போது ’லவ் அன்ட் வார்’ என்ற படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் ஆலியா பட், விக்கி கௌஷல் நடிக்கிறார்கள். இந்தப் படம் அடுத்தாண்டு ஜனவரி 21ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 2022இல் வெளியான கங்குபாய் கைதியவாடி படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஆலியா பட்டிற்கு தேசிய விருது கிடைத்தது.
ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்குப் பிறகு ரன்பீர் கபூர் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை பன்சாலி புரடக்ஷன்ஸ் சார்பாக இயக்குநரே தயாரிப்பதும் கவனிக்கத்தக்கது. முதல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ரன்பீர் ரத்த காயத்துடன் கார் ஓட்டுவது பொன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
Woh rutba, woh raub, woh junoon!
— BhansaliProductions (@bhansali_produc) September 24, 2026
Sanjay Leela Bhansali's Love & War on 21st January 2027 â¤ï¸
See you at the movies! ð¬#LoveAndWar@saregamaglobal #RanbirKapoor @vickykaushal09 @aliaa08 pic.twitter.com/QAYrg7ODsu
Summary
Release date for 'Love & War' starring Ranbir Kapoor and Alia Bhatt!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







