நானி Vs அல்லு அர்ஜுன் யார் ஹீரோ? தெலுங்கில் ரீமேக் ஆகிறது 96!
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்விருக்கிறார்கள்


விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்விருக்கிறார்கள். சி.பிரேம்குமார் இயக்கிய இத்திரைப்படம் கோலிவுட்டில் பரவலான கவனிப்பையும் பாராட்டுக்களையும் பெற்றது. இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் மட்டுமல்ல டோலிவுட்டிலும் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. ஆனால், அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் 96 படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். விரைவில் 96 படத்தின் ரீமேக் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றனர் படக்குழுவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...