பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்பட ட்ரீட்!

பிரபாஸின் திருமணம் எப்போது எனும் மில்லியன் டாலர் கேள்விக்கு இந்த ஆண்டும் விடை கிடைக்காமல் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருப்பது
பிரபாஸ் பிறந்தநாள் ஸ்பெஷல் புகைப்பட ட்ரீட்!
Published on
Updated on
3 min read

இன்று தனது 39 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகர் பிரபாஸ், உலகம் முழுவதிலிமிருக்கும் தனத் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக ‘ஷேட்ஸ் ஆஃப் சாஹோ’ ட்ரெய்லர் வெளியிட்டு இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். டிரெய்லர் மட்டுமல்ல,  தனது வெறித்தனமாகக் கொண்டாடும் ரசிகர்களுக்கென்று ஸ்பெஷலாக ஹை டெஃபனிஷன் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு அசத்தியுள்ளார்.

ஷேட்ஸ் ஆஃப் சாஹோ டிரெய்லர்...

ரசிகர்களுக்காக முகநூலில் பிரபாஸ் பகிர்ந்துள்ள HD புகைப்படம்...

பாகுபலி 1& 2 திரைப்படங்களை அடுத்து தற்போது பிரபாஸ் சாஹோ திரைப்பட வேலைகளில் மூழ்கியுள்ளார். தற்போது 39 வயதாகும் பிரபாஸ் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவிக் கொண்டிருந்த நிலையில் அனைத்தையும் மறுத்த அவரது குடும்பத்தினர் இந்த ஆண்டு இறுதிக்குள் அவரது திருமணம் குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில் பிரபாஸ் பிறந்தநாளான இன்று அவரது திருமணம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இந்த ஆண்டும் வழக்கம் போலவே பிரபாஸ் தனது திரைப்பட மேக்கிங் வீடியோவை வெளியிட்டு தனக்குத் திருமணத்தைக் காட்டிலும் அடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படம் குறித்து தான் அதிக அக்கறை என சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.

டோலிவுட்டில் டார்லிங் என்றும் ரெபெல் ஸ்டார் என்றும் பாகுபலி என்றும் பல்வேறு பெயர்களில் ரசிகர்களால் உச்சி முகர்ந்து கொண்டாடப்படும் பிரபாஸின் திருமணம் எப்போது எனும் மில்லியன் டாலர் கேள்விக்கு இந்த ஆண்டும் விடை கிடைக்காமல் அவரது ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருப்பது சற்று வருத்தமான விஷயம் தான்.

ஆனாலும், வேலை முக்கியம் பாஸ்! என்கிறார் பாகுபலி!

பிரபாஸ் இதுவரை நடித்த திரைப்படங்கள் 18 ... 19 ஆவது திரைப்படமாகத் தயாரிப்பில் இருப்பது சாஹோ.

ஈஸ்வர் முதல் சாஹோ வரை பிரபாஸ் ஸ்டில்ஸ்...

1.ஈஸ்வர்...

ஈஸ்வர் பிரபாஸின் அறிமுகத்திரைப்படம், இதில் நாயகி ஸ்ரீதேவி விஜயகுமார்.

2.ராகவேந்திரா...

3. வர்ஷம்

அடவி ராமுடு

சக்ரம்

சத்ரபதி

பெளர்ணமி

யோகி

முன்னா

புஜ்ஜிகாடு

பில்லா

ஏக் நிரஞ்சன்

டார்லிங்

மிஸ்டர் பெர்ஃபெக்ட்

ரெபெல் 

மிர்ச்சி

பாகுபலி 1

பாகுபலி 2

சாஹோ

பிரபாஸின் முதல் திரைநாயகி ஸ்ரீதேவி விஜயகுமார், ராகவேந்திரா திரைப்படத்தின் நாயகி அன்சூ, இவர்களைத் தொடர்ந்து வர்ஷம், பெளர்ணமி மற்றும் புஜ்ஜிகாடு உள்ளிட்ட 3 திரைப்படங்களில் த்ரிஷாவும், மிஸ்டர் பெர்ஃபெக்ட், டார்லிங் திரைப்படங்களில் காஜல் அகர்வாலும், பில்லா 2, மிர்ச்சி, பாகுபலி திரைப்படங்களில் அனுஷ்காவும், ரெபெல் மற்றும் பாகுபலி 1 ல் தமன்னாவும் பிரபாஸுடன் ஒன்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஜோடியாகி இருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர...

ஏக் நிரஞ்சனில் நடிகை கங்கனா ரணாவத்தும், முன்னாவில் இலியானாவும், யோகி திரைப்படத்தில் நயன் தாராவும் பிரபாஸுடன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

வெளிவரவிருக்கும் சாஹோ திரைப்படத்தில் பிரபாஸின் நாயகி ஷ்ரத்தா கபூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com