ஸ்பெஷல்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை நோக்கி... விஜய் நேர்காணல் -5!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் அளித்த பதில்கள்...

ரஜினியுடன் விஜய். - படம்: தினமணி
'காதலுக்கு மரியாதை' வெற்றி விழாவில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்" என்று உங்களை இயக்குநர் சிகரம் பாராட்டியிருப்பது குறித்து..?
சின்ன வயசிலிருந்தே நான் டைரக்டர் கே. பாலச்சந்தர் அவர்களின் ரசிகன். அவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டதுண்டு. அந்த வாய்ப்பு இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், அவரிடமிருந்து இப்படிப்பட்ட பாராட்டுக் கிடைத்தது குறித்து 'இன்ப அதிர்ச்சி' அடைந்தேன்.
இயக்குநர் சிகரம் பாராட்டுகிறார் என்றால் அதைக் காட்டிலும் எனக்கு வேறென்ன வேண்டும்! அந்தப் பாராட்டுக்கு என்னைத் தகுதியாக்கிக் கொள்ளுவேன்.
வெற்றிச் சிகரத்தின் மீது ஏறி நிற்கும் நீங்கள் இனி எப்படிப்பட்ட கேரக்டர்களில் நடிப்பீர்கள்? வித்தியாச மான வேடங்களில் நடிப்பீர்களா?
'நிலாவே வா' படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தேன். தொடர்ந்து முற்றிலும் வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பேன். இல்லாவிட்டால் ரசிகர்களை திருப்திபடுத்த முடியாது. 'பாஸிகர்' ஷாருக்கான் மாதிரி, 'சிகப்பு ரோஜாக்கள்' கமல் மாதிரி ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட்டுகளில் - ஒரு சில படங்களில் ஒரு மாறுதலுக்காகச் செய்யலாம். மற்றபடி · வழக்கமான ஹீரோவாகத் தொடர்வேன். ஆனால், சாதாரணமாக கதாநாயகியுடன் கட்டிப் பிடித்து புரண்டு பாடல்களைப் பாடிவிட்டு, இரண்டு, மூன்று சண்டைக் காட்சிகளில் மட்டும் தோன்றிவிட்டுப் போகமாட்டேன்.
உங்களுடைய வளர்ச்சிக்கு உங்களது தகப்பனார் - தாயார் தந்த ஆக்கமும், ஊக்கமும்தான் காரணமா?
நிச்சயமாக! அப்பாவின் ஆதரவு, வழிகாட்டுதல் மூலமாகத்தான் சினிமாவில் நுழைந்தேன். நான் சிளிமாவில் எப்படி நடிக்க வேண்டும், எப்படி எல்லோரிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை என் தந்தை கற்றுக் கொடுத்தார். அதுபோலவே எனது தாயாரும் எனது வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். இருந்து வருகிறார். என்னிடம் சொந்தத் திறமையும் இருக்கிறது. அதை வெளிப்படுத்திக்காட்ட சரியான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் கொடுத்தவர்கள் என் தாய் - தந்தையர்.
உங்களுக்குப் போட்டியாக எந்த இளம் நடிகரை கருதுகிறீர்கள்?
எல்லா இளம் நடிகர்களும் எனக்கு நண்பர்கள்தான். எவரையும் எனக்குப் போட்டியாக நான் நினைப்பதில்லை.
'ஒன்ஸ்மோர்' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் தடித்தது குறித்து..?
'ஒன்ஸ்மோர்' படத்தில் சிவாஜி சாருடன் நடித்தேன் என்று சொல்லுவதைக் காட்டிலும், ஒரு மாபெரும் கலை மேதையிடம் பாடம் படித்தேன் என்று சொல்லலாம். கண், புருவம், காது, கன்னம், உதடு இப்படி ஒவ்வொரு உறுப்புகளும் நடிச்ச அதிசயத்தை அவரிடம் கண்டு பிரமித்துப் போனேன். இந்த வயதிலும் அவரது தொழில் பக்தியும், சிரத்தையும் என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, சினிமா உலகில் அனைவருக்குமே ஓர் அற்புதமான அகராதி ஆகும்.
விபத்துக்குப் பிறகாவது சண்டைக்காட்சிகளில் இனி உஷாராக செயல்படுவீர்களா?
ஆடியன்ஸ் இப்போதெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கிறாங்க. ரியலிசம் எது, டூப் எது என்று எளிதில் கண்டுபிடிச்சிடுறாங்க. அதனால் சண்டைக்காட்சிகளில் அது இயற்கையாக அமைய வேண்டும் என்று நினைக்கும்போது, சில ரிஸ்க்குகளை எடுக்க வேண்டியிருக்கிறது. ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் இனி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டு நடிப்பேன். மீண்டும் அத்தகைய விபத்துகள் நடக்காது.
தங்களுக்கு லண்டனில் திருமணம் நடந்துவிட்டதாக ஒரு செய்தி வந்ததே..?
அது முற்றிலும் தவறான செய்தி. நடந்தது திருமண நிச்சயதார்த்தமே. திருமணம் சில ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும்.
இவ்வாண்டும் 'சினிமா எக்ஸ்பிரஸ்' விருது கிடைத்துள்ளது பற்றி...?
சினிமா எக்ஸ்பிரஸ் முதலில் எனக்கு சிறந்த புதுமுக நடிகர் விருது வழங்கியது. சென்ற ஆண்டிலும், இவ்வாண்டிலும் 'பூவே உனக்காக', 'காதலுக்கு மரியாதைக்காகவும் விருதுகள் பெற்றிருக்கிறேன். 'சினிமா எக்ஸ்பிரஸ்' விருது தேசிய விருதுக்குச் சமம் என்று சினிமா உலகத்தினர் கருதுகிறார்கள். அதை மிகப் பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.
(15, செப்டம்பர் 1998 சினிமா எக்ஸ்பிரஸ்-8, தயாள்)
Summary
On the occasion of CM Vijay's birthday... his responses in an interview given to the Cinema Express dated September 15, 1998...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உத்வேகம் அளித்த சத்யராஜ்... விஜய் நேர்காணல் -4!
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!

எனக்குள் வேலி போட அனுமதிக்க மாட்டேன்..! விஜய் நேர்காணல் -1!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



