
ஸ்பெஷல்
எனக்குள் வேலி போட அனுமதிக்க மாட்டேன்..! விஜய் நேர்காணல் -1!
முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி... சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர் அளித்த பதில்கள்...

விஜய் - படம்: சினிமா எக்ஸ்பிரஸ்.
சினிமா எக்பிரஸ் இதழுக்கு “கண்ணுக்குள் நிலவு” டப்பிங்கில் இருந்த விஜய்யோடு ஒரு நேர்காணல்...
பிரபலமானாலே தானாகவே ஒரு வேலி உருவாகி விடுகிறதே?
இந்த வேலி, வட்டம் இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம். இன்றளவும் ஒரு பொது நிகழ்ச்சியோ.. ஒரு பங்சனோ .. தனியாகப் போய் வருவதைத்தான் வழக்கமா வைச்சிருக்கேன். ஒரு படத்தை தியேட்டரில் போய்ப் பார்க்கணும்ன்னா கண்டிப்பா நான் போய் பார்த்துட்டு வருவேன். சமீபத்தில் கார்க்கில் நிதிக்காக பரபரப்பான தி.நகர் ரங்கநாதன் தெருவில் தனியாத்தான் நிதி வசூல் செய்தேன். அதேபோல நிறை - குறைகளை யார் சொன்னாலும் கேட்பேன். வெளியூர்ப் படப்பிடிப்புகளுக்குச் சென்றால் அங்குள்ள ரசிகர்களின் வீடுகளுக்குச் செல்வது முதல், அந்த ஊர் பெரியவர்கள் வரை எல்லோரிடமும் மனம் விட்டுப் பேசி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். எனக்குன்னு எப்போதுமே நான் வேலி போட்டுக்குறதில்லை.
’காதல்’ங்கிற வரைமுறையைத் தாண்டி, தமிழ் சினிமா ஜெயிக்க முடியவில்லையே?
தமிழ் சினிமா மட்டுமில்லீங்க, காதலை வச்சுத்தான் உலக சினிமாகூட ஜெயிச்சிகிட்டு இருக்கு. “டைட்டானிக்” உலகம் முழுக்க மிகப்பெரிய வெற்றி பெறுவதற்குக் காரணம், காதலின் ஆழத்தை அவ்வளவு அற்புதமாக, உயிரோட்டமாகக் காட்டியதுதான்.
உங்களுக்குன்னு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகிடுச்சு,. ரசிகர்களின் அன்புத் தொல்லையை எப்படி எடுத்துக்கிறீங்க?
எங்க அப்பா- அம்மாகிட்ட சண்டை போட்டுதான், சினிமாவுக்குள்ளேயே நான் நுழைஞ்சேன். இப்படியெல்லாம் அன்பான ரசிகர்கள் எனக்குக் கிடைச்சமைக்காக அந்தக் கடவுளுக்கும் எங்க அப்பா அம்மாவுக்கும், என்னை வைச்சுப் படமெடுத்த அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
(இன்றைய திரையுலகில் இளைய தலைமுறையின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் விஜய். சின்ன வயது. ஆனால் பெரிய வெற்றி. இந்த வெற்றி விஜய்க்குள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. இன்று வரை எந்தவித கர்வமும் பந்தாவும் இல்லாத சராசரி மனிதனாகவே இருந்து வருகிறார். “கண்ணுக்குள் நிலவு” டப்பிங்கில் இருந்த விஜய்யோடு ஒரு நேர்காணல். ஜன, 15, 2000)
Summary
An interview with Vijay for Cinema Express magazine while he was dubbing for the film Kannukkul Nilavu...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


மனைவியிடம் எதையும் மறைக்கக் கூடாது! ரசிகர்களின் கேள்விகளுக்கு விஜய் பதில்கள் - 1

Nanjil Sampath Latest Interview | விஜய் ஒரு ராஜதந்திரி | TVK | CM Vijay | Mdmk | Vaiko | Durai Vaiko |

Nanjil Sampath Interview |காங்கிரசுக்கு ஏன் கொடுத்தார் விஜய்? | TVK | CM Vijay | Congress
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


