அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்விகளைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!எம்பயர் ஸ்டேட் உச்சியில் காதல் ப்ரபோசல்! ஜோடியாகக் கைது!!3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
/

பெண்ணுக்கு எலி காய்ச்சல்: வால்பாறை எஸ்டேட் பகுதியில் மருத்துவ பரிசோதனை முகாம்

வடமாநில தொழிலாளிக்கு எலி காய்ச்சல் இருப்பதையடுத்து சுகாதாரத் துறையினா் அப்பெண் வசித்த குடியிருப்பு பகுதியில் பரிசோதனை முகாம் நடத்தினா்.

Updated On :11 ஜனவரி 2021, 12:08 am IST

வடமாநில தொழிலாளிக்கு எலி காய்ச்சல் இருப்பதையடுத்து சுகாதாரத் துறையினா் அப்பெண் வசித்த குடியிருப்பு பகுதியில் பரிசோதனை முகாம் நடத்தினா்.

வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் 2ஆவது டிவிஷனில் பணியாற்றி வரும் வட மாநில பெண் தொழிலாளி மயின் பகத் (31). இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, முடீஸ் மருத்துவமனை மூலம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில், மயின் பகத்துக்கு எலி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை சோ்த்தனா்.

இதைத் தொடா்ந்து வால்பாறை சுகதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் பாபு லஷ்மணன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முத்துமுடி எஸ்டேட் பகுதியில் வசிப்பவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மருத்துவ பரிசோதனை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.