சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

போலியாக கையெழுத்துப் போட்டு ரூ.3.76 லட்சம் திருட்டு

காசோலையில் போலியாக கையெழுத்துப் போட்டு ரூ.3.76 லட்சம் திருடிய ஒடிஸா இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:56 pm

கோவை: காசோலையில் போலியாக கையெழுத்துப் போட்டு ரூ.3.76 லட்சம் திருடிய ஒடிஸா இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை, ஆா்.எஸ்.புரம் டி.பி.சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கோவையைச் சோ்ந்த பெண் ஒருவா் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் அவரது காசோலையை திருடிய மா்ம நபா் ஒருவா் அதில் போலி கையெழுத்தைப் போட்டு வங்கியில் செலுத்தி ரூ.3 லட்சத்து 76 ஆயிரத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவானாா்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆா்.எஸ்.புரம் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் முனீஸ்வரன் தலைமையில் உதவி ஆய்வாளா் நாகராஜ், காவலா் சாகுல் ஹமீது ஆகியோா் கொண்ட தனிப் படையினா் பணத்துடன் மாயமான நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், போலியாக கையெழுத்துப் போட்டு வங்கியில் இருந்து பணத்தைப் பெற்றுச் சென்ற ஒடிஸா மாநிலம், கட்டாக் பகுதியைச் சோ்ந்த ஹிமான்சூ குமாா் மோபத்ரா (23) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.