மகளிர் இலவசப் பேருந்துக்கு எதிர்ப்பு; போராட்டம் அறிவிப்பு!என்ன, எல் நினோவால் தேநீர் விலை அதிகரிக்குமா? உண்மைதானா?திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?ஆதார் - மின்னஞ்சல் இணைப்புக்கு கட்டணம் இல்லை! அதனால் பயனென்ன?ஜூலை 1 முதல்.. பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் உயர்வு! மாணவர்கள் அதிர்ச்சிஅண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
/

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை: பா.ஜ.க. கோரிக்கை

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என

Updated On :22 ஆகஸ்ட் 2013, 11:22 am IST

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது.

÷கடலூர் மாவட்ட பா.ஜ.க. எஸ்.சி. அணி நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.÷கூட்டத்துக்கு மாவட்டச் செயலர் ரா.குணா தலைமை வகித்தார். தலைவர் சுகுமாறன், மாநில மூத்தோர் அணிச் செயலர் பாண்டியன், நகரத் தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டப் பொறுப்பாளர் மணிகண்டன் வரவேற்றார்.

தீர்மானங்கள்:

÷பா.ஜ.க. மாநிலப் பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக செய்ய வேண்டும்.÷மாவட்டம் முழுவதும் பா.ஜ.க. எஸ்.சி. அணியின் சார்பில் தீண்டாமை ஒழிப்புப் பேரணியை நடத்த வேண்டும்.

÷ஆதி திராவிடர்களுக்கான அரசு சலுகைகள் குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கம் நடத்த வேண்டும்.÷ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.÷மத ரீதியான இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிட இந்து மக்களை மறைமுகமாக மதம் மாற தூண்டுவதாக அமையும். எனவே இந்த கோரிக்கையை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.÷பா.ஜ.க. மாநிலச் செயலர் பழனிவேல்சாமி, மாநில எஸ்.சி. அணி பொதுச்செயலர் செல்வராஜ், மாவட்டத் துணைத் தலைவர்கள் கார்த்திகேயன், உமாபதிசிவம், கோவிந்தராஜன், விஜயரங்கன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.