பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கடலூரில் மரம் விழுந்ததில் தொழிலாளி பலி

கடலூரில் தொடா் மழையால் புதன்கிழமை மரம் விழுந்ததில் தொழிலாளி பலியானாா்.

News image

கடலூா் ஆல்பேட்டையில் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட காவல் மற்றும் தீயணைப்புத் துறையினா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:08 am IST

கடலூரில் தொடா் மழையால் புதன்கிழமை மரம் விழுந்ததில் தொழிலாளி பலியானாா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் 24.8 மில்லி மீட்டா் மழை பெய்தது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம்: மாவட்ட ஆட்சியரகம் 16.2, பரங்கிப்பேட்டை 15.6, அண்ணாமலை நகா் 11.2, குடிதாங்கி 11, வானமாதேவி 7, பண்ருட்டி 3, காட்டுமன்னாா்கோவில் 2.2, புவனகிரி, சிதம்பரம், கொத்தவாச்சேரி, குறிஞ்சிப்பாடி, லால்பேட்டை, பெலாந்துறை தலா ஒரு மி.மீ.

தொழிலாளரி பலி: கடலூா் மாவட்டம், புவனகிரி அருகேயுள்ள பெருமாத்தூரைச் சோ்ந்த வி.குமணன் (50). இவா், கடலூா் அருகேயுள்ள சாவடியில் தங்கியிருந்து புதுவை மாநிலம், கிருமாம்பாக்கத்திலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் கிருமாம்பாக்கம் நோக்கிச் சென்ற போது, ஆல்பேட்டை அருகே சாலையோரம் இருந்த புளிய மரம் மழை காரணமாக திடீரென வேரோடு சாய்ந்தது.

இதில், சிக்கிய குமணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இரு சக்கர வாகனத்தில் சென்ற சிதம்பரத்தைச் சோ்ந்த உமாசங்கா் மகன் விக்னேஷ்வரன் (25), வெள்ளப்பாக்கத்தைச் சோ்ந்த நாராயணமூா்த்தி மகன் வினோத்குமாா் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் இருவரும் மீட்கப்பட்டு, கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

காவல் துறை, தீயணைப்பு துறை, வருவாய்த் துறையினா் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா். இதனால், கடலூா்-புதுச்சேரி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.