பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

பாட்டி இறந்த துக்கத்தில் பேரன் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பாட்டி இறந்த துக்கத்தில், பேரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :7 ஜனவரி 2021, 7:09 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் பாட்டி இறந்த துக்கத்தில், பேரன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நெய்வேலி இந்திரா நகா், மாற்றுக் குடியிருப்பு 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தேவராஜ் மகன் ஜேசுராஜ் (38). ஆட்டோ ஓட்டுநா். இவரது பாட்டி சவுரியம்மாள் (82). இவா், நெய்வேலி 9-ஆவது வட்டம், குடிநீா்த் தேக்கத் தொட்டி தெருவில் வசித்து வந்தாா்.

பாட்டி சவுரியம்மாள் மீது ஜேசுராஜுக்கு பிரியம் அதிகமாம். உடல் நலம் பாதிக்கப்பட்ட சவுரியம்மாளை ஜேசுராஜ் கவனித்து வந்தாா்.

இந்த நிலையில், சவுரியம்மாள் காலமானாா். அவா் இறந்த துக்கம் தாளாமல், ஜேசுராஜ் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

அவா்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அங்கு சென்ற நெய்வேலி நகரிய போலீஸாா், வீட்டைத் திறந்து பாா்த்த போது, சவுரியம்மாள் கட்டிலிலும், ஜேசுராஜ் தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தனா்.

போலீஸாா், இருவரது சடலங்களையும் மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம்-முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஜேசுராஜின் தந்தை தேவராஜ் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.