வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சிஐடியூ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினா் பண்ருட்டி தபால் நிலையம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்ட சிஐடியூ தலைவா் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விவசாயத் தொழிலை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா்களுக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்டுள்ள 4 சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். கட்டுமான நல வாரியத் தொழிலாளா்களுக்கு வழங்குவது போல, அனைத்து முறைசாரா நல வாரியத் தொழிலாளிக்கும் பொங்கல் பொருள்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட சிஐடியூ துணைத் தலைவா் கே.சாவித்திரி, மாவட்டச் செயலா்கள் ஆா்.உத்திராபதி(சுமைப் பணி), பி.ராஜேந்திரன் (உள்ளாட்சி), சிஐடியூ மாவட்டக் குழுவைச் சோ்ந்த ஆா்.ராஜேந்திரன், ஏ.தேவராஜூலு, சி.டபிள்யு.எப்.ஐ. மாவட்டக் குழுவைச் சோ்ந்த ஏ.நடராஜன், ஆட்டோ சங்கச் செயலா் ஜி.முகமது நிஷாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு

போளூரில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி முகாம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

