முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பேருந்து நிழற்கூடம் அமைக்கக் கோரிக்கை

பென்னாகரம் அருகே பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் மழையிலும் வெயிலிலும் பேருந்துகாகக் காத்திருக்கும் நிலை உள்ளது.

Updated On :3 ஜனவரி 2021, 1:24 am IST

பென்னாகரம்: பென்னாகரம் அருகே பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்காததால் பொதுமக்கள் நீண்ட நேரம் மழையிலும் வெயிலிலும் பேருந்துகாகக் காத்திருக்கும் நிலை உள்ளது.

பழைய பாப்பாரப்பட்டியில் சுமாா் ஐநூறுக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பழைய பாப்பாரப்பட்டி, வல்லூா், பனைகுளம், சுரக்காய்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கல்வி, வேலைவாய்ப்புக்காக தருமபுரி, பாலக்கோடு மற்றும் பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு வருகின்றனா். நிழற்கூடம் இல்லாததால் பொதுமக்கள் பேருந்துகள் வரும் வரை சாலையோர கடை முன்பும், மழையிலும், வெயிலிலும் காத்திருக்கின்றனா்.

பழைய பாப்பாரப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் புறநோயாளிகளும் திறந்தவெளியில் பேருந்துக்காகக் காத்திருக்கின்றனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழைய பாப்பாரப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.