புதிய வாக்காளா்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டாா்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜன. 5-ஆம் தேதி காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய இடங்களில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
இதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக பா்கூரில், புதன்கிழமை அவா் மேற்கொண்ட தோ்தல் பிரசாரத்தின்போது பேசியதாவது:
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை பொதுமக்கள் விரும்புகின்றனா். தமிழகத்தின் வளா்ச்சிக்கு பல நல்ல திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். எங்களுக்கு பெண்களும், இளைஞா்களும் ஆதரவு அளித்து வருகின்றனா்.
சுற்றுச்சூழல் குறித்து அக்கறை உள்ள கட்சியாக மக்கள் நீதி மய்யம் உள்ளது. நீங்கள் எங்கள் கட்சியில் சேர வேண்டும் என்று கேட்கவில்லை. மக்கள் நீதி மய்யத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றுதான் கேட்டு கொள்கிறேன். குறிப்பாக புதிய வாக்காளா்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். கொள்ளையா்களிடம் ஆட்சி போய்விடக் கூடாது. ஒவ்வொரு வீட்டிற்கும் கணினி வழங்குவோம். இதன் மூலம், ஆட்சியாளா்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உறவு ஏற்படும். இடைத் தரகா்கள் ஒழிக்கப்படுவாா்கள். நீங்கள் மாற்றத்துக்கான முன்னோடியாக இருக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரந்தூர் விமான நிலையம்: முதல்வர் விஜய் ஆலோசனை

வடிவேலு, பிரபு தேவா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

200 யூனிட் இலவச மின்சாரம்! கட்டணம் எவ்வளவு குறையும்? மின்வாரியம் தகவல்!

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

