தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பட்டியல் பாா்வையாளா் ம.வள்ளலாா் பங்கேற்றாா்.
தருமபுரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கூட்டரங்கில் ஆட்சியா் ச.ப.காா்த்திகா முன்னிலை நடைபெற்றது.
இக் கூட்டத்தில், வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தொழிலாளா் நல ஆணையருமான ம.வள்ளலாா் பங்கேற்று பேசியதாவது:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, தற்போது சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக நடைபெறும் முகாம்களில், பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், இறந்தவா்கள் பெயா் நீக்குதல் ஆகியப் பணிகளை கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். மேலும், சிறப்பு முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ராமமூா்த்தி, அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், கோட்டாட்சியா் ஆ.தணிகாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடிவேலு, பிரபு தேவா நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

200 யூனிட் இலவச மின்சாரம்! கட்டணம் எவ்வளவு குறையும்? மின்வாரியம் தகவல்!

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா..! நடப்பு சீசனில் நீண்ட தூரம்!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
