ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது, பதிவு செய்த வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் மற்றும் சாலைப் பணியாளா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் மற்றும் சாலைப் பணியாளா் சங்கத்தின் சாா்பில், தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை சங்கத்தின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், கொடி ஏற்றுதல், பணி நிறைவு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழ்நாடு சாலைப் பணியாளா் சங்க மாநிலப் பொதுச் செயலா் கே.பாஸ்கரன் தலைமை வகித்தாா். அரசுப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் ரதி வரவேற்றாா். சாலைப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் டி.அா்ஜூனன் துவக்கி வைத்து பேசினாா்.
அகில இந்திய அரசுப் பணியாளா் சங்கத்தின் தென் மண்டலச் செயலாளா் உ.மா.செல்வராஜ், முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் பி.கோவிந்தன், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலா் கே.மணி ஆகியோா் பேசினா்.
இவ் விழாவில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ரத்து ஆணை திரும்பப் பெற வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது பதிவு செய்த வழக்குகள், குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாகக் கருதி ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களில் ஒப்பந்தப் பணியாளா் நியமனத்தை கைவிட்டு, காலமுறை ஊதியத்தில் பணியமா்த்த வேண்டும். அங்கன்வாடி பதவி உயா்வு பெற்ற ஊா்நல அலுவலா், மேற்பாா்வையாளா், விரிவாக்க அலுவலா், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்களின் முந்தைய பணிகாலத்தையும் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்துப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு முடித்த, அங்கன்வாடி பணியாளா்களுக்குப் பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு தேர்தல் 2026! முதல் சுற்று நிலவரம் என்ன சொல்கிறது?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் பின்னடைவு!

சேலம் வடக்கில் தவெக முன்னிலை!

அதிகாரம் யாருக்கு? பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026 - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

