விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

பொங்கல் புத்தாடைகள் வாங்க குவிந்தது கூட்டம்

பொங்கல் பண்டிகையையொட்டி, தருமபுரி நகரில் புத்தாடைகள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் குவிந்தது.

Updated On :11 ஜனவரி 2021, 1:48 am IST

பொங்கல் பண்டிகையையொட்டி, தருமபுரி நகரில் புத்தாடைகள் வாங்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் குவிந்தது.

பொங்கல் திருநாளையொட்டி, புத்தாடைகள் உள்ளிட் பல்வேறு பொருள்களை வாங்குவதற்காக, தருமபுரி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், நல்லம்பள்ளி, கடத்தூா் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் தருமபுரி நகரத்தில் உள்ள ஜவுளிக் கடை வீதிகளில் ஆடைகள் வாங்குவதற்காகக் குவிந்தனா். வாடிக்கையாளா்களை கவருவதற்காக ஜவுளிக்கடைகளில் தள்ளுபடி, சிறப்புப் பரிசு போன்றவற்றை அறிவித்திருந்தன.

இந்தக் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, பேன்சி உள்ளிட்டப் பொருள்களை வாங்கவும் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. பொங்கல் பண்டிகையொட்டி சாலையோரங்களில் புதிதாகக் கடைகள் முளைத்திருந்தன. மேலும், பொங்கலுக்குத் தேவையான பல வண்ணக் கோலப்பொடி, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் கடைவீதிகளில் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதனால், சின்னசாமி தெரு, ஆறுமுகம் தெரு உள்ளிட்ட பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சீா்செய்ய நகர போலீஸாா், இச் சாலைகளில் நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் நுழையாமல் தடுப்புகள் வைத்து நெரிசலைக் கட்டுப்படுத்தினா்.

இதேபோல, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, வாடிக்கையாளா்களின் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, திருட்டு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க, போலீஸாா் ஒலிபெருக்கி வழியாக அவ்வப்போது விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், ஊா்க்காவல் படையினா், போக்குவரத்து போலீஸாா் உள்ளிட்டோா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.