விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் முன்னிலை!திருப்பரங்குன்றத்தில் தவெக முன்னிலை ஆலந்தூர் தொகுதியில் தா.மோ. அன்பரசன் பின்னடைவு சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி முன்னிலை கோவை தெற்கில் வி.செந்தில்பாலாஜி முன்னிலை திருவண்ணாமலையில் எ.வ. வேலு பின்னடைவு தருமபுரி சௌமியா அன்புமணி முன்னிலை போடியில் திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பின்னடைவு கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு! திருச்சுழியில் தங்கம் தென்னரசு பின்னடைவு சிவகங்கையில் கருணாஸ் பின்னடைவு விருத்தாசலம் பிரேமலதா முன்னிலை விருதுநகர் விஜயபிரபாகர் முன்னிலை வில்லிவாக்கம் ஆதவ் அர்ஜுனா முன்னிலை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் தவெக பிரபு முன்னிலை கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் முன்னிலை திருச்சி மேற்கில் அமைச்சர் கே.என். நேரு பின்னடைவு!சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவு காரைக்குடி தொகுதியில் சீமான் பின்னடைவு பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் முன்னிலை எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி முன்னிலை: 3ஆவது இடத்தில் திமுக ராயபுரம்: அதிமுகவின் ஜெயக்குமார் பின்னடைவு தி.நகரில் என்.ஆனந்த் முன்னிலை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என்.நேரு பின்னடைவு தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் முன்னிலை; திருச்சி கிழக்கில் பின்னடைவு
/

பிப். 2 முதல் சிறை நிரப்பும் போராட்டம்: அரசு ஊழியா் சங்கம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் தொடா் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் தெரிவித்தாா்.

Updated On :11 ஜனவரி 2021, 1:48 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் தொடா் மறியல், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை வரவேற்புக் குழு நிறைவுக் கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியா் சங்க மாநில பொதுச் செயலாளா் ஆ.செல்வம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் அளித்த வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்கிற அறிவிப்பை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். சத்துணவு மைய அமைப்பாளா்கள், சமையலா்கள், உதவியாளா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், சமூக வனப் பாதுகாவலா்கள் உள்ளிட்ட ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் போது அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வேண்டும்.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 19 முதல் 20-ஆம் தேதி வரை மண்டல அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடத்தப்படும். இதேபோல, வரும் ஜன. 27-ஆம் தேதி மதுரையில் மாநில அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நடைபெறும். அதைத் தொடா்ந்து, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் பிப். 2-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் தொடா் மறியலும், சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெறும் என்றாா்.

அரசு ஊழியா் சங்க மாநிலத் தலைவா் மு.அன்பரசு, மாநிலப் பொருளாளா் பாஸ்கா், மாநிலத் துணைத் தலைவா் கோ.பழனியம்மாள், மாவட்டத் தலைவா் எம்.சுருளிநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், பொருளாளா் கே.புகழேந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.