எழுத்தாளராக அடையாளம் காட்டியது தினமணி

அன்று காலை தான் இந்திய மாதர் தேசிய சங்கத்திலிருந்து திருமதி பத்மாவதி அவர்கள் என்னை ஒரு கூட்டத்திற்கு அழைக்க வந்தார். நான் அவருக்கு அறிமுகம் ஆனதே தினமணி மூலமாகத்தான் என்று அழுத்தமாக சொன்னார்.
பிரபா ஸ்ரீ தேவன்
பிரபா ஸ்ரீ தேவன்
Updated on
1 min read

அன்று காலை தான் இந்திய மாதர் தேசிய சங்கத்திலிருந்து திருமதி பத்மாவதி அவர்கள் என்னை ஒரு கூட்டத்திற்கு அழைக்க வந்தார். நான் அவருக்கு அறிமுகம் ஆனதே தினமணி மூலமாகத்தான் என்று அழுத்தமாக சொன்னார்.

அன்று மாலை தினமணி ஆசிரியர் என்னை "தினமணியும் நானும்' என்ற தலைப்பில் ஒரு வாழ்த்து செய்தி எழுதி தரும்படி கேட்டார். என்ன ஒரு தற்செயலான பொருத்தம்!

நான் தமிழில் எழுத முடியும் என்று எனக்கே தெரிவித்தது தினமணி தான், தமிழ் வாசகர்களுக்கு என்னை தமிழ் கட்டுரையாளராக அடையாளம் காட்டியது தினமணிதான். இதுவே தினமணியும் நானும், இதுவே தினமணிக்கும் எனக்கும் இருக்கும் பந்தம்.

தினமணியின் நடுப்பக்கங்கள் ரொம்ப பிடிக்கும். பத்திரிகை தர்மத்துக்கு மக்கள் தான் முதலாளி. ஒவ்வொரு பத்திரிகையும் மக்களுக்காக நடத்தப்படும் நிறுவனம் தான். பத்திரிகை எனும் நிறுவனத்தின் சங்ககுறிப்பு நான்கு, அவை நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், இந்த நான்கைத் தாண்டி அது செயல்பட முடியாது, செயல்படவும் கூடாது.

இரும்பு போல் இல்லாமல் இப்பொழுது உண்மையே மெழுகு போல் உலகெங்கும் வளைகிறது. அதனால் இன்று இந்த நான்கு சங்க குறிப்பின் முக்கியத்துவம் விசுவரூபம் எடுக்கிறது. தினமணி அதை உறுதியாக தூக்கிப்பிடிப்பாள் என்றும் போல், எங்கேயும், எப்போதும்.

இந்த 85-ஆவது ஆண்டு நிறைவில் என் வணக்கம் என் வாழ்த்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com