வருங்கால நட்சத்திரங்கள்

சிலர் சொல்ல விரும்புவதை அடுக்கடுக்காக வார்த்தைகளில் வர்ணித்துச் சொல்லுவார்கள். சிலர் அதையே சுலபமாக முகபாவத்தில் காட்டிவிடுவார்கள். இந்த இரண்டையும் திறம்பட செய்யக்கூடியவனே
சிவாஜி கணேசன்
சிவாஜி கணேசன்
Updated on
1 min read

சிலர் சொல்ல விரும்புவதை அடுக்கடுக்காக வார்த்தைகளில் வர்ணித்துச் சொல்லுவார்கள். சிலர் அதையே சுலபமாக முகபாவத்தில் காட்டிவிடுவார்கள். இந்த இரண்டையும் திறம்பட செய்யக்கூடியவனே நல்ல நடிகன்.

வார்த்தைகளால் வர்ணிக்க மட்டும் தெரிந்து கொண்டு முகபாவம் காட்டமுடியாமல் திண்டாடினால் அதை நடிப்பென்று சொல்ல முடியாது. அதே போல முகபாவம் மட்டும் காட்டத் தெரிந்து சரியாகப் பேசத் தெரியாவிட்டாலும் அவரை நல்ல பயிற்சி பெற்ற நடிகர் என்று ஒப்புக்கொள்ள முடியாது.

"வெட்கம், வெட்கம்'' என்று கூறுகிறார்களே, அது நடிகனுக்கு இருக்கக் கூடாது. எந்தவிதப் பாத்திரத்தையும் வெட்கப்படாமல் ஏற்று நடிக்க வேண்டும்.

என் அனுபவத்தில் தெரிந்தவரை நாடக மேடை தான் புது முகங்களுக்கேற்ற பயிற்சிக்கூடம்.

பயிற்சி பெறும் நடிகர்கள் மற்ற நடிகர்களின் நடிப்பைப் பார்க்க வேண்டும். யார் யாரிடத்தில் எவை சிறப்பான அம்சங்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். நாம் நடிக்கும்போது நமக்கே அது திருப்திகரமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதோடு பலரிடம் நடித்தும் காட்ட வேண்டும்.

அப்போதுதான் நல்ல பயிற்சியும் அனுபவமும் உண்டாகும். வருங்காலத்தில் எனக்கு வாரிசாக விளங்கக்கூடிய இரண்டு கதாநாயகர்கள் - கதாநாயகிகளை உருவாக்க நான் திட்டமிட்டுள்ளேன்.

நான் உருவாக்கும் நான்கு பேர்கள் சினிமா தொழிலில் இருக்க வேண்டும். அவர்கள் சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்பட்டு, கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடிக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும்.

அவர்கள் சிறந்த முறையில் பயிற்சியளிக்கப்பட்டு, கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து உணர்ச்சிகரமாக நடிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். நன்றாக நடிக்கக் கூடியவர்கள் அழகில்லாமலும் இருக்கக் கூடாது. என்னால் உருவாக்கப்படும் வருங்கால நட்சத்திரங்கள் இம்மாதிரி எல்லா விதத்திலும் சிறப்பாக விளங்கவேண்டும் என்பது என் ஆசை.

நான் அவர்கள் யார் என்பதை இப்போது அறிவிக்கும் நிலையில் இல்லை. இன்னும் அவர்களை நான் தெரிந்திருக்கவில்லை. விரைவில் நல்ல நான்கு கலைஞர்களைத் தெரிந்தெடுத்து, பயிற்சியளிக்கப் போகிறேன்.

7.11.1961 தினமணி தீபாவளி மலரில் வெளிவந்த நடிகர் சிவாஜியின் சிறப்புக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com