கண்டது
(குமாரபாளையம் தேநீர் கடை ஒன்றில்)
நீ இந்துவாக இரு
நீ முஸ்லிமாக இரு
நீ கிறிஸ்துவராக இரு
ஆனால்,
மனிதனாக இருக்க மட்டும்
மறந்துவிடாதே.
மு.நடராஜன், திருப்பூர்-7.
(மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் கண்ட அறிவிப்பு)
"எங்களின் பணியாளர்களுக்கு இனாம் வழங்கி அவர்களின் சேவையை இழிவுபடுத்தாதீர்கள்.'
- மேலாளர்
ஜி.ராஜா, விருதுநகர்.
(சின்னப்பள்ளத்தூர் - பென்னாகரம் பள்ளி சுவரில்)
சஉஇஉநநஐபவ ஐந பஏஉ ஙஞபஏஉத ஞஊ ஐசயஉசபஐஞச
மா.பழனி, கூத்தப்பாடி.
(மதுரை கீழ ஆவணி மூல வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில்)
நீங்கள் யாருக்காகவும் மாற
முயற்சி செய்யாதீர்கள்.
அப்படி மாற நினைத்தால்,
ஒவ்வொரு நபர்களுக்காகவும், நீங்கள் மாற வேண்டியிருக்கும்.
தமிழன், மதுரை-16.
(சென்னை கொளத்தூரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
விருந்தாளி
கோ.மகேசன், சென்னை-68.
கேட்டது
(காங்கேயம் மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கணவனும் மனைவியும்)
""ஏங்க... காது கேக்குற மிஷின் உங்க அம்மாவுக்கு வாங்கணும்னு டாக்டர் சொன்னாரில்ல... எவ்வளவு செலவானாலும் வாங்கிக் கொடுத்துடணும்ங்க...''
""எங்க அம்மா மேல ஒனக்கு இவ்வளவு ப்ரியமா? ஆச்சரியமா இருக்கே''
""நான் எவ்வளவு சத்தமாத் திட்டினாலும் அவுங்க காதில கேக்கமாட்டேங்குது. அதனால என்ன சொன்னாலும் சிரிச்சுக்கிட்டே இருக்காங்க...''
""அடிப்பாவி... நீ திருந்தவே மாட்டே..''
எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.
(வாணியம்பாடி முடி திருத்தகத்தில்)
முடிவெட்ட வந்த வழுக்கைத் தலையர்: ஏம்ப்பா... போன தடவை என் தலைமுடியை கட் பண்ணியது நீ தானே?
முடி திருத்துபவர் (அவரின் தலையைக் கூர்ந்து பார்த்துவிட்டு): இல்லே சார்... நான் வேலைக்குச் சேர்ந்து ஒரு வருஷம்தான் ஆகுது.
ஏ.ரிஸ்வானா, வாணியம்பாடி.
(பந்தநல்லூர் கடை வீதியில் இரு நண்பர்கள்)
""மச்சான் நாட்டு மருந்து சாப்பிடலாமா? இங்கிலீஷ் மருந்து சாப்பிடலாமா?''
""நாட்டுச் சரக்கு கலப்பா இருக்கும். இங்கிலீஷ் சரக்கே சாப்பிடுவோம்டா''
""அட பாவி, மஞ்சள் காமாலைக்கு என்ன மருந்து சாப்பிடலாம்னு கேட்டா... நீ வேற எதையோ சொல்றயே''
வீர.செல்வம், பந்தநல்லூர்.
(வேலூர் பிள்ளையார் கோயில் தெருவில் ஒரு வீட்டில்)
கணவன்: என்னங்க... நாளைக்கு மாப்பிள்ளை வர்றாராம்... அவருக்கு கறி எடுக்கவா? மீன் வாங்கவா?
மனைவி: கறியும் மீனும் வாங்கி நீ ஆக்கிப் போட்டால், நம்மகிட்ட பணம் கறக்காமல், மனுஷன் நகரமாட்டாரு... அதனால ரசமும், துவையலும் மட்டும் பண்ணு போதும்.
வெ.ராம்குமார், வேலூர்.
எஸ்எம்எஸ்
நண்பன் அருகில் இருந்தும்
பேச முடியவில்லை.
உரிமை இருந்தும்
கேட்க முடியவில்லை.
ஏனென்றால்,
அது எக்ஸôம் ஹால்...
என்ன கொடுமை சார் இது?
எஸ்.அர்ஷத் பயாஸ், குடியாத்தம்.
உதிர்ந்த முத்து
நண்பன் தவறு செய்தால்
நண்பனை ஆதரியுங்கள்.
ஆனால்...
அவர் செய்த தவறை ஆதரிக்காதீர்கள்.
நாளை
நண்பர் இருப்பார்
ஆனால்... அவர் செய்த தவறு இருக்காது.
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
அப்படீங்களா!
ஒட்டகத்தின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.
எடையோ 250 கிலோவிலிருந்து 680 கிலோ வரை!
நீரில்லாமல் 8 நாட்கள் வரை ஒட்டகம் உயிர் வாழும்.
மனிதனின், பிற விலங்குகளின் உடலில் இருந்து 12% நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலே சங்குதான்.
ஆனால் ஒட்டகத்தின் உடலிலிருந்து 40% நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலும், எந்தப் பாதிப்பும் இல்லாமல், எங்கேயாவது புல் கிடைக்கிறதா? என்று தேடிக் கொண்டிருக்கும்.
நிலா, சென்னை-57
மைக்ரோ கதை
ஒருவர் ஊரெல்லாம் சுற்றிவிட்டு, மிகுந்த அலுப்புடன் போய் ஓர் உணவகத்துக்குள் நுழைந்தார். முகம் கழுவிவிட்டு "அப்பாடா' என்றவாறே வந்தார்.
அவரைப் பார்த்ததும் சர்வர் வந்து, ""உங்களுக்கு என்ன வேணும்?'' என்று கேட்டார்.
""எனக்கு ரெண்டு தோசை வேணும். கொஞ்சம் அன்பான வார்த்தைகள் வேணும்'' என்றார். சர்வர் இவரை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு உள்ளே போனார். அடுத்த நிமிடமே தோசையுடன் வந்துவிட்டார்.
அவர், ""பரவாயில்லையே. ரொம்ப அலைந்து திரிந்து ரொம்பப் பசியோடு வந்தேன். உடனே தோசை கொண்டுட்டு வந்துட்டீங்க. இதைச் சாப்பிட்டாத்தான் உயிர் வரும்'' என்றார். சர்வர் முக மலர்ச்சியோடு அவரைப் பார்த்தார்.
""நான் அன்பான வார்த்தை கேட்டேனே?... அது எங்கே?'' என்று அவர் கேட்டார்.
சர்வர் சொன்னார்: ""இந்தத் தோசையைச் சாப்பிடாதீங்க. இது புளிச்சுப் போன பழைய மாவுல செஞ்சது''
மு.இளங்கோவன், மன்னார்குடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

நாமக்கல் To கரூர்! விஜய் அளித்த விளக்கம்! | TVK | Karur

கீப்பிங் பயிற்சியில் எம்.எஸ். தோனி..! மும்பைக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா?

சொல்லப் போனால்... ரசிக வெறியும் அரசியல்மயமும்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


