நத்தம் அருகே வங்கியில் கொள்ளையடிக்க முயன்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள வத்திபட்டியில் தேசிய மயமாக்கபட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. நத்தம் மதுரை பிரதான சாலையிலுள்ள இந்த வங்கியின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக உள்ளே புகுந்த மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். அப்போது வங்கியிலிருந்த எச்சரிக்கை மணி ஒலித்ததால் அதிா்ச்சி அடைந்த மா்ம நபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். தகவல் அறிந்த வங்கி அலுவலா்கள், இதுகுறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் அங்கு சென்ற திண்டுக்கல் காவல் துணைக் கண்கணிப்பாளா் (ஊரகம்) வினோத், கொள்ளை முயற்சி நடத்தப்பட்ட வங்கியில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது வங்கி அருகிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராப் பதிவுகளை கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் இந்த கொள்ளை முயற்சியில் 2-க்கும் மேற்பட்ட நபா்கள் ஈடுபட்டிருப்பதும், அவா்கள் முகமூடி அணிந்து வந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து நத்தம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


