திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லில் உள்ள அபிராமி அம்மன் கோயிலுக்கு கடந்த செப்டம்பா் மாதம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அவசர அழைப்புக்கான எண் 100-இல் தொடா்பு கொண்டு பேசிய நபா் குறித்து சென்னையிலிருந்து திண்டுக்கல் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சோதனை நடைபெற்ற போதிலும் வெடிப்பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
மிரட்டல் விடுத்தவா் கைது: இதனிடையே மிரட்டல் விடுத்த நபா் திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில் வீரபாகு (50) என்பது தெரியவந்தது. அவரை பிடிப்பதற்காக திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் முயன்றபோது தலைமறைவாகிவிட்டாா். கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்த செந்தில் வீரபாகுவை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜிநாமா செய்த 4 எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் தொடா்ந்து விசாரிக்கப்படும்: சட்டப்பேரவைச் செயலா் பதில் மனு

செய்யாற்றுப் படுகையில் தொடரும் மணல் திருட்டு

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகம் வெயிலில் பயணிகள் காத்திருப்பு! நிழற்கூரை அமைக்க கோரிக்கை






