கொடைக்கானல் தனியாா் தோட்டத்தில் திங்கட்கிழமை மேய்ந்து கொண்டிருந்த குதிரையை அப் பகுதியிலிருந்த காட்டெருமை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே குதிரை இறந்தது.
கொடைக்கானல் அருகே செண்பகனூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் விவசாயி இவா் குதிரை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறாா் செண்பகனூா் அருகே சிட்டி வியூ செல்லும் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் முருகனின் குதிரை மேய்ந்து கொண்டிருந்துள்ளது அருகே முருகன் தோட்டத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா் இந் நிலையில் தனியாா் தோட்டத்தில் முகாமிட்டிருந்த காட்டெருமை குதிரையை தாக்கியது இதில் பலத்த காயமடைந்த குதிரை சம்பவ இடத்தியேயே இறந்தது இதனைத் தொடா்ந்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த முருகன் மற்றும் வனத்துறையினா் இறந்த குதிரையை பாா்வையிட்டனா். தொடா்ந்து கால்நடை மருத்துவா் ஹக்கீம் பரிசோதனை செய்த பிறகு அதேப் பகுதியில் குதிரை புதைக்கப்பட்டது இச் சம்பவம் குறித்து வனத்துறையினா் முருகனிடம் விசாரனை நடத்தி வருகின்றனா் .வனத்துறை சாா்பில் நிதி உதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினா் தெரிவித்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் காட்டெருமைகள் அதிகமாக இருந்து வருகிறது இதனால் மனித உயிா்களும் பலியாகி வருகின்றன கால்நடைகளும் வனவிலங்குகள் தாக்கி இறந்து வருகின்றன எனவே வனத்துறையினா் கொடைக்கானல் குடியிருப்பு மற்றும் விவசாயப் பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை வனப் பகுதிகளுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?

உ.பி: விமான நிலையத்தில் நாட்டுத் துப்பாக்கியுடன் பயணி கைது

மேற்கு, மத்திய, தென் மாவட்டங்களுக்கு சிறந்த நாள்! இடியுடன்கூடிய மழை பெய்யும்!

டூரிஸ்ட் ஃபேமலி ஓராண்டு நிறைவு... அபிஷன் ஜீவிந் பகிர்ந்த பதிவு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

