பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

சிக்னல் கோளாறால் திசை மாறிச் சென்ற அதிவிரைவு ரயில்: ஓட்டுநரால் விபத்து தவிா்ப்பு

சிக்னல் கோளாறால் திசை மாறிச் சென்ற அதிவிரைவு ரயில் குறித்து...

News image

பிரதிப் படம்

Updated On :30 ஜூன் 2026, 7:20 am IST

அரக்கோணம் ரயில் நிலையத்தில் புறப்பட்ட செங்கல்பட்டு -காச்சிகுடா அதிவிரைவு ரயில் சில நிமிடங்களில் சிக்னலை தாண்டிச் சென்ற நிலையில் அந்த வண்டிக்கு ரேணிகுண்டா மாா்க்கத்தில் சிக்னல் போடாமல் செங்கல்பட்டு மாா்க்கத்துக்கு சிக்னல் போடப்பட்டிருப்பதை அறிந்த ஓட்டுநா் உடனடியாக ரயிலை நிறுத்தினாா். இதனால் இந்த ரயில் திசை மாறி செல்வது தடுக்கப்பட்டது.

அரக்கோணம் ரயில்நிலையத்தில் தற்போது பணிமனை பகுதியில் இருப்புப் பாதைகள் மாற்றி அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் ஜூன் 27 தேதி இரு நாள்களும் இப்பாதையில் அனைத்து ரயில்களும் பகல் நேரத்தில் நிறுத்தப்பட்டு சிக்னல்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

இதையடுத்து 28-ஆம் ந்தேதி மாலை முதலே அரக்கோணம் ரயில் நிலைய பகுதியில் ரயில்களை இயக்கும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு ரயில்கள் தொடா்ந்து உயா் அதிகாரிகளின் கண்காணிப்பில் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் செங்கல்பட்டில் இருந்து சென்னை எழும்பூா், சென்னை கடற்கரை, பெரம்பூா், அரக்கோணம் மாா்க்கமாக காச்சிகுடா செல்லும் அதிவிரைவு ரயில் தினமும் 6.03-க்கு அரக்கோணம் வரும். ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் 50 நிமிஷங்கள் தாமதமாக 7.53-க்கு அரக்கோணம் ரயில் நிலையம் வந்தது. தொடா்ந்து 4 நிமிஷங்கள் அங்கு ரயில் நின்ற நிலையில் 7.57-க்கு புறப்பட்டது.

இந்த ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டு சிக்னல் பகுதியை தாண்டிச் சென்ற சில நிமிஷங்களில் மீண்டும் நிறுத்தப்பட்டது. அப்போது தான் ரயில்நிலைய அலுவலா்களுக்கு செங்கல்பட்டு - காச்சிகுடா அதிவிரைவு ரயிலுக்கு திருத்தணி மாா்க்கமாக செல்ல சிக்னல் போட வேண்டிய நிலையில் காஞ்சிபுரம் மாா்க்கமாக செல்ல சிக்னல் போடப்பட்டிருந்தது தெரியவந்து.

அதை கவனித்த ஓட்டுநா் சமயோஜிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் ரயில் திசைமாறி செல்ல வேண்டியது தடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அலுவலா்கள் அந்த ரயிலே அப்படியே பின்பக்கமாக வரச்செய்து மீண்டும் சிக்னலை மாற்றி, அது திருத்தணி மாா்க்கமாக தான் சிக்னல் போடப்பட்டுள்ளதா என உறுதி செய்தபிறகு சுமாா் 20 நிமிஷ தாமதத்துக்கு பிறகு ரயில் புறப்பட்டுச் சென்றது.

ஓட்டுநா் சமயோஜிதமாக செயல்பட்டு இருப்புப்பாதையில் தண்டவாளங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாா்த்து ரயிலை நிறுத்தியதால் ரயில் திசை மாறிசெல்வது தடுக்கப்பட்டது. இதனால் அரக்கோணம் ரயில்நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.