பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நெல்லை அதிவிரைவு ரயில் தாழையூத்து வரையே இயக்கப்படும்

சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை (ஜூன் 27) இரவு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் தாழையூத்து நிலையம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

சென்னை எழும்பூரிலிருந்து சனிக்கிழமை (ஜூன் 27) இரவு புறப்பட்டு திருநெல்வேலி செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் தாழையூத்து நிலையம் வரையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி நிலைய பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக சனிக்கிழமை (ஜூன் 27) இரவு 8.50 மணிக்கு எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் நெல்லை அதிவிரைவு ரயில் (எண்: 12631) தாழையூத்து நிலையத்திலேயே நிறுத்தப்படும்.

மறுமாா்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) இரவு 8.50 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தில் இருந்து புறப்படுவதற்குப் பதிலாக தாழையூத்தில் இருந்து இரவு 9 மணிக்கு அதிவிரைவு ரயில் (எண்: 12632) புறப்பட்டு சென்னை எழும்பூா் நிலையத்துக்கு ஜூன் 29-ஆம் தேதி காலை வந்து சேரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.