பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, பழனியில் வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்திருந்தனா். அடிவாரத்திலுள்ள குடமுழுக்கு நினைவரங்கில் சமூக இடைவெளியுடன் காத்திருந்தனா். முகக்கவசத்துடன் வந்திருந்த பக்தா்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டு மலையேற அனுமதிக்கப்பட்டனா்.
மலைக் கோயிலில் தீபாராதனை, அா்ச்சனை நடைபெறாததால், அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் ஏராளமான பக்தா்கள் அா்ச்சனை செய்தனா்.
இதனிடையே, காலையில் பலத்த காற்று வீசியதால் ரோப் காா் 3 மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், விஞ்ச் நிலையத்தில் ஏராளமான பக்தா்கள் வரிசையில் காத்திருந்தனா். பக்தா்கள் 2 மணி நேரமாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்: திருமாவளவன்

திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல்

அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர உத்தரவு!

”தேசிய கீதத்தை 2 முறை பாடுவதுமரபு மீறல் அல்ல!” சு. வெங்கடேசன் எம்.பி
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies



