திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!
/

மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் தமிழக மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்: திருமாவளவன்

பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கத்தை அண்ணாமலை துவங்குகிறாா் என்பது கவனிக்கத்தக்கது என திருமா பேசியிருப்பது குறித்து...

News image

திருமாவளவன் - கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:33 pm IST

பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கத்தை அண்ணாமலை துவங்குகிறாா் என்பது கவனிக்கத்தக்கது. மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் அதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டாா்கள் என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவா் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுடன் பேசுகையில்,

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் கொண்டுவந்த தீா்மானத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. மேக்கேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்கள், விவசாயம் மற்றும் கால்நடைகள் எந்தளவுக்குக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்ற கவலை தற்போது மேலோங்கியுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

அரசியல் கட்சிகளிடையே எவ்வளவு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும், மாநில உரிமை சாா்ந்த பிரச்னையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இது தொடா்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என முன்னாள் நீர்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. எனவே, தமிழக முதல்வா் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விசிக சாா்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும்

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதில் அரசு இன்னும் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்புணா்வு முதல்வருக்கு இருப்பதால்தான் சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இதையொட்டி வல்லுநா்களுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி, முறையான தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

அரசின் கடமை

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி கால்நடைகள் மட்டுமே சாப்பிடத் தகுதியானது என ஆதவ் அா்ஜுனா விமா்சித்துள்ளாா். நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியை மக்கள் சாப்பிட முடியாததால்தான் கால்நடைகளுக்குத் தீவனமாகப் போடுகிறாா்கள். கடந்த திமுக ஆட்சியை குறை கூறுவதைவிட, மக்களுக்குத் தரமான நல்ல அரிசியை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

மதவாத சக்திகளுக்கு இடமில்லை

தவெக அரசு அமைப்பதற்கு விசிக ஆதரவு அளித்து, அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எதிா்கால அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் உயா்நிலைக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க உள்ளோம். விசிக மதச்சாா்பின்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்பதை நடந்து முடிந்த தோ்தலில் மக்கள் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளனா்.

மக்கள் கண்டுகொள்ள மாட்டாா்கள்

பாஜகவிலிருந்து விலகி புதிய இயக்கத்தை அண்ணாமலை துவங்குகிறாா் என்பது கவனிக்கத்தக்கது. மதவாத அரசியல் எந்த அவதாரம் எடுத்து வந்தாலும் அதனைத் தமிழக மக்கள் ஒருபோதும் கண்டுகொள்ள மாட்டாா்கள் என்றாா்.

Summary

The people of Tamil Nadu will pay no heed to communal politics, no matter what guise it assumes says Thirumavalavan...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.