மக் கள் தொ கைப் பெருக் க மா னது சீனா - இந் தியா இரு நாடு க ளுமே எதிர் கொள் ளும் மிகப் பெரிய பிரச்னை என் றா லும், பிரச் னை யின் தீவி ரம் இரு நாடு க ளுக் கும் சம மா னது அல்ல. அடிப் ப டை யி லேயே மிகப் பெ ரிய நிலப் ப ரப் பைக் கொண்ட நாடு சீனா. இந் தி யா வின் நிலப் ப ரப்பு - வளங் கள் - மக் கள் தொகை அடர்த் தி யு டன் சீனா வின் நிலப் ப ரப்பு - வளங் கள் - மக் கள் தொகை அடர்த் தியை ஒப் பிட் டால் பிரச் னை யின் தீவி ரம் சீனர் க ளு டன் நமக் குப் பல மடங்கு அதி கம் என் பதை எளி மை யா கப் புரிந் து கொள் ள லாம். இந்த விஷ யத் தில் மிக முக் கி ய மான முடிவை எடுக்க வேண் டிய கால கட் டத் தில் நாம் இருக் கி றோம்.
ஆனால், சீனர் கள் தான் பிரச் னை யைப் புரிந்து தீவி ர மா கச் செயல் ப டு கி றார் கள். மக் கள் தொ கைப் பெருக் கத் தைக் கட் டுப் ப டுத் து வ தில் மட் டு மல்ல; உணவு உற் பத் தி யைப் பெருக் கு வ தி லும். தீவிர சட்ட அம லாக் கம் மற் றும் கடு மை யான தண் டனை ஆகி ய வற் றின் மூலம் மக் கள் தொ கைப் பெருக் கத் தைக் கட் டுப் ப டுத் தி வ ரும் சீன அரசு, (மக் கள் தொகை வளர்ச்சி விகி தம் இந் தி யா வில் 1.41%; சீனா வில் 0.66%), நவீன வேளாண் சாகு ப டிக்கு மாறி ய தன் மூலம் உணவு உற் பத் தி யைப் பெருக் கி வ ரு கி றது (ஒரு ஹெக் டேர் தானிய விளைச் சல் இந் தி யா வில் 2,203 கிலோ; சீனா வில் 10,500 கிலோ) .
இந்த இரு விஷ யங் க ளி லுமே சீன பாணியை இந் தி யா வில் கடைப் பி டிக்க முடி யாது. ஆனால், நமக்கு என்று ஒரு பாணி யில் இந்த இரு விஷ யங் க ளை யும் கட் டா யம் நாம் கவ னித் தாக வேண் டும். எப் படி? மூன்று வழி கள் இருக் கின் றன.
இந் தி யா வில் மக் கள் தொ கைப் பெருக் கத் தைக் கட் டுப் ப டுத்த அரசு உறு தி யான சட்ட திட் டங் களை அம லாக்க வேண் டும். குறைந் த பட் சம் "ஒரு குடும் பம் இரு குழந் தை கள்' கொள் கை யை யா வது இந் தியா வகுக்க வேண் டும். அதைத் தீவி ர மாக அமல் ப டுத்த வேண் டும். உதா ர ண மாக, இந் தக் கட் டுப் பாட்டை மீறு வோ ருக்கு அர சின் எந்த நலத் திட் டப் பலன் க ளும் கிடைக் கா த வா றும் ஒரு குழந்தை பெற் றோ ருக்கு கூடு தல் சலு கை கள் கிடைக் கு மா றும் சட் ட மி யற் ற லாம். இந்த நட வ டிக்கை நியா ய மா னது மட் டு மல்ல; அவ சி ய மா ன தும் கூட.
வே ளாண் மை யில் உண் மை யான புரட் சியை உரு வாக்க வேண் டும். இதற் கான அர்த் தம், புது தில் லி யில் இன்று நம் ஆளும் வர்க் கம் யோசித் துக் கொண் டி ருக் கும் ஒப் பந்த முறை விவ சா யமோ; கலப் பின விதை விவ சா யமோ அல்ல. மாறாக, நவீ னக் கண் டு பி டிப் பு க ளின் நல்ல அம் சங் க ளு டன் நம் மு டைய பாரம் ப ரிய விவ சாய முறைக் குத் திரும் பு தல்.
÷நாட் டி லுள்ள பயி ரி டத் தக்க நிலங் களை மீள் ஆய் வு செய்து, சாகு படி பரப்பை அதி க ரித் தல்; அந் தந் தப் பகு திக் கும் சூழ லுக் கும் ஏற்ற பயிர்ச் சாகு படி; கிரா மங் கள் தோ றும் சுய பூர்த்தி பாசன நீர்க் கட் டு மா னங் கள் - சிக் கன நீர்ப் பாச னம்; கூட் டுப் பண்ணை முறை; அனைத் துப் பயிர் க ளை யும் கொள் மு தல் செய் யும் அர சு சார் கொள் மு தல் அமைப் பு கள் மற் றும் மதிப் புக் கூட் டுப் பொ ருள் தொழிற் சா லை கள் } விற் ப னை ய கங் கள். விவ சா யத்தை லாப க ர மான ஒரு தொழி லாக மாற்ற நாம் முனைப் பு டன் செயல் பட வேண் டிய நேரம் இது.
மக் க ளின் உண வுப் பழக் கத்தை நிர் வ கித் தல், மாற்றி அமைத் தல் என் பது உண வுத் தேவையை எதிர் கொள்ள மிக வும் அவ சி ய மான மாற் றம். அந் தந் தப் பகு திக் கேற்ற பயிர்ச் சாகு ப டிக் கான தேவையை உரு வாக் கும் வகை யில் நம் மு டைய உணவு முறை யில் அனைத் துப் பயிர் க ளுக் கும் இடம் அளித் தல் என் ப து தான் நாம் மேற் கொள்ள வேண் டிய உட னடி மாற் றம்.
உ தா ர ண மாக, தமி ழ கத் தி லுள்ள மானா வாரி பகு தி க ளில் உள்ள பயி ரி டத் தக்க நிலங் கள் ஏரா ள மா னவை பெரும் பா லான காலங் க ளில் தரி சா கவே கிடக் கின் றன. வச தி யுள் ளோர் ஆழ் கு ழாய்க் கிணற்று நீர்ப் பாச னம் மூலம் நெல் சாகு படி மேற் கொள் வ தும் ஏனை யோர் வாய்ப் புள்ள சந் தர்ப் பங் க ளில் மட் டும் அப் போ தைய சந் தைத் தேவைக் கேற்ற பயிர் சாகு படி மேற் கொள் வ துமே இதற்கு கார ணம்.
பொது வாக, தமி ழ கத் தில் மக் கா சோ ளம் தவிர்த்து (அது வும் கூட கோழித் தீவ ன மா கப் பயன் ப டு வ தால்) , ஏனைய மானா வா ரிப் பயிர் க ளுக்கு உறு தி யான ஆதார விலை விவ சா யி க ளுக்கு கிடைப் ப தில்லை. ஆனால், மக் க ளின் உணவு முறை யில் ஒரு சின்ன மாற் றத்தை உரு வாக் கு வ தன் மூலம் தமி ழ கத் தின் உண வுத் தேவை - மானா வாரி பயிர் சாகு ப டி யில் மகத் தான மாற் றத்தை உரு வாக்க முடி யும்.
கா லை யில் இட்லி- தோசை- சப் பாத் திக் குப் பதி லாக ஒரு கோப்பை கேழ் வ ரகு கூழ் அல் லது கம் பங் கூழ் போன்ற உட லுக்கு நல்ல வலு வைத் தரக் கூ டிய உண வுக்கு மாறு வ தன் மூலம் ஒரு பு றம் தமி ழ கத் தின் அரிசி - கோதுமை தேவை யில் நான் கில் ஒரு பங்கை அப் ப டியே குறைக்க முடி யும்; மறு பு றம் மானா வா ரிப் பயிர் க ளுக்கு என்று ஒரு பெரும் தேவை யை யும் சந் தை யை யும் உரு வாக்க முடி யும். இப் படி, ஒவ் வொரு மானா வா ரிப் பயி ரை யும் வாரத் தில் ஒரு நாள் உண வுப் பட் டிய லில் சேர்ப் ப தன் மூலம் பெரும் மாற் றத்தை உரு வாக்க முடி யும்.
மக் க ளி டத் தில் நம் மு டைய உண வுத் தேவை மற் றும் உற் பத் தி யில் உள்ள சிக் கல் க ளை யும் உண வுப் பழக் கத்தை மாற் றிக் கொள்ள வேண் டிய தேவை யை யும் அரசு விளக் க லாம். மானா வா ரிப் பயிர் க ளைக் கொண்டு புதுப் புது உணவு வகை க ளைத் தயா ரிப் பது குறித்த விழிப் பு ணர்வை உரு வாக் க லாம். மாற் றத்தை உரு வாக் க லாம்.
உல கி லுள்ள எல்லா பிரச் னை க ளுக் கான தீர் வு க ளும் ஒரே யொரு அடிப் ப டையி லி ருந் து தான் உரு வா கின் றன: மாற் றம். விலை வாசி உயர் வுப் பிரச் னைக்கு வெற் றுச் சவ டால் க ளால் நிரந் த ரத் தீர் வைக் காண முடி யாது.
பு திய சிந் தனை. வித் தி யா ச மான அணு கு முறை. திற மை யான செயல் பா டு கள். அரசு மற் றும் தன் னார் வத் தொண்டு நிறு வ னங் க ளின் ஒத் து ழைப்பு. இவை சமு தாய மாற் றங் களை ஏற் ப டுத் திப் பிரச் னை க ளுக் குத் தீர் மா னம் அளிக் கக் கூ டும். நாம் ஏன் இப் படி எல் லாம் சிந் திப் ப தில்லை அதற் குப் பெயர் தானே பகுத் த றிவு?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

உயா்கல்வி சந்தேகங்களுக்கு வழிகாட்டி மையத்தை அணுகலாம்! - ஆட்சியா் இரா. சுகுமாா்
நெல்லை பேராசிரியையின் நகை கொள்ளை வழக்கில் இருவா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

