தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கவலைப்படு சகோதரா

தனது அபிமான நடிகரின் திரைப்படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகாத சோகத்தில் ரசிகர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அண்மையில் தினசரிகளில் ஒரு வருத்தமான செய்தி வெளியானது.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 10:08 pm

இராம. பரணீதரன்

தனது அபிமான நடிகரின் திரைப்படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகாத சோகத்தில் ரசிகர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அண்மையில் தினசரிகளில் ஒரு வருத்தமான செய்தி வெளியானது.

மதுரை மேலூர் ரசிகர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் அத்திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்கம் முன் மறியல், ஆர்ப்பாட்டம் என ரகளையில் ஈடுபட்டனராம். மிகுந்த வெட்கக்கேடான விஷயம் இது. பொழுதுபோக்கு அம்சமாக கருத வேண்டியதை ஏதோ ஜீவாதாராமான விஷயம் போல் கருதி, இவர்கள் செய்யும் அழிச்சாட்டியத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.

நிழலை நிஜமென நம்பி சீரழியும் இத்தகைய இளைஞர்களை குறைகூறி பிரயோஜனமில்லை. இவர்களுக்கு நேரத்துக்கு உணவும், உடுத்த ஜீன்ஸூம், பறக்க பைக்கும் வாங்கித்தரும் பெற்றோரைத்தான் நாம் நொந்து கொள்ள வேண்டியுள்ளது.

நாட்டில் ஆங்காங்கே குடிதண்ணீருக்காவும், மண்ணெண்ணெய்க்காகவும் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் செயல்பட்ட தமிழக இளைஞர்களின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.

எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தான் சுட்டுத் தள்ளி வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான ஈழச் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையோ கேள்விக்குறியாக இருக்கிறது. நாடு முழுவதும் மாநிலப் பிரிப்பு பிரச்னையில் சிக்கி போர்களமாக உள்ளது. இப்படி போராடுவதற்கும், போர்க்கோலம் பூணுவதற்கும் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது, நமது இளைஞர்களின் சினிமா பற்று நம்மை கவலை கொள்ள வைக்கிறது.

இன்றைய இளைஞர்களுக்கு சரியான முறையில் வழிகாட்ட நாம் தவறி விட்டோமோ என்கிற சந்தேகம் எழுகிறது. தலை நிறைய முடி, காதுகளில் தோடு, கை, கால்களில் வளையங்கள், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஆடைகள் என சட்டென பார்ப்பதற்கு ஆணா, பெண்ணா என இனங்கண்டறிய இயலாமலும், ஒருவேளை மனநிலை பாதித்ததவரோ எனச் சந்தேகிக்கும் விதமாகவும் இருக்கிறது இவர்களின் ஆடை அலங்காரங்கள்.

திரையில் கதாநாயகன் செய்யும் அனைத்தையும் இவர்களும் செய்து பார்க்கும் அளவுக்கு சினிமா என்னும் மாயை இவர்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

காதல், வன்முறை, ஆபாசம், கலாசார சீரழிவுகள் என சமுதாயச் சீர்கேடுகளின் ஒட்டுமொத்த குப்பைக் கூளமாக இன்றைய சினிமா இருந்து வருகிறது. திரையரங்கில் ஒரு ஆக்ஷன் திரைப்படம் பார்த்துவிட்டு எழுந்திருக்கும்போது நம் சட்டையில் ரத்தம் தெளித்திருக்கிறதா என நாம் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வன்முறை வரைமுறையின்றி விரவிக் கிடக்கிறது.

ஒருதலையான காதல், காதலை மறுக்கும் பெண்ணை கொலை செய்தல், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், காதல் தோல்வியால் போதைக்கு அடிமையாதல், தற்கொலை செய்து கொள்ளுதல் என நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு இத்திரைப்படங்கள்தான் பிள்ளையார் சுழி போடுகின்றன.

மாணவர்களுக்கு வழிகாட்டியாக, இளைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலான திரைப்படங்கள் அத்திப் பூத்தாற் போல வரத்தான் செய்கின்றன. ஆனால் அது போன்ற படங்கள் பார்க்க ஆளில்லாமல் நஷ்டத்தில் முடங்குவதால், தொடர்ந்து ஒரே மாதிரியான திரைப்படங்களே வெளிவருகின்றன.

அந்த காலங்களில் வெளிவந்த திரைப்படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களையும், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் கொண்டிருந்தன. நாட்டுப் பற்றையும் கலாசாரத்தையும் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தன. ஆனால், தற்போதைய படங்களோ அப்படியே தலைகீழ். நல்லதைச் சொல்லாவிட்டாலும், கெட்டதையாவது சொல்லாமலிருக்கலாம். ஆனால் அதைத்தான் சொல்கிறார்கள்.

அதேபோல், பழைய திரைப்பட கதாநாயகர்கள் நற்குண நாயகராகவும், வில்லன் என்பவர் அனைத்து தீய குணங்கள் உடையவராகவும் சித்திரிக்கப்படுவார். ஆனால், இன்றோ கதாநாயகனே அனைத்து கெட்ட பழக்கங்களும் உடையவராகக் காண்பிக்கப்படுவதால், மாணவர்களும், இளைஞர்களும் அவர்களையே ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு பின்பற்றத் துவங்கி விடுகின்றனர்.

இளைஞர்களுக்கு எப்படி திரைப்படங்களோ, அதேபோல் இல்லத்தரசிகளுக்கு தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், குழந்தைகளுக்கு கார்ட்டூன் சேனல் என இந்த மாய உலகம் குடும்பத்திலுள்ள அனைவரையும் கட்டியிழுத்து, அவர்களின் பொன்னான நேரத்தை கபளீகரம் செய்து விடுகிறது.

இப்படி வீணாக்கும் நேரத்தை புத்தகம் படிப்பது, விளையாடுவது, ஏதேனும் கலைகள் கற்பது, பொருளீட்டுவது என பயனுள்ள வகையில் செலவழித்தால் நாம் வாழ்க்கையில் மேலும் முன்னேறலாமல்லவா?

சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை மறந்து, பெரும் பொழுதை அதிலேயே போக்குவது என்பது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதைப் போலத் தான். இந்த விஷயத்தில் சினிமாத் துறையினரும் சற்று சமூக சிந்தனையோடு, படம் பார்க்க வருபவர்களுக்கு ஏதேனும் சில நல்ல கருத்துகளை மனதில் பதியும் வண்ணம் நல்ல திரைப்படங்களை எடுத்து தங்களுடைய சமூகப் பொறுப்புணர்வை நிரூபிக்க வேண்டும். செய்வார்களா...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.