அணு இயற்பியலில் அனைத்தும் சேர்ந்து திரண்டு வரும் நிலையை பற்றி குறிப்பிடுவார்கள். நன்மையெல்லாம் அது போல திரண்டு வரவேண்டும். தீயசக்திகளுக்கு ஒன்று சேரும் குணம் உள்ளது போல, நல்ல சக்திகளுக்கும் இருக்க வேண்டும். சில திரைப்படங்களை வர்ணிக்கும்போழுது அது ஒரு ச்ங்ங்ப் ஞ்ர்ர்க் படம் என்கிறார்கள். அந்த வர்ணனையில் லேசாக பரிகாசம் தொனிக்கும். ஒரு படம் நன்றாக இருக்கிறது என்று நமக்கு தோன்ற வைத்தால் அதனால் என்ன? நமக்கே தெரியும் சுற்றி நடக்கும் கசப்பான உண்மைகள். இருந்தும் இரண்டு மணி நேரம் அந்த நிஜங்களை மறந்து நல்லதும் நடக்கும் என்று நம்புகிறோம்.
நல்லவர்கள் மனங்களில் நம்பிக்கை தீர்ந்தால் உலகம் அழியும் என்று எங்கோ படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது. ஒருநாள் பி. சாய்நாத் நர்ஸ்ரீண்ஹப் ஈங்ல்ழ்ண்ஸ்ஹற்ண்ர்ய் என்ற தலைப்பில் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். நிலமும் நீச்சுமாக இருந்தவர்களை இன்றைய மாற்றங்கள் எப்படி இருப்பதை பறித்து இழந்தவர்களாக நிற்க வைக்கின்றன என்பதை விவரித்தார். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே இருக்கும் ஏற்றத்தாழ்வு மேலும் மேலும் எப்படி ஆழமாகி வருகிறது என்றார். இந்த நிலை மாறுமா என்று கேட்டால் நம்பிக்கை என்ற ஒரு இடத்தை கெட்டியாய் பிடித்துக்கொள்ளவேண்டும் என்றார். நம்பிக்கை இல்லாவிடில் நாம் சோர்ந்தும் அயர்ந்தும் போய்விடுவோம். நம்பிக்கை என்ற இடம் விரிவடைய என்ன வழி? நல்லவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும், உத்தமர் உறவு மட்டுமே வேண்டும் } இப்படி எவ்வளவோ வேண்டுதல்களை நிஜமாக்க உழைபவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம்புங்கள்.
சில நிகழ்ச்சிகளைப் பார்க்கும் பொழுதும் அவற்றில் பங்கேற்கும் பொழுதும் இது நல்லவர்களின் சங்கமம் என்று தோன்றும். இந்த நல்ல அதிர்வுகள் எங்கும் பரவ வேண்டும் என்றும் தோன்றும். காலம் கடந்துதான் நமக்கு கண் திறக்குமா? "உலகின் கடைசி மரத்தை வெட்டிய பின்தான், உலகின் கடைசி நதியை மாசுபடுத்தியபின்தான், உலகின் கடைசி மீனைப் பிடித்தபின்தான் பணத்தை தின்ன முடியாது என்று இவர்களுக்குப் புரியப்போகிறது' - இது சிவப்பிந்தியரின் பழமொழி. என்ன ஒரு பொருள் பொதிந்த வாக்கியம்? இப்பொழுதே நாம் போகும் பாதையை மாற்றிக்கொண்டால் நமக்கு நல்லது. அழிவு வரும்பொழுது ஏழை பணக்காரர் பார்க்காது என்று இந்த பழமொழி நமக்குச் சொல்கிறது.
உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும் முன்னாள் கர்நாடக மாநில லோகாயுக்தருமான ஜஸ்டிஸ் சந்தோஷ் ஹெக்டே ஒருமுறை கல்லூரி மாணவர்களிடம், "நல்ல ஆட்சிமுறையும் அழிந்துவரும் அறமும்' என்பது பற்றிப் பேசினார். ஒரு மாணவர் "இந்த அழிவை எப்படி தடுப்பது' என்று கேட்டார். அதற்கு அவர் "உங்கள் தலைமுறையின் கைகளில்தான் அது இருக்கிறது, எங்கள் தலைமுறை இதை செய்யத் தவறிவிட்டது. நமக்கு நியாயமாக என்ன கிடைக்குமோ அதை அடைவதற்கு மட்டுமேதான் நாம் முயற்சி செய்ய வேண்டும். மனதில் திருப்தி வேண்டும். உங்கள் எதிர்காலத்திற்காக உங்கள் பெற்றோர்கள் லஞ்சம் கொடுக்கவோ, வேறு ஏதேனும் தவறு செய்யவோ முற்பட்டால் "இந்த அறம் பிறழ்ந்த அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட எதிர்காலம் எங்களுக்கு வேண்டாம்' என்று நீங்கள் சொல்லுங்கள். அறத்தின் மீட்சி உங்கள் கையில்தான் உள்ளது' என்று சொன்னார்.
இங்கு அவர் எதை வேண்டும் எதை வேண்டாம் என்கிறார் பாருங்கள்.
நம் நாட்டில் நிறைய இளைஞர்கள் நம்பிக்கைத் தாரகைகளாக இருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் ஒரு தபாலாபீஸ் குமாஸ்தாவின் மகன், அவன் தாய் அப்பளம் விற்று படிப்பை தொடர்ந்தவர் கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்திற்கு செல்லவேண்டும் என்று கனவு கண்டவர், பணம் இல்லாததால் கனவு நனவு ஆகவில்லை. அவர் இப்போது ஒரு ஆண்டிற்கு முப்பது ஏழை மாணவர்களுக்கு ஐ.ஐ.டி தேர்வுக்கு பயிற்சி அளிக்கிறார். இவருடைய மாணவர்கள் அயல் நாட்டு கல்லூரிகளில் படிக்கிறார்கள். இன்னொரு இடத்தில் மீனவர் குடும்பத்தில் பிறந்த ஒருவர் ஒரு வெறியுடன் தன்னைச் சுற்றி வாழும் சிறுவர்களுக்கு நீதிநெறிக்குரிய பயிற்சி அளித்து வருகிறார். மற்றுமோர் மாநிலத்தில் நவ்சர்ஜன் என்று ஒரு அமைப்பு. அது துவக்கத்தில் தலித் மக்களுக்கு உதவிட அவர்களின் சட்டப் பிரச்னைகளை தீர்க்கும் அமைப்பாக இருந்தது. நாள்கள் செல்ல செல்ல, இந்த அமைப்பின் செயல்பாட்டின்பால் நம்பிக்கை ஏற்பட்டு, தலித் அல்லாத, வசதி இல்லாதவர்களும் நவ்சர்ஜனை சட்ட உதவி பெற அணுகுகிறார்கள்; பயன் பெறுகிறார்கள்.
சல்மா, பத்மா, பரிமளா என்று மூன்று பெண்கள். அவர்கள் மனநிலை சிதைந்து போனவர்கள். அவர்களை "பான்யன்' என்ற நிறுவனம் தன்னுடைய சுகாதார மையத்தில் சேர்த்துகொண்டது. விடாமுயற்சியாலும் மருத்துவ சிகிச்சையினாலும் மனோதத்துவ ரீதியான பயிற்சியினாலும் இன்று அவர்கள் கிட்டத்தட்ட எல்லாரையும் போன்ற நிலைக்கு வந்துள்ளார்கள். சல்மாவின் மகன் அரசு சாரா நிறுவனம் நடத்தும் "குருகுலம்' என்ற பள்ளிக்கு செல்கிறார், பத்மா, சணலினால் ஆன கைவினைப் பொருள்கள் தயார் செய்து சுயமாக சம்பாதிக்கிறார். பரிமளாவும் சகஜ நிலைக்கு வந்துவிட்டார். எல்லாம் அந்த அமைப்பின் முயற்சி. இப்படி நாடெங்கும் நன்மை பயக்கும் செயல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்றாக சேர்ந்தால் ஆக்கபூர்வமான சக்தி உருவாகும். இது போன்ற அகல்விளக்குகள் உள்ளன. எல்லோரும் ஒன்று சேர்ந்தால் அந்த ஒளி கண்ணைப் பறிக்கும்; இருளைப்போக்கும்.
அதுபோல ஒவ்வொரு ஆண்டும் சமூக மாற்றம் செய்ய வேண்டுமென்ற நோக்கோடு இயங்கும் உள்ளங்களை ஒன்று சேர்க்கிறது "எண்ணங்களின் சங்கமம்' என்ற நிகழ்ச்சி. குப்பைகளை சேகரித்து அதன் மூலம் செலவில்லா சேவை செய்வார் ஒருவர்; மதுவிற்கு அடிமையான ஒரு கிராமத்தை, மது புகையிலை இல்லாத கிராமமாக மாற்றியவர் ஒருவர்; முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலவச பாடசாலை நடத்துகிறார் ஒருவர்; இறந்தவரின் உறவினர்களிடம் அடி உதை பட்டாவது 200க்கும் மேற்பட்ட கண் தானம் பெற்று தந்தவர் ஒருவர்; ஒரு ரூபாயில் ஒரு உயிர் என்ற தாரக மந்திரத்தை வைத்தே பல உயிர்களை காப்பாற்றுவார் ஒருவர்; பட்டதாரி இளைஞர்களை கொண்டு இயற்கை விவசாய கூட்டு பண்ணை நடத்துகிறார் ஒருவர்; ஏழை மாணவர்களுக்காக நிதி திரட்டி மருத்துவம் உள்ளிட்ட பட்டப் படிப்பு படிக்க வைக்கும் ஒருவர் - இப்படி பலர். இவர்கள் ஒன்றும் பெரும் வசதி படித்தவர்களில்லை. எல்லாரும் சாமானியர்களே.
"எண்ணங்களின் சங்கமம்' கூட்டத்திற்கு ஒருவர் டிவிஎஸ் 50 வண்டியில் ராமநாதபுரத்திலிருந்து வந்தார். அவருடைய சேவை, யாரையும் அனாதையாக கடைசி பயணத்திற்கு செல்ல விடமட்டார். தெரிந்த வரையில் இறந்தவரின் மத வழக்கப்படி மரியாதை செய்து விடுகிறார். சிறு வயதில் பேப்பர் விநியோகித்து வருவாய் ஈட்டி கல்வி பயின்ற இளைஞர்கள் இன்று தங்களைப்போல இருக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கல்விப்பயிற்சி அளிக்கிறார்கள். ஏன் இவர்களும் நானுண்டு என் வீடுண்டு என்றிருக்கவில்லை? சக மனிதர்களின் கண்ணீரைத் துடைக்கவேண்டும், துயரைத் தீர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் எங்கு துவங்குவது என்று தெரியாமல் ஒன்றும் செய்யாமலேயே வாழ்க்கை முடிந்துவிடுகிறது. ஆனால் சிலர் களத்தில் இறங்குகிறார்கள். இவர்களை ஊக்குவித்து உலகத்திற்கு அறிமுகம் செய்தால், வீட்டில் தயக்கத்துடன் இருப்பவர்கள் வெளியே வருவார்கள்.
உலகமயமாதலை எதிர்ப்பது, புவி ஈர்ப்பு சக்தியை எதிர்ப்பது போலதான் என்கிறார்கள். ஆனால் இந்த உலகமயமாதலையே, மக்களை துயரத்திலிருந்து மீட்கும் கருவியாக மாற்றவேண்டும் என்று கோபி அண்ணன் (ஓர்ச்ண் அய்ய்ஹய்) சொன்னார். உண்மைதான், இது நுகர்வோர் கலாசாரம் பரவி வரும் நேரம். இதனுடன் போரிடமுடியாது என்று அயர்ந்து போவதற்கு பதில், அனைத்து அமைப்புகளும் ஒழுக்கக் கோட்பாடுகளை பின்பற்றவேண்டும் என்ற நிலையை மக்கள் உறுதி படுத்த முடியும்.
இதற்கு முதல்படி, "எண்ணங்களின் சங்கமம்' நிகழ்ச்சியில் நான் சந்தித்த சாதாரணமான மக்களின் சிறுசிறு முயற்சிகளே. கல்விக்காக சிலர், சுகாதாரத்திற்காக சிலர், வயோதிகர்கள் கைவிடப்பட்டால் அவர்களுக்கு உதவ சிலர், அனாதைக் குழந்தைகளுக்காக சிலர், மன நலம் குன்றியவருக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும். இதேபோல் மற்றொரு அமைப்பின் அங்கத்தினர்கள், ஒரு ருபாய் கூட லஞ்சம் தராமல் மக்கள் அரசு சான்றிதழ்கள் பெற உதவுவார்களாம். "இயற்கை வெற்றிடத்தை வெறுக்கும்' (சஹற்ன்ழ்ங் ஹக்ஷட்ர்ழ்ள் ஹ ஸ்ஹஸ்ரீஸ்ரீன்ன்ம்) என்பார்கள். எங்கு தேவை உள்ளதோ அங்கு நாம் நிச்சயம் சேவை புரியலாம் என்று புரிந்தது. உண்மையில் குறை இருக்கும் மக்களுக்கு எங்கே சென்றால் தங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்று கூட தெரிவதில்லை. திக்குத் தெரியாத காட்டில் ஒளியைத் தேடி த்தேடி அலைகிறார்கள்.
நான் ஆட்டிசம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு எங்கிருந்தெல்லாமோ பெற்றோர்கள் உதவி தேடி என்னைத் தொடர்பு கொண்டார்கள். தேவைக்கும் சேவைக்கும் நாம் பாலம் அமைத்தால் போதும். பலரின் கண்ணீர் இந்த நல்லெண்ணங்களால் துடைக்கப்படும் என்பது நிச்சயம்.
இது போன்று நல்லெண்ணம் நிஜமாகும் ஒரு குடிசை மாற்றுப் பகுதிக்கு நான் சென்றிருந்தேன். அங்கிருக்கும் சிறுவர்களுடன் பேசுகையில், "மரங்களினால் என்ன பயன்' என்று அவர்களைக் கேட்டேன். "பழம் தரும்', "நிழல் தரும்' என்று பல விடைகள் தந்தார்கள். உழக்கு உயரம் இருந்த விஜயலட்சுமி தந்த பதில் "மழை வரும்'. அதிசயமாக இருந்தது. இங்கே நட்ட விதை விழலாய் போகாது, நிச்சயம். இந்த சிறு சிறு முயற்சிகள், நல்லெண்ணங்கள் ஒன்றுபட வேண்டும். அப்பொழுது திரண்டு வரும் உற்சாகத்தை, வேகத்தை சக்தியை ஆக்கபூர்வமான மாற்றத்தை தடுத்து நிறுத்தமுடியாது.
கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

