நேக்சாவார் நேக்சாவார் என்று ஒரு அரிய மருந்து. அதன் அடிப்படை ரசாயனப்பொருளின் பெயர் சொராபனிப். இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் புற்றுநோய் இருக்கும் நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்து. நோயின் கொடுமையை அது குறைக்கும். இந்த மருந்தின் காப்புரிமைக்கு உரிமையாளர் பாயர் (ஆஹஹ்ங்ழ்) என்ற ஜெர்மன் நிறுவனம். இதன் விலை ஒரு மாதத்திற்கு இரண்டு இலட்சத்தி எண்பதினாயிரம் என்று இந்த நிறுவனம் நிர்ணயித்தது. யார் வாங்குவார்கள் என்று கேட்க தோன்றலாம்.
இரு வருடங்களுக்கு முன்பு இந்த மருந்தை உற்பத்தி செய்ய கட்டாய உரிமம் கேட்டு நாட்கோ (சஹற்ஸ்ரீர்) என்ற இந்திய நிறுவனம் விண்ணப்பித்தது. காப்புரிமைகளின் பொது கட்டுப்பாட்டாளர் இந்த மனுவைப் பரிசீலித்து இரு கட்சிகளின் வாதங்களையும் கேட்டு, கட்டாய உரிமம் நாட்கோவிற்கு வழங்கினார். இது தான் நம் நாட்டில் முதன் முறையாக வழங்கப்பட்ட கட்டாய உரிமம்.
நம் நாட்டில்தான் இது முதல் தடவையே தவிர, கட்டாய உரிமம் வழங்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பு கனடாவிலும், அமெரிக்காவிலும் கட்டாய உரிமங்கள் உத்தரவாகியுள்ளன. அப்போதெல்லாம் அதைப் பெரிதுபடுத்தாத பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்தன. நம் நாடு காப்புரிமைகளுக்கும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும் விரோதமாக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது போன்ற மிக முக்கியமான வாழ்வா சாவா என்ற வழக்குகளும் பிரச்னைகளும் எழுகின்றன என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
கட்டாய உரிமம் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள நாம் சில ஆண்டுகள் பின்னோக்கி செல்லவேண்டும். கட்டாய உரிமம் சட்டத்தை மறு ஆய்வு செய்ய 1957இல் ஜஸ்டிஸ் என்.ராஜகோபால அய்யங்கார் மத்திய அரசால் பணிக்கபட்டார். 1959இல் அவர் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய அறிக்கை ஒரு பிரமிக்கத்தக்க ஆவணம்.
ட்ரிப்ஸ் ஒப்பந்தம் (பதஐடந) தோஹா அறிக்கை (ஈர்ட்ஹ ஈங்ஸ்ரீப்ஹழ்ஹற்ண்ர்ய்) போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகும் அந்த அறிக்கை இன்றும் மிகவும் பயனுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறது என்பதைக் குறிப்பிடவேண்டும். அறிவுசார் சொத்துரிமை மேன்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவராக நான் இருந்தபோது எந்தவொரு கடினமான வழக்கு விசாரணைக்கு வந்தாலும் இந்த அறிக்கையை ஒருமுறை படிப்பேன் உடனே தெளிவு பிறக்கும்.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதார பிரச்னைகளிலும் மாறுபாடுகள் இருக்கும். ஆகையால் நாட்டின் நலனை மனதில் கொண்டு காப்புரிமை வகைமுறை செயல்பாடுகளினால் ஏற்படும் மேடுபள்ளங்களை நாம் அவ்வப்பொழுது சரி செய்து கொண்டே வரவேண்டும் என்று கூறும். இப்படி சமன் செய்யும் ஒரு கருவிதான் நம் காப்புரிமை சட்டத்தில் கட்டாய உரிமம் பற்றிக் கூறும் பிரிவு. மேலும் அந்த அறிக்கை கூறுவது என்ன வென்றால் காப்புரிமைகள் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் கண்டுபிடிப்பாளரின் நலனை பேணுவதல்ல; நாட்டின் பொருளாதார நலனைப் பேணுவதே.
ட்ரிப்ஸ் ஒப்பந்தத்திலும் இது போல உரிமம் வழங்குவதை உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் மற்றவரின் உபயோகம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பை அதன் உரிமையாளரோ அவருடைய அனுமதி பெற்ற ஒருவரோ தான் உபயோகிக்க முடியும். அவரிடம் எவரேனும் அனுமதி கேட்டு அவர் மறுத்தால் அவர் ஒப்புதல் இல்லாமல் சில சூழ்நிலைகளில் உரிமம் வழங்கப்படும். இதனை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவர் அதனை ஒவ்வொரு வழக்கிலும் அதன் தராதரத்தை பார்த்து உரிமம் அளிக்கலாம் அல்லது மறுக்கலாம்.
நம் சட்டத்தில் எந்த நிபந்தனைக்குள்பட்டு கட்டாய உரிமம் வழங்கலாம் என்று வரையறுத்துள்ளார்கள். அதனை முடிவு செய்பவர் பொது கட்டுப்பாட்டாளர் (இர்ய்ற்ழ்ர்ப்ப்ங்ழ்-ஞ்ங்ய்ங்ழ்ஹப்). அந்த நிபந்தனைகள் பின்வருமாறு : அ) ஏற்புடைய அளவிற்கு குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பை பொறுத்து பொது மக்களின் தேவை பூர்த்தியாகவில்லை, ஆ) குறிப்பிட்ட காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு ஏற்புடைய அளவிற்குக் கட்டுபடியாகும் விலையில் விற்கப்படுவதில்லை; இ) இந்திய எல்லைக்குள் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பை செயல்படுத்தவில்லை. (ய்ர்ற் ஜ்ர்ழ்ந்ங்க் ற்ட்ங் ல்ஹற்ங்ய்ற்ங்க் ண்ய்ஸ்ங்ய்ற்ண்ர்ய்) இதில் ஏதாவது ஒரு நிபந்தனை பூர்த்தி ஆனாலும் போதும், கட்டாய உரிமம் வழங்கலாம்.
காப்புரிமை வழங்குவது கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கு மட்டுமல்ல, உரிமையாளர்களுக்கு பிரத்தியேக உரிமை அளிப்பதற்கு மட்டும் அல்ல. நாட்டின், தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்றமடைவதற்கும், மக்களின் ஆரோக்யத்திற்கு ஊறு விளைவிக்கா வண்ணம் இருக்க வேண்டும் என்றும் பொதுநலனை காக்கும்வண்ணம் இருக்கவேண்டும் என்றும் நம் காப்புரிமை சட்டம் சொல்கிறது.
காப்புரிமைக்கு உரிமையாளரான பாயர் கம்பெனி ஒரு வருடத்திற்கு இந்திய மக்களின் தேவை 20,000 மருந்து பெட்டிகள் என்று சொன்னது. கட்டாய உரிமத்திற்கு விண்ணப்பித்த நாட்கோ கம்பெனியோ இந்தியாவின் ஒரு வருடத்தின் தேவை 70,000 மருந்து பெட்டிகள் என்று கூறியது. ஆனால் பாயர் கம்பெனி விற்றது 593 பெட்டிகள்தான். இது மிகக்குறைவே.ஆகவே எப்படி பார்த்தாலும் பொது மக்களின் தேவை பூர்த்தியாகவில்லை என்று கட்டுப்பாட்டாளர் முடிவிற்கு வந்தார்.
அடுத்ததாக பாயர் கம்பெனி நிர்ணயித்த விலை கட்டுபடியாகும் விலையா என்று பார்க்க வேண்டும். பாயரின் தரப்பு, விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு தங்களுக்கு ஆகும் செலவைக் கணக்கிட்டால் மாதத்திற்கு ரூபாய் 2,80,000 என்பதுதான் சரியான விலையாக இருக்கும் என்றது. கட்டுப்படியாகும் விலை என்பது விற்பவரைப்பார்த்து கணிப்பது அல்ல, பொதுமக்களுக்கு வாங்க கட்டுபடியாகுமா என்று பார்த்து கணிப்பது. இந்திய மக்களின் வருமானம் மற்றும் வாங்கும் திறனைக் கருத்தில் கொண்டு இந்த விலை பொதுமக்களுக்குக் கட்டுபடியாகும் விலையல்ல என்று கட்டுப்பாட்டாளர் முடிவிற்கு வந்தார். கடைசியாக, இந்த கண்டுபிடிப்பு இந்திய எல்லைக்குள் செயல்படுத்தப்பட்டதா இல்லையா என்று காண வேண்டும். அப்படி என்றால் என்ன? இந்த மருந்தை இறக்குமதி செய்தால் போதுமா, அல்லது, இங்கேயே மருந்தை தயார் செய்யவேண்டுமா என்பது விவாதிக்க பட்டது.கட்டுப்பாட்டாளர் இங்கேயே தயார் செய்வது அவசியம் என்றார். பாயர் கம்பெனி மருந்தை இங்கு தயார் செய்யாததால் இந்த நிபந்தனையும் பூர்த்தி ஆயிற்று என்றார்.
மருந்தை தயார் செய்யாமல் இறக்குமதி மட்டுமே செய்தால் அதற்கு சட்ட ரீதியாக ஒப்புக்கொள்ளும்படியான காரணங்கள் இருக்க வேண்டும் என்று மேல்முறையீட்டில் முடிவு செய்யப்பட்டது.
கட்டாய உரிமம் என்பது மனித உரிமை கட்டாயம், பொதுமக்களின் ஆரோக்கியத்தின் கட்டாயம். இது காப்புரிமைக்கு எதிர்மறையான சட்ட நடவடிக்கை அல்ல. கட்டாய உரிமம் கேட்பவர் முதலில் உரிமையாளரிடம் தனக்கு அந்த மருந்தை தயார் செய்ய உரிமம் கேட்கவேண்டும். உரிமையாளர் ஒப்புக்கொள்ள வில்லை என்றால்தான் கட்டுப்பாட்டாளரிடம் மனு கொடுக்க முடியும். ஆகையால் கட்டாய உரிம சட்டம் காப்புரிமையின் சொந்தக்காரரின் உரிமையை மறுப்பதாகாது. மாறாக, அந்த உரிமையை ஒப்புக்கொள்வதால்தான் அவரிடம் முதலில் உரிமம் கேட்கிறார்கள்.
மருத்துவ காப்புரிமைகளின் நன்மை பொதுமக்களைப் போய்சேரவேண்டும். காப்புரிமையின் சொந்தக்காரர் தன் கண்டுபிடிப்பான மருந்தை தேவையான அளவில் விற்க மாட்டேன், நியாயமான ஒரு விலையில் விற்கமாட்டேன், இந்த நாட்டில் தயாரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கமாட்டேன், அப்படி யாரேனும் தான் தயார் செய்கிறேன் உரிமம் வழங்குங்கள் என்றால் அதற்கும் சரி என்று சொல்லமாட்டேன் என்று சொன்னால் அங்கே பொது நலனுக்கு எதிரான நிலைமை உருவாகிறது. மருந்தை ஏன் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கிறார்கள்? நோயை தீர்க்க வேண்டும் என்பதற்குத்தானே? அந்த மருந்தின் விலையை உச்சாணி கொம்பில் வைத்தால் யார் வாங்குவார்கள்? அப்பொழுது கோடீஸ்வரர்கள் மட்டுமே பயனுற முடியும்.பணமில்லையென்றால் குணமடையும் தகுதியில்லை என்றாகிறது.
கட்டாய உரிம சட்டம் என்பது பொது நலன், பொது நன்மைக்காக இயற்றப்பட்டது. அமெரிக்க நாட்டு அறிஞர் ஜெனிபர் ஆர். ஆண்ட்ரூ என்பவர் எழுதிய கட்டுரையில் 2015இல் ஒரு காட்சியை கற்பனை செய்து பார்க்க சொல்கிறார். ஒரு பயங்கர நோய் உலகெங்கும் பரவி வருகிறது. எங்கும் பீதி. சுவிஸ் நாட்டு கம்பெனி ஒன்றிடம் மட்டும் அதற்கு மருந்து உள்ளது. அதை யாராலும் வாங்க முடியாத விலைக்குதான் விற்பேன் என்கிறது. அப்போது அமெரிக்க அரசு முன்னேற்பாடாக கட்டாய உரிமமளிக்க உத்திரவிடுகிறது. சுவிஸ் அரசு உலக வர்த்தக அமைப்பிடம் முறையிடுகிறது. இது கற்பனைதான். ஆனால் நிஜமாக நடக்க கூடிய கற்பனை.
கொடும், கடும் நோய்கள் தினம் தினம் நம்மை அச்சுறுத்துகின்றன. ஆனால் மக்களுக்கு மருந்துகளோ எட்டாக்கனியாக உள்ளன. ஏழைகளுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் தான். இது தான் உண்மை.
அறிவுசார் சொத்துரிமை சட்டம் நமக்கு முக்கியமான தேவைகளை பாதிக்கும் சட்டம். சமீபத்தில் சாம்சங் கம்பெனியும் ஆப்பிள் கம்பெனியும் தங்கள் டேபிலேட் கணினியின் அமைப்பு சம்பந்தமாக ரத்தம் சொட்ட சொட்ட அறிவுசார் சொத்துரிமைப் போரிட்டன.
அமெரிக்க உச்சநீதிமன்றம் மனித மரபணுக்களுக்கு காப்புரிமை வழங்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
இப்படி வரும் காலத்தில் நம் வாழ்வின் பன்முகங்களையும் தாக்கம் செய்யும் காப்புரிமைகளின் விதி நிர்ணயம் ஆகப்போகின்றன . ஏன் எப்படி எதற்கு என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இது நம் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. "போனால் போகட்டும் போடா இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா' என்று தத்துவம் பாடுவது நமக்கு நல்லதல்ல. நம் நாட்டிற்கும் தான்.
காப்புரிமை பற்றி நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
கட்டுரையாளர்: உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

பெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு

12 இடங்களில் வெய்யில் சதம்
தலைவா்கள் இன்று பிரசாரம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

