தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நியாயமாகப் போராடுங்கள்

 சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், "பெண்கள் எந்த இடத்தில், எந்த நேரத்தில் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான

News image
Updated On :30 செப்டம்பர் 2013, 10:24 pm

இராம. பரணீதரன்

பெண்களை நாடாகவும், நதியாகவும், எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய்  தெய்வமாகவும் போற்றித் துதிக்கும் நாடு நம் பாரத நாடு.

  ஆனால், இங்கேதான் பெண்களுக்குப் பாதுகாப்பின்மையும், பாலியல் அச்சுறுத்தல்களும் நிறைந்து கிடக்கின்றன. கல்விக் கூடங்களில், அக்கம்பக்கத்தில், நண்பர்கள், உறவினர்கள் என அங்கிங்கெனாதபடி எல்லாத் திசைகளிலிருந்தும் பெண்களுக்கு ஏற்படும் இத்தகைய இடையூறுகளை நீக்க பல்வேறு தரப்பினரும், பலவிதமான கருத்துகளை முன்வைக்கின்றனர்.

 சமீபத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் விரைவு நீதிமன்றத் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர், "பெண்கள் எந்த இடத்தில், எந்த நேரத்தில் இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

 அதே நேரத்தில் பாலியல் வன்முறை போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, தப்பான நேரத்தில், தப்பான இடத்தில் பெண்கள் இருக்கக் கூடாது' எனக் கூறினார்.

   உடனே பெண் ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பினரும், "இது மிகவும் கண்டிக்கத் தக்க கருத்து, இது ஆணாதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு, பெண்கள் எப்போதும், எங்கும் செல்ல உரிமையுண்டு' என்கிற ரீதியில் தங்களின் கண்டனக் கணைகளை வீசத் துவங்கினர்.

  நாட்டின் மிக முக்கியமான பொறுப்பான பதவியில் இருப்பவர், ஒரு தந்தை ஸ்தானத்தில் பெண்களின் நலன் கருதி தெரிவித்த ஒரு கருத்தை எதிர்க்கும் பெண்களின் நிலைப்பாடு சரிதானா? இதில் பெண்களின் உரிமை எங்கே பாதிக்கப்பட்டது? அல்லது ஆணாதிக்கம்தான் எங்கே வெளிப்பட்டுள்ளது? இப்படி போராடும் பெண்களே கூறட்டும் அவர்களுக்கு உரிமை முக்கியமா? பாதுகாப்பு முக்கியமா?

  சமீபகாலமாக பெண்கள் தொடர்பான கருத்துகளை யார் கூறினாலும், அது ஆடை தொடர்பான விஷயமாக இருந்தாலும் சரி, கலாசாரம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருந்தாலும் சரி, உடனே "ஐயகோ, எங்களின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது, உரிமை நசுக்கப்படுகிறது, ஆண்களின் கண்ணோட்டம் தவறானதாக இருக்கிறது' என்கிற ரீதியில் போராட்டம், ஆர்ப்பாட்டம்' என சில பெண்கள் களமிறங்கி விடுகிறார்கள்.

  யார் என்ன சொன்னாலும், அது நல்ல விஷயமாக இருந்தாலும்கூட கேட்கக் கூடாது என்கிற மனப்பான்மை மிகவும் தவறானதாகும். பாலியல் வன்முறை உள்பட பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளிலும் பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் இணைந்துதான் போராடுகின்றனர். ஆனால், ஆண்கள் ஏதேனும் ஒரு கருத்தையோ, அறிவுரையையோ கூறினால் மட்டும் பெண்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பது என்ன நியாயம்?

   பெண்களின் இத்தகைய செயல்பாடுகள், அவர்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்தையே பாதிக்கச் செய்கிறது என்பது இப்படி போராடும் எத்தனை பெண்களுக்குத் தெரியும்?

 பெண்களே! உங்களைப் போராட வேண்டாமென்று கூறவில்லை. நியாயமான காரணங்களுக்காகப் போராடுங்கள், சமூகமும் உங்கள் போராட்டத்துக்குத் தோள் கொடுக்கும்.       

   பெண்களை கெளரவமாக உடையணியச் சொல்வதும், நேரங்கெட்ட நேரங்களில் வெளியில் உலவாமல் இருக்கச் சொல்வதும் அவர்களின் உரிமையைப் பறிக்க அல்ல; பாதுகாப்பை அதிகரிக்கத்தான் என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

   கல்வி, கலை, அரசியல், காவல் என தற்போது பெண்களுக்கு அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. அன்றைய பிரதமர் இந்திராகாந்தி முதல் இன்றைய தமிழக முதல்வர் வரை வாழ்க்கையில் சாதித்த பெண்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு பெண்கள் தங்களின் வாழ்க்கையில் உச்சத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.

   பெண்களே! தயவுசெய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள், உரிமை வேறு, கடமை வேறு. எப்பொழுது நாம் நம் பங்களிப்பை சமுதாயத்துக்குச் சரியான முறையில் செலுத்துகிறோமோ, அப்பொழுதே உரிமை தானாக நம்மைத் தேடி வரும். கீழ்படிவதற்குக் கற்றுக் கொள்பவனே தலைமையேற்கத் தகுதி படைத்தவன் என்ற சுவாமி விவேகானந்தரின் வரிகள் இங்கே நினைவு கூரத்தக்கது.

   தாயையும், மனைவியையும் தவிர மற்ற பெண்களையெல்லாம் சகோதரியாகக் கருதி வாழ்ந்து வந்த உயர்ந்த பண்பாடு நம்முடையது.  மீண்டும் அந்த உயர்ந்த பண்பாட்டை அடைய, பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் களைய ஆண், பெண் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றிணைந்து, கருத்து ஒருமைப்பாட்டோடு பாடுபட முன்வந்தால் நம் சமுதாயம் இழந்த பெருமைகளை மீண்டும் அடையும் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.