ஓருவன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாக இருப்பதற்கும் காரணம், அவர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்கள்தான் என மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஒரு விஷயத்தைப் பற்றி நாம் திரும்பத் திரும்ப எண்ணும்போதுதான், அதற்கு ஒரு சக்தி கிடைக்கிறது. அது நம் ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது. ஆழ்மனத்தில் போடப்பட்ட விஷயங்களை நமது ஆழ் மனமே நிறைவேற்றி வைக்கிறது.
நான் இன்று இந்த வேலையைப் முடிப்பேன். எனது உடல் ஆரோக்கியமாக உள்ளது என எண்ணிப் பாருங்கள். நிச்சயம் முடித்து விடுவீர்கள். அந்த வேலையை ஒரு பிரச்னையாக நினைத்தால் முடிக்க முடியாது.
பிரச்னை யாருக்குத்தான் இல்லை. நாம் வீட்டை விட்டு வெளியே வந்து சாலையில் நடக்கத் தொடங்கினால், பலதரப்பட்ட மனிதர்கள் சந்தோஷமாக பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் செல்வதைப் பார்க்கும்போது, நமக்குதான் பிரச்னை போலிருக்கிறது, மற்றவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என நாம் எண்ணுகிறோம்.
சாலையில் செல்லும் மனிதர்கள் தங்களது பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டு வேலையை நோக்கிச் செல்கிறார்கள். அப்படி பிரச்னைகளை ஒதுக்கிவைக்கும்போது, ஏதாவது ஒரு விதத்தில் பிரச்னைக்கு தீர்வு நமது மனதில் உதிக்கும். சதா பிரச்னைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் என்ன ஆவது?
ஒருவர் எழுத்தாளராக வேண்டும் என எண்ணி, பல கதைகள் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கிறார். அனைத்தும் திரும்பி வந்து விடுகிறது. மற்றொருவர் வேலை கேட்டு பல நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கிறார். வேலை இல்லை என பதில் வருகிறது. அவர்கள் நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான் என முடங்கிவிடுகிறார்கள்.
ஒரு சிலர் நாம் எழுதிய கதையில் என்னென்ன தவறுகள் உள்ளன என படித்துப் பார்த்து, அவற்றை திருத்தி எழுதி வெற்றி பெறுகிறார்கள். வேலைக்கு விண்ணப்பித்தால், அந்த வேலைக்கு தகுதியுள்ளவர்களாக மாறிக் கொள்ள வேண்டும்.
வீட்டில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தால், சிலர் இரண்டு முறை தோற்றுவிட்டால், நான் விளையாட வரவில்லை எனக் கூறி எழுந்து சென்று விடுவார்கள்.
சீட்டு விளையாடிக் கொண்டிக்கிறீர்கள். தோல்வி அடைந்தவர், நீங்கள் தவறாக விளையாடுகிறீர்கள் என தோல்விப் பழியை எதிர் நபர் மீது போடுவார்.
இவர்களிடம் உள்ள குணம் தோல்வியைச் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான். தோல்வி என்பது வாழ்வின் ஒரு பகுதி என்பதை அவர்கள் உணருவதில்லை.
விளையாட்டில் தோல்வி அடைந்த வீரன், தன் எதிரியிடம் சென்று கைகுலுக்குகிறான். பாராட்டுகிறான். ஆனால், மனதில் இந்த முறை நீ. அடுத்த முறை நான் எனக்கூறி மீண்டும் வெற்றிக்கு தயாராக்கிக் கொள்கிறான்.
உங்கள் குழந்தையிடம் பந்தயத்தில் நீ இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வந்தாலும் பரவாயில்லை. பந்தயத்தில் கலந்து கொண்டாயே அதுவே பெரிய விஷயம் எனக் கூறுங்கள். தோல்வி அடைந்த குழந்தை வெற்றியை நோக்கி பயணிக்கத் தொடங்கும்.
நம் கையில் இருக்கும் சக்தி முயற்சிதான். தோல்வியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு மீண்டும் மீண்டும் முயல வேண்டும். அதற்குத்தான் எட்டு எழுத்து மந்திரம் தேவை.
ஒரு சாமியார் ஒரு ஊருக்குச் சென்றார்.
அங்குள்ளவர்களை அழைத்தார்.
"நீங்கள் வெற்றி பெற நான் ஒரு மந்திரம் சொல்லுகிறேன்' என்றார் சாமியார். அனைவரும் ஆவலுடன் "கூறுங்கள்' என கூச்சலிட்டனர்.
உடனே அந்த சாமியார், "பாருங்கள் உங்கள் அனைவருக்கும் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், அந்த எண்ணத்தை சரியாகப் பயன்படுத்தினால் வெற்றி பெறலாம்.
மழை அனைவருக்கும் பொதுவாகப் பெய்கிறது. அந்தத் தண்ணீரைப் பிடித்து வைக்க சிலரிடம் சிறிய செம்பு உள்ளது. சிலரிடம் பானை உள்ளது. சிலரிடம் பெரிய தொட்டி உள்ளது.
அதைபோல, இந்த மந்திரத்தை மனம் என்னும் பெரிய தொட்டியில் நீங்கள் சேமித்து வைத்துக்கொண்டால், அனைவரும் வெற்றி பெறலாம்' என்றார். "சாமி கூறுங்கள்' என மக்கள் மீண்டும் மீண்டும் கூச்சலிட்டனர்.
அந்த மந்திரம் "என்னால் முடியும்' என்பதே. இதைத் திரும்பத் திரும்ப கூறுங்கள். இதனை நீங்கள் சிறிய அளவில் உபயோகித்தால் சிறிய வெற்றி. பெரிய அளவில் உபயோகித்தால் பெரிய வெற்றி என சாமியார் கூறினார்.
அந்த மந்திரம் அவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டதல்ல; நம் ஒவ்வொருவருக்கும்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திமுக பொய் பிரசாரம்: அதிமுக நிா்வாகி ஆட்சியரிடம் புகாா்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

