சிறுதொழில் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி
புத்தாண்டில் வெளிவரும் பொருளாதாரச் செய்திகளைப் பார்த்தால் உலக அளவில் இருந்து வந்த மந்த நிலை சிறிது சிறிதாக மறைந்து வளர்ச்சிக்கான அறிகுறிகள் அதிகரித்து வருவது போன்ற தோற்றம் தென்படுகிறது. 2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு முதல் முறையாக இப்படி ஒரு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.










