மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

திருநங்கைகளும் ஒரு தீர்ப்பும்

தேர்தல் திருவிழாவின் கோலாகலத்திலும் கூச்சலிலும் நம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று இங்கு எல்லோரின் கவனத்தை ஈர்த்ததா என்று தெரியவில்லை.

Updated On :6 மே 2014, 7:52 pm

தேர்தல் திருவிழாவின் கோலாகலத்திலும் கூச்சலிலும் நம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்று இங்கு எல்லோரின் கவனத்தை ஈர்த்ததா என்று தெரியவில்லை. ஆனால் வெளி நாட்டாரும், அந்த தீர்ப்பின் பிரச்னை சம்பந்தப்பட்டவர்களும் பாராட்டும் கரவொலி ஓயவில்லை. அதுதான் திருநங்கைகளின் மனித உரிமைகள் பற்றியது. திருநங்கைகள் என்றால் பொதுவாக உடலால் ஆணாகவும் மனதால், பாலியல்பால் பெண்ணாகவும் இருப்பவர்களைக் குறிக்கும். இங்கே அதே சொல்லை உடலால் பெண்ணாகவும் மனதால் பாலியல்பால் ஆணாகவும் இருப்பவர்களை குறிக்க பயன்படுத்தியுள்ளேன்.

அந்தத் தீர்ப்பின் தொடக்க வரிகளே நம் மனதை நேரே போய் தொடும். திருநங்கைகள் அனுபவிக்கும் வலியையும், கொடுமையையும் நாம் புரிந்துக் கொள்ளாமல் இருப்பது போல வேறு யாரையும் நாம் நடத்துவதில்லை என்று துவங்குகிறது. எங்கும் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறதோ என்று நாம் ஐயமுறும் நேரத்தில், இல்லை, இல்லை நாம் வித்தியாசங்களை உள்வாங்கி அணைத்துக்கொள்ளும் ஜனநாயக பாதையில்தான் செல்லுகின்றோம் என்று நம் உச்சநீதிமன்றம் உரக்க கூறியுள்ளது.

நீதி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மனிதநேயம் இவை அனைத்துக்கும் உத்தரவாதம் அளிக்கிறது நம் அரசியல் சாசனம். இதை அழுத்தமாக கோடிட்டுக் காட்டுகிறது இந்தத் தீர்ப்பு. ஆங்கிலேயரின் ஆட்சிக்கு முன் இவர்களை வித்தியாசப்படுத்தி நடத்தியதாக தெரியவில்லை. ஹிந்து, இஸ்லாமிய, ஜைன மரபுமுறைகள் இவர்களைத் தனிப்படுத்தவில்லை.

நம் நாட்டில் இவர்கள் இன்னொரு வகை சிறுபான்மையினர். திரும்பத் திரும்ப நாம் மனதிற்குள் சொல்ல வேண்டிய வாக்கியம் இங்கு எல்லோரும் சமமே என்பதுதான். தேசிய சட்ட உதவி ஆணையம்தான் (சஹற்ண்ர்ய்ஹப் கங்ஞ்ஹப் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள் அன்ற்ட்ர்ழ்ண்ற்ஹ்) இந்த பொதுநல மனுவை தாக்கல் செய்தது. இவர்களுக்கு மூன்றாம் பாலினம் என்ற சட்ட அங்கீகாரத்தை அளிக்க வேண்டுமென்றும், அவர்களுடைய அடிப்படை உரிமைகளான அரசியல் சாசன ஷரத்துகள் 14ம் 21ம் பாதுகாக்கபடவேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

திருநங்கைகள் சிலர், தங்களின் மனுவையும் இத்துடன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரினார்கள். மூன்று திருநங்கைகளின் அனுபவங்களை அப்படியே இந்த தீர்ப்பில் பதிவு செய்திருப்பதைப் படிக்கலாம். மாற்றுதிறனாளிகளின் நிலைமையை பார்த்தோமானால் வெளி உலகம் அவர்களுடைய தேவையை பூர்த்தி செய்யாமல் இருக்கலாம்.

ஆனால் பொதுவாக அவர்க்ளுக்கு வீட்டில் அனுதாபமும் அன்பும் கிடைக்கும். திருநங்கைகளுக்கோ வீடே முதல் எதிரி. பெற்றோர்களே இவர்களைக் கண்டு அவமானப்படுவார்கள். நாமக்கல்லில் பிறந்த ஒருவர் தனது பிரமாணபத்திரத்தில் தன் தாயாரும் அண்ணனும் தன்னை கிரிக்கெட் மட்டையை வைத்து அடித்தார்கள் என்று கூறுகிறார். இது ஒரு பானைச் சோற்றின் ஒரு சோறு.

பாலியல் அடையாளம் நாம் பிறக்கும் பொழுதே நிர்ணயிக்கப்படும். பொதுவாக நம் உடலும் உள்ளமும் ஒத்துப்போகும். ஆனால் சிலருக்கு உடல் ஒரு புறமும் உள்ளமும் மனதும் மறு புறமும் இழுக்கும். பாலியல்பு ஒருவர் ஆணால் ஈர்க்கப்படுகிறாரா அல்லது பெண்ணாலா என்பதை பொருத்து உள்ளது என்று இந்த தீர்ப்பு கூறுகிறது.

ஐ.நா.வின் மனித உரிமைப்பற்றிய சர்வதேச அறிக்கை பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளை காக்கவேண்டும் என்று கூறுகிறது. வர்ஞ்ஹ்ஹந்ஹழ்ற்ஹ டழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங்ள் ர்ய் ற்ட்ங் ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் ர்ச் ஐய்ற்ங்ழ்ய்ஹற்ண்ர்ய்ஹப் ஏன்ம்ஹய் தண்ஞ்ட்ற்ள் ப்ஹஜ் ண்ய் ழ்ங்ப்ஹற்ண்ர்ய் ற்ர் நங்ஷ்ன்ஹப் ஞழ்ண்ங்ய்ற்ஹற்ண்ர்ய் ஹய்க் எங்ய்க்ங்ழ் ஐக்ங்ய்ற்ண்ற்ஹ் என்பவை, 2009 நவம்பரில் 6 முதல் 9 வரை இந்தோனேஷியாவின் நகரமான யோக்யகர்தாவில் மனித உரிமை அறிஞர்கள் பாலியல்பு வேற்றுமைகளைப்பற்றி ஆராய்ந்து வரைந்து தந்த கோட்பாடுகள்தான். இந்த யோக்யகர்தா கோட்பாடுகளில் பாலியல் சிறுபன்மையினரின் அனைத்து உரிமைகளும் அடங்கும்.

உச்சநீதிமன்றம் இந்த கோட்பாடுகளையும் பின்பற்றியுள்ளது. இந்த சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இங்கிலாந்து, நெதெர்லாண்ட்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா,கானடா, ஆர்ஜெண்டினா முதலிய நாடுகள் இவர்களின் மனித உரிமைகளை காக்க சட்டங்கள் இயற்றியுள்ளன.

இதைப் பற்றி நாம் ஏன் தெரிந்துக் கொள்ளவேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். மனித உரிமைகள் விலைமதிக்க முடியாதவை. அவை பறிக்கப்படுவர்களுக்குத் தான் அந்த வலி தெரியும். ஆல்பி சாக்ஸ் என்பவர் தென்னாப்பிரிக்காவின் நீதிபதி. பிரமிக்கத்தக்க மனிதர். அவர் சட்டமும் வாழ்க்கையும் செய்யும் வினோத ரசவாதம் (பட்ங் நற்ழ்ஹய்ஞ்ங் அப்ஸ்ரீட்ங்ம்ஹ் ர்ச் கண்ச்ங் ஹய்க் கஹஜ்) என்ற புத்தகத்தில் ஒரு வழக்கைப் பற்றி பின்வருமாறு எழுதியிருப்பார்:

"அடுத்ததாக எங்கள் நாட்டின் உச்சநீதிமன்றம் 1930இல் அளித்த படு மோசமான தீர்ப்பு. தபால் அலுவலகத்தில் வெள்ளையர்கள் வரிசையில் நாங்கள் ஒதுக்கப்படுகிறோம் என்று இந்தியர்கள் முறையிட்டார்கள். நான்கு நீதிபதிகள் இந்த வழக்கைக் கேட்டார்கள். அதில் மூன்று பேருக்கு இதில் என்ன தவறு, எந்த வரிசையில் நின்றாலும் தபால் கார்டு கிடைக்குமே என்று தோன்றியது. கார்டினர் என்ற நீதிபதி மட்டும் இது வெறும் செயல்பாடு பொறுத்தது இல்லை; இது ஒருவர் மரியாதையைப்பற்றியது. அவர் ஒதுக்கப்படாதிருக்க வேண்டிய உரிமைப்பற்றியது என்று சொன்னார்'.

ஆல்பி சாக்ஸ் நம்முடைய சமத்துவம் திராட்சை தோப்பு சமத்துவமா (அனைத்தையும் தூக்குவது) இல்லை மயான சமத்துவமா (தரை மட்டமாக்குவது) என்று கேட்பார். 1930இல் தென்னாப்பிரிக்காவில் நீதிபதிகள் வெள்ளையர்களாகத்தான் இருந்திருப்பார்கள். விலக்கப்படுபவர்களின் வலி விலக்குபவர்களுக்கு புரிவது அரிது.

திருநங்கைகள் பாலியல் தொழில் செய்கிறார்கள் என்று நாம் குறை சொல்கிறோம். அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளை தீர்க்காமல் குறை மட்டும்சொல்வது நியாயமில்லை. தில்லியில் சட்ட உதவி மையம் ஒன்றை நடத்தும் லயா வாசுதேவன் என்பவர் திருநங்கைகளின் பொது முறையீட்டுக் கூட்டத்திற்க்கு என்னை ஒரு முறை அழைத்தார். நேராக இந்த சமூகத்தின் வலியையும் சோகத்தையும் அங்கு பார்த்தேன். இவர்களைப்பற்றி ஒன்றும் தெரிந்து கொள்ள முயற்ச்சி செய்யாமலேயே நாம் அவர்களிடமிருந்து விலகிச் செல்கிறோம்.

இவ்வகை பாலியல் சிறுபான்மையினரை குறிப்பிட பல சொற்கள் உள்ளன என்று சொல்லி ஒவ்வொன்றுக்கும் இடையே இருக்கும் சிறு வித்தியாசங்களை இந்த தீர்ப்பு விளக்குகிறது. அவை ஹிஜ்ரா, அரவாணி, திருநங்கை, கோதி, கின்னர், ஜோகப்பா, சிவ்-சக்தி முதலியவை. உலகம் அவர்களை விலக்கி ஒதுக்குவதால், அவர்களுக்கு மருத்துவ உதவியும் அறிவுரையும் கிடைப்பதில்லை.

அதனாலேயே இவர்களுக்கு எச்.ஐ.வி. நோய் பரவுகிறது என்று மருத்துவ உலகம் கூறுகிறது, இது அவர்களுடைய ஷரத்து 14 மற்றும் 21 உரிமைகளை பறிப்பதன் விளைவுதான். இந்த தீர்ப்பில் ஒரு முக்கியமான வாசகம் காணலாம். ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் பொருளாதார வளர்ச்சியில் இல்லை, ஒருவரின் கண்ணியம் எந்த அளவிற்கு காக்கப்படுகிறது என்பதில்தான் உள்ளது. நமக்கு 30 மதிப்பெண்கள் தேறுமா என்பதே கேள்விக்குறிதான்.

பாலியல்பு அடையாளம் என்பது என்னைப் பற்றிய ஒரு முக்கிய அறிகுறி. நான் யார் என்பதை வெளிபடுத்தும் உரிமை. இதை என்னிடம் இருந்து பறிக்க முடியாது. இதுவும் அரசியல் சாசனத்தில் கண்டுள்ள ஒரு அடிப்படை உரிமைதான். இவர்களுடைய உடலும் மன இயல்பும் ஒத்து போகவில்லை என்பதனால் அவர்கள் மனித உரிமை பாதுகாப்பிற்கு உரிமையற்றவர்கள் அல்ல.

பள்ளிகூடம், கல்லூரி, விளையாட்டு போட்டிகள், இயல் இசை நாடகம் இவைகளை அனுபவித்தல், விருப்பப்பட்ட பணி செய்யும் வாய்ப்பு, மண வாழ்வு, குழந்தைப்பேறு, சொத்துரிமை, நண்பர்கள், இப்படி எத்தனையோ அனுபவங்கள் நம் வாழ்வில் நம்முடைய உரிமை என்று நாம் நினைக்கிறோம். அதுபோலவே திருநங்கைகளும் மற்றும் வேறு வகையில் வித்தியாசமாக இருப்பவர்களும் நியாயமாக ஆசைப்படலாம். மனித உரிமை என்பது எல்லா மனிதர்களுக்கும் உரியது.

ஒரு சட்டம் இயற்றி இனிமேல் ப, பி, பு பெ, பொ என்ற சொல்லில் துவங்கும் பெயருடையவர்களுக்குக் கல்லூரிகளில் அனுமதி இல்லை என்றால் அது அர்த்தமற்றதாக இருக்கும் இல்லையா? அப்படித்தான் திருநங்கைகளை மனித உரிமைக்கு தகுதி அற்றவர்கள் என்று ஒதுக்குவதும். இந்த உரிமையை நிலை நாட்டத்தான் இந்த தீர்ப்பு.

தமிழ் நாட்டில் திருநங்கைகளின் நலன் கருதி பல திட்டங்களை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. அறுவை சிகிச்சையால் உடலை பாலியல்பிற்கு ஏற்றாற் போல மாற்ற வகை உள்ளது. அதில் தவறு நேராமல் இருக்கக் கண்டிப்பான விதிமுறைகளை வகுக்க வேண்டும். பெண் ஆணாக மாறுவதும், ஆண் பெண்ணாக மாறுவதும் எளிதல்ல. கரும்பலகையில் ஒரு சொல்லை அழித்து இன்னொன்றை எழுதுவது போல இல்லை. சமூக அங்கீகாரம், உளவியல் ரீதியாக சரி செய்துகொள்ளல் மேலும் எத்தனையோ சிரமங்கள்.

சட்டத்தின் கட்டுப்பாடு, பொது ஒழுங்கினால் மட்டும் வந்து விடாது, சமூக நீதியை அடித்தளமாகக் கொண்ட பொது ஒழுங்கினால் மட்டுமே வரும் என்று அழுத்தமாக இந்த தீர்ப்பு சொல்கிறது. சட்டத்தின் நோக்கமே சமூக நலனை நிறுவுவதுதான். சமூக நலன் என்றால் சமூகத்தின் அனைத்து அங்கத்தினருக்கும் எல்லா நன்மையும் கிட்டவேண்டும்.

சிலருக்கு அது கிடைக்காமல் போகுமானால் அது பொது நலம் சார்ந்த சமூகம் இல்லை. அந்த சமூகத்தில் நீதி இல்லை; நேர்மை இல்லை; பாரபட்சமின்மை இல்லை. ஜனநாயகத்தின் எல்லா அங்கங்களும் சம நீதி என்ற அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டால்தான் அது ஒரு உண்மையான மக்களாட்சியாக ஒளிரும் என்று அழுத்தமாக இந்தத் தீர்ப்பு சொல்கிறது.

சுனில் பாபு பந்த் முதலியோர் எதிர் நேபாள் அரசு (ரழ்ண்ற் ல்ங்ற்ண்ற்ண்ற்ண்ர்ய் ய்ர் 9172007 க்ஹற்ங்க் 21-12-2007) என்ற வழக்கில் நேபாள் நாட்டின் உச்சநீதிமன்றம், ஒரு அரசு மூன்றாம் பாலினத்தினரின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்று கூறியது.

முஹம்மது அஸ்லாம் காகி எதிர் காவல்துறை வழக்கில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் எல்லோரும் இவர்களின் உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பளிக்க வேண்டும். இவர்களின் கண்ணியத்தையும் காக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இது போல உலகத்தில் பல நாடுகளின் உத்தரவுகளை அந்தத் தீர்ப்பில் காணலாம்.

ஒரு குட்டி ஃப்ளாஷ் பேக். சிறு வயதில் பத்து பதினைந்து பேர்கள் சேர்ந்து விளையாடுவோம். எனக்கு விளையாட்டில் சாமர்த்தியம் பத்தாது. எப்போதும் கண்ணை மூடி நூறு எண்ணி மற்றவர்களைக் கண்டுபிடிப்பவளாக என்னைத் தள்ளிவிடுவார்கள். எனக்கு துடிப்பாகத் தேடவும் தெரியாது. ஒளிந்து கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் எல்லோரும் மாங்காய், கமர்க்கட் எல்லாம் தின்று மகிழ்வார்கள்.

திக்குத் தெரியாத காட்டில் உன்னை தேடித்தேடி இளைத்தேன், கால் கை சோர்ந்து விழலானேன் சங்கதிதான். இறுதியில் என்ன ஓடிப் போய் என் அம்மம்மா (அம்மாவின் அம்மா) விடம் முறையிடுவேன். அவர் எல்லோரையும் பார்த்து அவளை அழவிடாதீர்கள் என்பார். நம்முடைய எல்லா அனுபவமும் இப்படித்தான் மறு பதிப்பாகி வேறு தோற்றத்தில் வரும்.

நாம் திருநங்கைகளை சேர்த்துக்கொள்ளாமல் வாழ்க்கையை ஆடுகிறோம். அவர்கள் மட்டுமல்ல அவர்களைப்போல பல வித்தியாசமானவர்களின் கதியும் அதுதான். அவர்கள் போய் நீதிமன்றத்தில் முறையிடுகிறார்கள். நம் நாட்டில் எல்லோரும் சமம். உயர்வு தாழ்வு கிடையாது. எல்லோரும் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும்.

உண்மையான ஜனநாயகத்தில் யாரையும் வேற்றுமைப் படுத்தக்கூடாது. அது அரசியல் சாசனத்திற்குப் புறம்பானது என்று நீதிமன்றம் நமக்குச் சொல்லும். அதே செய்திதான் இங்கும் சொல்லப்பட்டுள்ளது

இந்தத் தீர்ப்பில் நீதியரசர்கள் ராதாகிருஷ்ணனும் ஸிக்ரியும் திருநங்கைகள், அவர்களின் உரிமைகள், உரிமை மீறல்கள், இந்த சமூகத்தின் கடந்த காலம், உலகம் அவர்களை எவ்வாறு பார்த்தது, அவர்களின் உரிமைகள் எப்படி காக்கப்பட வேண்டும் என்பதை பற்றியெல்லாம் எழுதியுள்ளார்கள்.

ஆனால் இந்த தீர்ப்பின் வீச்சு இவர்களையும் தாண்டிச் செல்கிறது. வலுவில்லாத எந்தவொரு வேற்றுமைப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இது பொருந்தும். இந்தத் தீர்ப்பின் சிறப்பே அதுதான்.

ஆமாம், நெஞ்சில் கசிவு இருப்பது தானே நீதி? "தீயினுள் தேறல் நீ' என்று துவங்கி, "அறத்தினுள் அன்பு நீ' என்று அன்றே தமிழ் பாடியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.