தற்போது வட மாநிலங்களில் ஹோலி பண்டிகைக்கு உபயோகப்படுத்தும் வண்ணப்பொடி மற்றும் பீச்சி அடிக்கும் குழாய்கள் 90 சதம் சீன நாட்டு பொருள்களாகவே உள்ளன.
இதனால் அலாகாபாத், ஆக்ரா, மதுரா, கான்பூர், லக்னெü, வாராணசி, பாட்னா உள்ளிட்ட பல இடங்களில் வண்ணப் பொடி தயாரிக்கும் சிறு ஆலைகள் சுமார் 1000-க்கு மேல் மூடப்பட்டுவிட்டன எனத் தெரியவந்துள்ளது.
மின்னியல் மற்றும் மின்னணுப் பொருள்கள் உற்பத்தி இந்தியாவில் 40 சதம் குறைந்து விட்டது. சீனப் பட்டாசால் சிவகாசி பட்டாசு வியாபாரம் 20 சதம் குறைந்துவிட்டது.
சுதேசி பொருள்கள் விற்பனை குறைவதால், பொருள்கள் உற்பத்தியாகும் அந்தந்த நகரங்களில் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. 2012-2103-ஆம் ஆண்டின் நம் நாட்டின் இறக்குமதி மதிப்பு 26,75,641 கோடி ரூபாயாகும். ஏற்றுமதி 16,33,635 கோடி ரூபாயாகும்.
இதனால், இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 10,42,006 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த 5 ஆண்டுகளாக வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு அதிகரித்து வருவது வருத்தப்பட வேண்டிய விஷயமாகும். இதனால் நாணயத்தின் மதிப்பு குறைகிறது.
பல பொருள்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், விலை குறைவு என அதே பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். நமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதில் சீனா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
சீனாவில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு மற்றும் அவர்களது தொழில்நுட்பம், நிர்வாகத் திறன் போன்றவை உற்பத்திப் பொருள்களின் விலையை குறைவாக்குகின்றன.
இந்தியாவில் உற்பத்தி வரி, சேவை வரி, அந்த வரிகளுக்கான கூடுதல் வரி, உள்ளூர் வணிக வரி, வேறு மாநிலத்துக்கு விற்றால் வேறு வரி, நகராட்சி வரி, சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிம வரி என பல வரிகள் உள்ளன.
இந்த வரிகளைச் செலுத்துவதில் உள்ள கஷ்டமான காரியம் இவற்றுக்கு உரிய ஆவணங்களைத் தயாரிப்பது. இத்தகைய பல முனை வரிகளை அகற்றி விட்டு, தொழில்களுக்கு என ஒரே வரி விதிக்கப்பட்டால் சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்படாது.
இந்தியாவில் தொழிலாளர்கள் நலச் சட்டம் உள்ளது. இதில் மனிதமீறல் போன்ற பல வழக்குகளும் இங்கு போடப்படும். நம்நாட்டில் ஆலை
தொடங்க நிலத்தை வாங்கியதிலிருந்து ஒவ்வொரு துறையாக அனுமதி பெற நீண்ட காலம் ஆகிறது.
கால தாமதமும், நிலம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு செலவுகளும் உற்பத்திச் செலவினை கூட்டி விடுகின்றன.
சிறிய ஆலைகள் பெரிய நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவற்றை சப்ளை செய்துவிட்டு, பணத்திற்காக மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியதுள்ளது.
உலகிலேயே அதிகமாக வட்டிவிகிதம் உள்ள நாடுகளின் பட்டியலில் நமது நாடும் உள்ளது. பெரிய ஆலைகளுக்கு கடன் வழங்க வங்கிகள் முன்வருகிறது.
சிறிய ஆலைகளை தொடங்குபவர்களுக்கு வங்கி கடன் கிடைப்பதில் கால தாமதம் ஆகிறது. இதனால் சிறு தொழில்முனைவோர் தனியாரிடம் கடன் பெற வேண்டிய நிலை உருவாகிறது. ஆலையில் உற்பத்தி தொடங்கும் முன்னர் வட்டியின் சுமை அதிகமாகிவிடுகிறது.
கடன் கிடைக்காமல் தொழில்முனைவோர் தினசரி பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதுள்ளது. சிறிய ஆலைகள் தவணையோ, வட்டியோ செலுத்தாவிட்டால், நோட்டீஸ் அனுப்பப்பட்டு உரிமையாளர்கள் அவமதிக்கப்படுகிறார்கள்.
அரசியல், கொள்கை முடிவுகளை அமல்படுத்துதல், வெளிப்படைத் தன்மை, உரிய இடம், உள்கட்டமைப்புகள், அனுமதி வாங்குவதில் ஏற்படும் கால தாமதம், மூலப்பொருள்களின் விலையேற்றம், தொழிலாளர் நலச் சட்டங்கள், வரிகள், வங்கி கடன், வட்டி விகிதம், லஞ்சம் ஆகியவற்றால் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறை வளர்ச்சி பெற முடியாமல் தத்தளிக்கிறது.
இந்தியாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடங்கள் மூன்று கோடிக்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் சுமார் எட்டு கோடி பேர் பணிபுரிகின்றனர். இந்தியப் பொருளாதாரத்தில் சிறு தொழில்களின் பங்கு மகத்தானதாகும்.
அண்மைக் காலமாக சிறு தொழில்கள் ஏற்றுமதி குறைந்து வருகிறது. 2005-06-ஆம் ஆண்டில் சிறு தொழில்களின் நேரடி ஏற்றுமதி 33 சதமாக இருந்தது. 2007-08-ஆம் ஆண்டில் 30.8 சதமாக குறைந்து விட்டது.
உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் சிறு தொழிற்சாலைகள் உள்ளன. அடுத்தபடியாக தமிழ்நாடு, மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
அனைத்து தொழில்களிலும் பிரச்னை உள்ளது. முடிந்த மட்டும் களைந்து தொழிலை வளர்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சங்கரநாராயண சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திமுக பொய் பிரசாரம்: அதிமுக நிா்வாகி ஆட்சியரிடம் புகாா்

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

