மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சிறுபான்மை தீர்ப்பும் - புதைந்த உண்மையும்

2002-இல் என்று நினைக்கிறேன். ஸ்டைனர் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் சென்னைக்கு வந்திருந்தார்.

Updated On :10 மே 2015, 7:54 pm

 இங்கொன்றும் அங்கொன்றுமாக இல்லாமல்,
 பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க
 வேண்டுமே என்பதற்காக ஒரு சின்னமாக
 இல்லாமல், பின்புலத்தில் ஓர் ஆணின்
 செல்வாக்கின் காரணம் இல்லாமல்,
 பெண்கள் பதவிக்கு வர வேண்டும்.

 2002-இல் என்று நினைக்கிறேன். ஸ்டைனர் என்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் சென்னைக்கு வந்திருந்தார். நம் பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றினார்.
 அதற்குப் பின்பு தேநீர் நேரத்தில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தபொழுது அவர் என்னைப் பார்த்து, "பெண் நீதிபதிகள் எண்ணிக்கை கூடினால், சொல்லப்படும் தீர்ப்புகளின் வீச்சும், ஆழமும் வேறுமாதிரி இருக்குமா?' என்று கேட்டார். "நிச்சயமாக இருக்கும்' என்று யோசித்துக்கூட பார்க்காமல் பதிலளித்தேன்.
 "இன்று உலகத்திலேயே முதல்முறையாக...' என்று ஒருவிதமான குரலில் திரைப்பட ஒலிபரப்பு அறிவிப்பு வருமே, அது மாதிரி முதல்முறையாக அமெரிக்க அதிபர் பதவிக்கு ஒரு பெண் போட்டியிடக் கூடும் என்று தெரிகிறது.
 அவர் போட்டியிட்டு வென்றால், அதனால் உலகமே உடனடியாக மாறிவிடுமா என்ன? அப்படி இல்லை. இதுபோல ஒரு பிரதமர், ஒரு முதல்வர், ஒரு நீதிபதி பெண்ணாக இருந்தால் போதாது, இன்றும் பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் ஒரேயொரு பெண் நீதிபதிதான்.
 இதுபோல, இங்கொன்றும் அங்கொன்றுமாக இல்லாமல், பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமே என்பதற்காக ஒரு சின்னமாக இல்லாமல், பின்புலத்தில் ஓர் ஆணின் செல்வாக்கின் காரணம் இல்லாமல், பெண்கள் பதவிக்கு வரவேண்டும். அப்பொழுதுதான் தெரியும்.
 ஒபாமா இரு முறை அதிபர் பதவிக்கு வந்தார். அதனால், அவர் இனத்தவரின் நிலைமை மாறிவிட்டது என்று சொல்லமுடியுமா என்ன? அண்மையில் எவ்வளவு தடவை அமெரிக்க போலீஸ் காரணமே இல்லாமல் அந்த இனத்தவரை சுட்டுத் தள்ளியதைப் பார்த்துவிட்டோம். இனப் பாகுபாடு இன்றும் மேளதாளத்துடன் அங்கே வாழ்கிறது.
 ஓர் அற்புதமான பெண்மணி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் எழுதிய சிறப்பான தீர்ப்பைக் காண்போம்.
 "என் வாழ்வின் கதை ஒவ்வொருவரின் அனுபவங்களையும் எதிரொலித்தது என்பதுதான் அது. வறுமை, இளம் வயது முதல் நீரிழிவு நோய், துணையற்ற தாயால் மட்டுமே வளர்க்கப்படுதல் - என்பது போன்ற சவால்கள் ஒன்றும் அபூர்வம் இல்லை, ஆனால், அந்தச் சவால்கள் என்னை அபூர்வமான சாதனைகளைச் செய்யவிடாமல் தடை செய்யவில்லை.
 இதுபோன்ற சுமைகளைத் தாங்குபவர்களின் கனவுகள்கூட நனவாகின்றன என்பதைக் காணும்போது பலருக்கு அது நம்பிக்கையின் ஊற்றாக மாறுகிறது'.
 இது யாருடைய குரல்? இவர்தான் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் இருக்கும் மூன்று பெண் நீதிபதிகளில் ஒருவரான சோனியா சோடோமேயர். அமெரிக்காவில் மொத்தம் ஒன்பது நீதிபதிகள்தான் உச்சநீதிமன்றத்தில். அவர்களுக்குப் பணி ஓய்வு
 கிடையாது.
 இவர் புவேர்டோரிகோ என்ற நாட்டில் இருந்து அமெரிக்கா வந்தவர். சிறுபான்மை இனத்தவர், தந்தைக்குக் குடிப்பழக்கம். எதையும் ஒளிக்காமல் தெளிவாக "என்னருமை உலகமே' என்ற அவரது சுயசரிதையில் எழுதியுள்ளார். அவர் நீதிபதியாகப் பணியைத் துவங்கிய முதல் நாளுடன், இந்த மீன் தன் குளத்தை வந்தடைந்தது என்று இந்த நூலை
 முடிப்பார்.
 ஷூயேட் எதிர் ஆஅஙச (நஸ்ரீட்ன்ங்ற்ற்ங் ஸ்ள் ஆஅஙச) என்று ஒரு வழக்கு. 2014-இல் தீர்ப்பானது. இது இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட ஒன்று. இதை அந்த நாட்டில் உறுதியளிக்கும் செயல்பாடு (ஹச்ச்ண்ழ்ம்ஹற்ண்ஸ்ங் ஹஸ்ரீற்ண்ர்ய்) என்பார்கள். அந்தச் சொற்களின் தொனியே நன்றாக இல்லை.
 சிறுபான்மை இனத்தவரின் மேற்படிப்பு தொடர்பாக நிலுவையில் இருந்த கொள்கையை மிச்சிகன் மாநிலம் மாற்றியது. இதனால், அவர்களது உரிமை பாதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடுத்த வழக்கில் மேல்முறையீட்டு நீதிமன்றம் (இர்ன்ழ்ற் ர்ச் அல்ல்ங்ஹப்ள், நண்ஷ்ற்ட் இண்ழ்ஸ்ரீன்ண்ற்) சிறுபான்மையினரின் கட்சியை ஏற்றுத் தீர்ப்பளித்தது.
 அதற்குமேல் உச்சநீதிமன்றம். அங்கு இருந்த ஒன்பது நீதிபதிகளில் ஒருவரான எலேனா ககன் என்ற பெண் நீதிபதி வழக்கில் பங்கேற்கவில்லை. மீதம் இருந்த எட்டு பேரில் ஆறு பேர் ஆண்கள். அவர்கள் எல்லோரும் கொள்கை மாற்றத்தில் குறுக்கிட முடியாது என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்துவிட்டார்கள்.
 நீதிபதி சோனியா சோடோமேயர் அதை மறுத்து தனியாக ஒரு தீர்ப்பை எழுதினார். அவர் எழுதியதை நான் ஆமோதிக்கிறேன் என்று நீதிபதி ரூத் மரியா கின்ஸ்பர்க் கூறினார். 6-2 என்றால் எந்தத் தீர்ப்பு வென்றிருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்தத் தீர்ப்பைப் படிக்க வேண்டும்.
 இப்படித்தான் நம் நாட்டில் நெருக்கடி நிலை சமயத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.ஆர். கன்னா, "அடிப்படை உரிமைகளை எந்தச் சூழ்நிலையிலும் ரத்து செய்ய இயலாது' என்று சொன்ன தீர்ப்பும் (அஈங ஒஹக்ஷஹப்ல்ன்ழ் ஸ்ள் நட்ண்ஸ்ந்ஹய்ற் நட்ன்ந்ப்ஹ அஐத 1976 நஇ 1207) இது போலவே மைனாரிட்டி தீர்ப்பு.
 பிற்பாடு அன்று அவர் சொன்னதுதான் சரி என்று ஊர்ஜிதமானது. மற்றோர் உச்சநீதிமன்ற நீதிபதியும் 30 ஆண்டுகளுக்குப் பின், "நான் அன்று சொன்ன தீர்ப்பு தவறு. கன்னாவின் தீர்ப்புதான் சரி' என்று ஒப்புக்கொண்டார்.
 இப்பொழுது நாம் அமெரிக்கத் தீர்ப்பைப் பார்ப்போம் - "இனம் என்பது கருதப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், சிறுபான்மை இனத்தவர் பல ஆண்டுகளாக அரசியல் செயல்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்கள்.
 இனம் என்பது கருதப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால், நம் சமூகத்தில் சமத்துவம் இல்லை. அதனால், மறைக்க முடியாத சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் உள்ளன. பல நூற்றாண்டு காலமாக இருந்த இந்த ஏற்றத் தாழ்வினால் ஏற்பட்ட விளைவுகளின் தாக்கத்தை பல இடங்களில் காணலாம்.
 ஆனால், இனம் என்பது கருதப்பட வேண்டிய ஒன்றல்ல என்று என் சக நீதிபதிகள் கூறியுள்ளது வருத்தப்பட வேண்டியதாகும். இந்த ஏற்றத் தாழ்வை சமன்படுத்துவதைவிட்டு இருக்கையில் அமர்ந்துகொண்டு வாளாவிருப்பது நீதித் துறைக்கு அழகல்ல.
 கல்விக் கூடங்களில் சமூகத்தின் வெவ்வேறு முகங்கள் ஒன்று சேர்ந்தால்தான், அடுத்த தலைமுறை ஆரோக்கியமாக உருவாகும். நம் அரசியல் சாசனம் சிறுபான்மை இனத்தவரின் வழியில் தடைக் கற்களை ஏற்படுத்த பெரும்பான்மையினருக்கு பூரண சுதந்திரத்தை அளிக்கவில்லை.
 இன்றையத் தீர்ப்பு காலம்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வலுவிழக்கச் செய்கிறது. அனைவரும் பங்கேற்கும் மக்களாட்சி என்ற கனவை நனவாக்கும் நம்பிக்கையை இந்த தீர்ப்பு கொடுக்காது' - எத்தனை ஆணித்தரமான வாக்கியங்கள்.
 ஆறு நீதிபதிகள் ஒரு வழியில் செல்லும்பொழுது நமக்கேன் பாடு என்று இந்த இருவரும் மெüனம் சாதிக்கவில்லை.
 அந்த நூலின் முன்னுரையில் அவர் எழுதியிருப்பார். இளநிலை நீரிழிவு நோய் பற்றிய ஒரு கருத்தரங்கத்தில், ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி, "இந்த நோயுடன் வாழ்வது என்றாவது ஒரு நாள் எளிதாகுமா?' என்று என்னைப் பார்த்து ஏக்கத்துடன் கேட்டாள்.
 மற்றோர் இடத்தில், "இளம் வயதிலேயே தந்தையை இழக்க நேரிட்டதை எவ்வாறு தாங்கிக் கொண்டீர்கள்?' என்று பெற்றோரில் ஒருவரை இழந்த ஒரு குழந்தை என்னைக் கேட்டாள்.
 "இரு வேறு உலகங்களின் நடுவே வாழ்வது எப்படி? என் சமூகத்தினருடன் எவ்வாறு தொடர்பு வைத்துக் கொள்கிறேன்? பாரபட்சமாக என்னை யாரேனும் நடத்தியுள்ளார்களா?' என்று சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் என்னைக் கேட்பார்கள்.
 "பணியின் சுமைக்கும், வீட்டு வாழ்க்கையின் நிர்வாகத்துக்கும் இடையே நான் எவ்வாறு நடுநிலை பிறழாமல் இருந்தேன்?' என்று இளம் வழக்குரைஞர்களாகப் பணிபுரியும் ஆண்களும், பெண்களும் என்னைக் கேட்பார்கள்.
 என்னை மிகவும் குழப்பமடைய வைத்து இந்த நூலை எழுத என்னைத் தூண்டிய கேள்வி, "உங்களுடைய இன்பமான இளம் பருவம் எந்த அளவுக்கு உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவியது?' என்பதுதான்.
 "இந்தக் கேள்விக்கு விடையளிக்க நான் மிகவும் திணறினேன். இந்த நூலை எழுதும் வரை நான் வளர்ந்த நாள்களின் இருண்ட அனுபவங்களைப் பற்றி பொதுவில் பேசியதில்லை. என் இளம் பிராயம் கலப்படமற்ற இன்பமானது அல்ல' என்று நீதிபதி சோனியா சோடோமேயர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
 இந்த வரிகளில்தான் நான் ஸ்டைனருக்கு அளித்த விடையின் உள்கருத்து புதைந்துள்ளது என்று நினைக்கிறேன்.
 
 கட்டுரையாளர்:
 நீதிபதி (ஓய்வு).
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.