காலம் யாருக்காகவும் காத்திராமல் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜனவரி முதல் தேதி அன்று இருந்த அதே நிலையில் எந்த நாள் காட்டியும் டிசம்பர் வரை இருப்பதில்லை. கடைசி மாதம் அது தன் பலம் முழுவதையும் இழந்து பொலிவற்று காணப்படும். நாள் காட்டியில் ஒரு நாளை கிழித்தால், நம் வாழ்நாளில் ஒரு நாள் கழிந்ததாகிறது.
அனைத்து உயிரினங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும் காலத்தை நம்பி தான் இருக்கின்றன. நம்மை நாளும் இயக்கிக் கொண்டிருப்பது காலம்தான். அந்தக் காலத்தின் மதிப்பை உணர்ந்து வீணடிக்காமல் பயன்படுத்திக் கொள்ள நாம் பழக வேண்டும். பொருளாதார நிபுணர்கள் நேரத்தை பணம் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் அடிப்படையாக அமைவது காலம் என்ற மூலதனம் தான். ஒரு நிமிடத்தையும் நாம் பயனுள்ள வகையில் செலவழிக்கவில்லை என்றால் அது போனால் போனது தான். பணத்தைக் கொடுத்து இந்த உலகில் எதை வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால், கடந்து போன காலத்தை யாராலும் விலைக்கு வாங்க முடியாது.
காலத்தை நாம் வீணாக்கினால், காலம் நம்மை வீணாக்கும். அரசன், ஆண்டி, ஏழை, பணக்காரர், அறிவாளி, அறிவிலி, சாதாரணமானவர், சாதனையாளர் என அனைவருக்கும் சமமாக அளிக்கப்பட்ட வரம் தான் காலம் என்பது. அதை யாரும் ஒருவரிடமிருந்து பிடுங்கவும் முடியாது, திருடவும் முடியாது, விலை கொடுத்து வாங்கவும் முடியாது.
நாளை என்று நாளை தள்ளி விட்டால் நாள் நம்மை தள்ளி விடும். காலம் நல்ல மருந்து போன்றது. அனைத்து ரணங்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றது.
நாம் ஒவ்வொரு நாளும் உணவில் 20 சதவீதத்தையும், பணத்தில் 30 சதவீதத்தையும், திறமையில் 40 சதவீதத்தையும், நேரத்தில் 60 சதவீதத்தையும் வீணடிப்பதாகவும், நமது வாழ்நாளில் 2 ஆண்டுகள் பிறருக்காக காத்திருப்பதிலும், 9 ஆண்டுகள் பொழுதை வீணடிப்பதிலும், 10 ஆண்டுகள் வருவாய் ஈட்டுவதற்கும், 29 ஆண்டுகள் தூங்குவதற்கும் செலவிடுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சராசரியாக ஒரு மனிதன் 6 மணி முதல் 7 மணி நேரம் வரை தூங்கினால் போதும். ஆனால், ஓய்வு என்ற பெயரில் செயலற்று இருந்தால் உடலும், உள்ளமும் தான் கெடும்.
இன்று செய்ய வேண்டியதை நாளைக்கு என்று தள்ளிப் போடாமல் இன்றே செய்து முடியுங்கள் என்று செஸ்டர் பீல்டு பிரபு என்ற அறிஞர் கூறுகிறார். காலமும், கடல் அலையும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.
காலம் என்பது நாம் பிறந்தவுடன் நம் கையில் இறைவன் கொடுத்தனுப்பும் சொத்து. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்திருக்கும் போது 24 தங்கக் காசுகள் நம் பாக்கெட்டில் போடப்படுகின்றன. அந்தக் காசுகளை சரியாகப் பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். வீணடித்தவர்கள் கலங்கித் தவிக்கிறார்கள்.
ஒவ்வொரு செயலையும் அதற்கென ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் செய்துகொள்ள பழகிக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் முதலில் காலத்தின் அருமையை உணர்ந்து பயன்படுத்த இப்போதே தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லை என்றால் வயதாக, வயதாக ஒவ்வொரு நாளும் காலையில் எழும்போதும், கண்ணாடியில் முகத்தைப் பார்க்கும் போதும், புத்தாண்டு அன்றும் காலம் அவர்களுக்கு அதை நினைவூட்டிக் கொண்டேயிருக்கும்.
ஒவ்வொரு நாளையும் தொடங்கும் போது திட்டமிட்டு செயல்படுவர்கள், அந்த நாளின் பலனை முமுமையாக அடைவார்கள். இல்லையென்றால் குழப்பம் தான் மிஞ்சும்.
ஆண்டு, மாதம், வாரம், நாள், நிமிடம், விநாடி ஆகியவற்றிவன் முக்கியத்துவத்தை அதனால் பாதிப்படைந்தவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஓர் ஆண்டின் மதிப்பை உணர வேண்டுமானால், வகுப்பில் தோல்வி அடைந்த மாணவனையும், ஒரு மாதத்தின் முக்கியத்துவத்தை அறிய முழுவளர்ச்சி அடையாத குழந்தையைப் பெற்றெடுத்த தாயையும், ஒரு வாரத்தின் அருமையை வாரப் பத்திரிகையின் ஆசிரியரையும், ஒரு நாளின் மகத்துவத்தை ஒரு நாள் வேலை இழந்த தினக்கூலி பணியாளரையும், ஒரு மணி நேரத்தின் பெருமையை நமக்காகக் காத்திருந்தவரையும், ஒரு நிமிஷத்தின் இன்றியமையாமையை ரயிலைத் தவற விட்டவரிடமும் ஒரு விநாடியின் அவசியத்தை விபத்தில் இருந்து தப்பியவரையும், ஒரு மில்லியன் விநாடியின் மதிப்பை ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவரையும் கேட்க வேண்டும்.
எந்த நற்செயலிலும் காலம் தாழ்த்தக் கூடாது. அதனால் பயனுள்ள முறையில் நேரத்தை செலவிட வேண்டும். நேற்று என்பது உடைந்த பானை. அது வரலாறாகி விட்டது.
இன்று என்பது கையிலுள்ள வீணை, அதனை மீட்டு அதன் இசையை காது குளிரக் கேட்க நமக்காக தயாராக இருக்கிறது. நாளை என்பது மதில் மேல் பூனை. அது அனைவருக்கும் ரகசியமானது.
நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எந்த நற்செயலிலும் காலம் தாழ்த்தக் கூடாது. எனவே, பயனுள்ள முறையில் நேரத்தைச் செலவிட நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு புதியதோர் அத்தியாயமாகப் பொலிவு பெறுகிறது. இன்று புதியதாய் பிறந்தோம் என்று புதிய கண்ணோட்டத்துடன் நாம் செயலாற்ற வேண்டும்.
காலம் தம் பணியை செவ்வனே செய்து கொண்டு, நம்முடன் நாளும் பயணித்து, அள்ள, அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரமாக விளங்குகிறது. காலம் என்பது ஆதியந்தமில்லாத, அனைவருக்கும் பொதுவான ஒன்று. அது அழியாதது. நாளுக்கு நாள் புத்துணர்வு பெற்றுக் கொண்டே இருக்கும்.
காலம் நம்மை விட்டு எங்கும் போய்விடவில்லை. நம்முடன் நாளும் பயணித்துக் கொண்டிருக்கிறது. காலத்தை முழுமையாகப் பயன்படுத்தியவர்களே காலத்தை வென்று நிலைத்து நிற்கிறார்கள். காலம், இதுவும் கடந்து போகும் என்ற உண்மையை உணர்த்தும் உரைகல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

