எல்லா சிலை​க​ளும் வழி​ப​டத்​தக்​க​வையே!

அ​ண்​மை​யில் நடை​பெற்ற திரி​புரா மாநில தேர்​த​லில் 25 ஆண்​டு​கள் ஆட்சி​யில் இருந்த கம்​யூ​னிஸ்ட் கட்சி தோற்​க​டிக்​கப்​பட்டு

அ​ண்​மை​யில் நடை​பெற்ற திரி​புரா மாநில தேர்​த​லில் 25 ஆண்​டு​கள் ஆட்சி​யில் இருந்த கம்​யூ​னிஸ்ட் கட்சி தோற்​க​டிக்​கப்​பட்டு, பாஜக கூட்டணி வெற்​றி​பெற்​றது. தேர்​தல் முடி​வு​கள் வெளி​யா​ன​துமே, மாநி​லத்​தில் இருந்த லெனின் சிலை உடைக்​கப்​பட்​டது. அதைத் தொடர்ந்து, தமி​ழக பாஜக மூத்த தலை​வர் ஹெச்.​ரா​ஜா​வின் முக​நூல் பக்​கத்​தில், 'அடுத்து தமி​ழ​கத்​தில் ஈ.வெ.ரா. சிலைக்கு' என்று பதி​வி​டப்​பட்​டி​ருந்​தது. அதற்கு பலத்த எதிர்ப்​பு​கள் கிளம்​பவே முக​நூல் பதிவு நீக்​கப்​பட்​ட​தோடு, வருத்​த​மும் தெரி​வித்​தார். மேற்கு வங்​கத்​தில் பாஜ​க​வின் முன்​தோன்​ற​லான பார​திய ஜன​சங்​கத்​தின் தலை​வர் சியாம்​பி​ர​சாத் முகர்​ஜி​யின் சிலை சேதப்​ப​டுத்​தப்​பட்​டது. பிர​த​மர் தலை​யிட்டு சூட்டைத் தணிக்க முற்​பட்​டார். ஆனால், கார​சார விவா​தம் தொடர்ந்​தது.
அர​சி​யல்​ரீ​தி​யாக ஒரு சித்​தாந்​தமோ அல்​லது கட்சியோ தோற்​க​டிக்​கப்​ப​டும்​போது, அதன் அடை​யா​ளங்​க​ளை​யும், சிலை​க​ளை​யும் உடைப்​பது கடந்த இரு​ப​தாம் நூற்​றாண்​டில் சர்​வ​தேச அள​வில் தொடங்​கி​விட்​டது. ரஷி​யா​வில் ஜார் மன்​னர் ஆட்சி அகற்​றப்​பட்​ட​போது, அவ​ரது வீட்டு நாய்க்​குட்டி கூட கொல்​லப்​பட்டு தட​யங்​கள் அழிக்​கப்​பட்​ட​தா​கச் சொல்​லப்​ப​டு​வ​துண்டு. அதன் தொடர்ச்​சி​யாக, 1980-களில் கம்​யூ​னி​ஸம் வீழ்ந்​த​போது, சோவி​யத் யூனி​யன் நாடு​க​ளில் இருந்த பிரம்​மாண்ட லெனின், ஸ்டா​லின் சிலை​கள் அடித்து நொறுக்​கப்​பட்​டன. 
இராக்​கில் சதாம் உசேன் ஆட்சி முடிவு வந்​த​தும், அவ​ரது சிலை ஆக்​ரோ​ஷ​மாக அகற்​றப்​பட்​டது. இந்​தி​யா​வும் அதற்கு விதி​வி​லக்​கல்ல. உத்​த​ரப் பிர​தே​சத்​தில் மாயா​வதி அவ​ரது கட்சி தேர்​தல் சின்​ன​மான யானை​யைப் பெரிய சிலை​க​ளாக வடித்​தி​ருந்​தார். பேர​வைத் தேர்​த​லில் அவர் தோல்​வி​யுற்​ற​தும் அந்த யானை​கள் காணா​மல் போயின. ஆஃப்​க​னிஸ்​தா​னில் பிரம்​மாண்ட புத்​தர் சிலை​கள் உடைக்​கப்​பட்​டது மத ரீதி​யா​னது என்​றா​லும், ஆட்சி மாற்​றத்​தின் விளைவே.
இந்​தியா மீது படை​யெ​டுத்த முக​லா​யர்​கள், கோயில்​க​ளை​யும் குறி​வைத்​த​னர். 
நம் நாட்டி​லேயே அர​சர்​கள் படை​யெ​டுத்​துப் போரிட்​ட​போது கோயில்​களை அழிக்​கும் வழக்​கம் தொடக்​கத்​தில் இருந்​த​தாக சில வர​லாற்​றா​சி​ரி​யர்​கள் கூறு​கி​றார்​கள். ஆனால், பிற்​கா​லத்​தில் அது வழக்​கொ​ழிந்து, சிவ​னும், விஷ்​ணு​வும் அரு​க​ருகே கோயில் கொண்ட அதி​ச​யம் நிகழ்ந்​த​தும் இங்​கே​தான். அது மட்டு​மல்ல. பிற நாட்ட​வர் வழி​ப​டும் கட​வு​ள​ரை​யும் ஏற்​றுக்​கொள்​ளும் பண்பு இங்​கி​ருந்​தது. வெளி​நாட்​டி​லி​ருந்து வந்த பார்சி மதத்​தி​னர் இங்​குள்ள மக்​க​ளோடு இசைந்து வாழ்​கின்​ற​னர். உல​கெங்​கும் சித​றிய யூதர்​கள் பிற நாடு​க​ளில் கொடு​மைப்​ப​டுத்​தப்​பட்​டா​லும், இந்​தி​யா​வில் மரி​யா​தை​யு​டன் நடத்​தப்​பட்​டதை நவீன யூதர் வர​லாறு கூறு​கி​றது.
இந்த மண்​ணி​லேயே தோன்​றிய பெளத்த, சமண மதங்​கள் சூன்​ய​வா​தத்​தைக் கொள்​கை​யாக முன்​வைத்து பிரம்​மாண்​ட​மாக வளர்ந்​தன. வைதிக மதத்தை அசைத்​துப் பார்த்​தன. இன்று பெளத்​தம் ஒரு​சில ஆசிய நாடு​க​ளில் பெரிய மத​மா​கத் திகழ்ந்​தா​லும், இந்​தி​யா​வில் புத்​தரை மஹா​விஷ்​ணு​வின் அவ​தா​ரங்​க​ளில் ஒன்​றா​கக் கரு​து​வோ​ரும் உண்டு. 
நாத்​தி​க​வா​தத்​தை​யும் ஆன்​மி​கத்​தோடு கலந்து பார்த்​தது இங்​கு​தான். சார்​வா​க​மும் சாங்​கிய தத்​து​வ​மும் இந்து தத்​துவ இய​லின் கிளை​யா​கி​விட்​டன. நாத்​தி​கத்தை வெளிப்​ப​டுத்​தும் ஏரா​ள​மான ஆன்​மிக இலக்​கி​யங்​கள் இருக்​கின்​றன. திரு​ஞா​ன​சம்​பந்​தர் காலத்​தில் 'நட்ட கல்​லும் பேசு​மோ?' என்று கேலி பேசி​ய​போது, அதை எதிர்​கொண்​ட​தாக வர​லாறு உண்டு. வால்​மீகி ராமா​ய​ணத்​தில் ஜாபாலி என்ற முனி​வ​ருக்​கும், ராம​ருக்​கும் நடை​பெ​றும் விவா​தத்​தில் நாத்​தி​க​வா​தம், மூட நம்​பிக்கை ஒழிப்பு போன்ற கருத்​து​கள் கூறப்​பட்​டன. ஆத்​தி​க​வா​தம் பேசப்​பட்ட காலம் முழு​வ​தும், நாத்​தி​க​வா​த​மும் பேசப்​பட்​டது. அதை​யும் வர​வேற்ற பரந்த பண்​பாட்​டிற்​குச் சொந்​த​மா​ன​வர்​கள் நாம்.
ஆனால், முந்​தைய எழுச்​சி​க​ளால் விளைந்த சல​ச​லப்​பு​கள் அள​வுக்கு கடந்த நூற்​றாண்​டின் தமி​ழக நாத்​தி​க​வா​தம் பேசப்​ப​ட​வில்லை. பெரிய, பெரிய சுனா​மி​க​ளையே சமா​ளித்த நம்​ம​வர்​க​ளுக்கு, தோர​ணப் பிர​சா​ரங்​கள் எம்​மாத்​தி​ரம்? நாத்​தி​கத் தலை​வ​ரைப் புகழ்ந்​து​கொண்டே அவ​ரது தொண்​டர்​கள் கோயில்​க​ளுக்கு சாரி, சாரி​யா​கச் சென்​ற​னர். திரு​வண்​ணா​மலை கிரி​வ​ல​மும், சப​ரி​மலை யாத்​தி​ரை​யும், பழனி பாத யாத்​தி​ரை​யும் பிர​ப​ல​மா​னது, மிக சமீ​பத்​திய ஆண்​டு​க​ளில்​தான். வீதி​க​ளில் கட​வுள் சிலை​களை உடைத்து 'சிலை​க​ளுக்கு உயிர் இல்லை' என்​ற​வ​ருக்​கும் பெரிய பெரிய சிலை​கள் எழுப்​பப்​பட்​டன. அந்​தச் சிலை​க​ளும் மகத்​து​வம் பெற்று, சிலர் வழி​ப​ட​வும் செய்​தார்​கள். தொண்​டர்​கள் பக்​தர்​க​ளா​னார்​கள்.
இந்து வழி​பாட்டு இய​லில் சிலை வழி​பாடு கீழ்​நி​லை​தான். உரு​வ​மற்ற கட​வுளை வணங்​கு​வ​தும், 'தத்-த்​வ​மஸி' என தன்​னையே கட​வு​ளாக உயர்த்​து​வ​துமே உயர்​நி​லை​யா​கக் கரு​தப்​பட்​டது. அப்​படி உணர்ந்​த​வர்​க​ளையே சமூ​கத்​தில் உயர்​நி​லை​யி​லும் வைத்​தார்​கள். இப்​ப​டித்​தான் வழி​பட வேண்​டும் என்ற பிடி​வா​த​மும் இங்​கில்லை. சிலை​களை வழி​பட்​ட​வர்​களை கீழ்​நி​லை​யில் பார்க்​க​வும் இல்லை. அனை​வ​ருக்​கும் வழி​பாடு சுதந்​தி​ரம் இருந்​தது.
சிலை​கள் இருக்​கட்​டுமே; இங்கு எல்லா சிலை​க​ளும் வழி​ப​டத்​தக்​க​வையே, நாத்​தி​கம் பேசி​ய​வர்​க​ளின் சிலை​கள் உட்​ப​ட.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com