மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா: நமக்கு சொல்லும் சேதி என்ன? 

உங்களுக்கான சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ, ஒரு தடவை ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து விட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ...
மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா: நமக்கு சொல்லும் சேதி என்ன? 

உண்மையான ஜனநாயகம் என்பது மக்களால், மக்களுக்கான அரசாகும். எதிர்பாரதவிதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மக்கள் சேவை செய்யாமல், சுகபோக வாழ்க்கை வாழ்வதுண்டு. தன் கடமையை தவறிய உறுப்பினரை தெர்ந்தெடுக்கும் உரிமையுள்ள மக்களுக்கு அந்த உறுப்பினரை தகுதி நீக்கம் செய்யவோ திரும்ப அழத்துக்கொள்ளவோ ஆற்றல் இருப்பதே நீதியும் சரியான வழியாகும்.

தற்போதைய நிலையில் அவ்வாறான உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வதற்கென சட்ட வழிவகைகள் இல்லை.. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 மட்டுமே உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வழிவகைகளையும் மற்றும் சில தகுதி நீக்க வழிவகைகளையும் சொல்கிறது. ஆனால் மக்கள் அதிருப்தி ஆகும் பொழுது உறுப்பினர்களை திரும்ப அழைக்கும் வழிவகை இல்லை.

உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் திரும்பபெறும் உரிமையை அமல்படுத்திவிட்டன. இது அமெரிக்காவில் அனைத்து மாகாணங்களிலும், வெனிசுலாவில் தேசிய அளவிலும், ஸ்விட்சர்லாந்தில்சிறு அதிகார அமைப்பிலும், இந்தியாவிலும் கூட சில மாநிலங்களில் மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இந்த நடைமுறை அமலில் உள்ளது

அதே சமயம் இந்த திரும்பபெறும் உரிமையை வைத்து, நேர்மையான மக்கள் சேவை செய்யும் பிரதிநிதிகளை உள்நோக்கத்துடன் திரும்பப் பெறுவிடக் கூடாது. சுதந்திரமான தேர்தல் முறை என்பது குடிமக்களின் மிக முக்கிய உரிமையாகும். ஒருமுறை வெற்றி பெற்ற பிரதிநிதி அந்த நம்பிக்கையை தவறாக அனுபவிப்பது தவறான வழிவகையாகும். ஆகவே அந்த பிரதிநிதியை திரும்பப் அழைத்தால் மட்டுமே ஜனநாயகம் முற்றுப் பெறும்.

கடமையை சரியாக செய்யாத எம்பி, எம்எல்ஏக்களை திரும்ப அழைப்பதற்கு வழிவகை செய்யும்  மக்கள் பிரதிநிதித்துவச் (சட்டதிருத்தம்) சட்டம்,2016 மசோதா எண்308/2016 என்னும் தனி நபர் மசோதாவை மக்களவையில் பாரதிய ஜனதாவின் எம் பி வருண் காந்தி சமீபத்தில் தாக்கல் செய்தார். 

இந்த மசோதா நமக்கு  சொல்லும் தகவல்கள் என்ன..?

►இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்பி அல்லது எம்எல்ஏவின் செயல்பாட்டில் திருப்தி இல்லை என்றால் அவரை மக்கள் திரும்ப பெறுவதற்கான மசோதா இது. 

►பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவரிடம் இது தொடர்பான மனுவை சம்பந்தப்பட்ட தொகுதியின் எந்த ஒரு வாக்காளரும் அளிக்கலாம். 

►மனுவின் நம்பகத்தன்மையை ஊர்ஜிதப்படுத்த பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு மனுவை அனுப்ப வேண்டும். 

►நம்பகத்தன்மையை உறுதிப் படுத்திய பிறகு சம்பந்தப்பட்ட தொகுதியிலுள்ள 10 இடங்களில் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்.

►வாக்குப்பதிவில் 75 சதவிகிதம் மக்கள் சம்பந்தப்பட்ட எம்பி அல்லது எம்எல்ஏ விற்கு எதிராக வாக்களித்தால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.. 

►பேரவைத் தலைவர் அல்லது மக்களவைத் தலைவர் பதவி நீக்கப்பட்டதை அறிவிப்பாக வெளியிட வேண்டும்.. 

►வாக்காளர்களுக்கு இந்த உரிமையை தரும் வகையில் 1951 ஆம் ஆண்டு வந்த மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

C.P.சரவணன், வழக்கறிஞர். 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com