தமிழுக்கு தொண்டாற்ற விரும்புவர்களுக்கு  ஒரு வாய்ப்பு…! 

எல்லோருக்கும் ஒரு எண்ணம் இருக்கும், நாமும் தமிழுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று.. ஆனால் நம்மால் தமிழுக்கு என்ன செய்ய முடியும் என்று கூறி
தூங்குகிறதா தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்!
தூங்குகிறதா தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்!


எல்லோருக்கும் ஒரு எண்ணம் இருக்கும், நாமும் தமிழுக்காக ஏதேனும் செய்ய வேண்டும் என்று.. ஆனால் நம்மால் தமிழுக்கு என்ன செய்ய முடியும் என்று கூறி பெருமூச்சு விடுவர். சரி விசயத்துக்கு வருவோம். உலகின் மூத்த மொழி தமிழ் சரி. மூத்த மொழி என்பதற்காக வார்த்தைகள் இருக்கிறாதா என்றால் இருக்கிறது. 

ஆனால், அவ்வளவு தமிழில் பல சொற்கள் இருந்தும் அதில் சொற்ப சதவீதமே கணினிமயமாக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் அகராதிகள் பல இருந்தாலும் அதனை காப்புரிமை இல்லாததாக அறிவித்து கூகுள், மைக்ரோசாப்ட், போன்ற நிறுவனங்களுக்கு கொடுக்கப்படாமல் இருக்கிறது. இந்தப் பணியை அரசுதான் செய்ய வேண்டும் என காத்திருந்தால் இன்னும் பன்னெடுங்காலம் ஆகும்.

இணையத்தில் தமிழ்ச் சொற்கள்
தமிழ் விக்சனரியில் இருக்கும் தமிழின் சொற்களின் எண்ணிக்கை 3,49,474. அயல்மொழி விக்சனரிகளின் சொற்களின் எண்ணிக்கையில் ஒப்பீட்டுப் பட்டியலில் தமிழ் 19 ஆவது இடம். ஆங்கிலம், மலகாஸி, பிரஞ்சு, ரஷியன், செர்போ-குரோசியம், ஸ்பானிஷ், சீன, ஜெர்மன், குர்திஷ், டச்சு, ஸ்வீடிஷ், போலிஷ், லிதுவேனியன், கிரேக்கம், இத்தாலிய, காடலான், பின்னிஷ், ஹங்கேரியன் மொழிகள் சொற்களின் எண்ணிக்கை தமிழை விஞ்சி நிற்கிறது.

தமிழ் பல்கலைக்கழகத்தின் கலைச்சொல் நூல்கள்    
தமிழ்ப்பல்கலைக்கழகம் பின்வரும் கலைச்சொல் நூல்களை வெளியிட்டுள்ளது. அவை, இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள், இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள் இரும்புத் தொழில் கலைச்சொல்லகராதி, உயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி, சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல்லகராதி, தொழில் கலைச்சொல் அகராதி, பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள், மருத்துவக் கலைச்சொற்கள், மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள், வேளாண்மையியல் மண்ணியல் கலைச்சொற்கள் என்னும் இந்த நூல்கள் எதுவும் இன்னமும் இணையத்தில் தேடுபொறி வசதியுடன் மின்னாக்கம் செய்யப்பெறாமல் அச்சு நூல் வடிவத்தில் மட்டுமே உள்ளன. இந்த நூல்களில் காணப்பெறும் தமிழின் வேர்ச்சொல் அடிப்படையிலான சொல்லாக்கங்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பெற வேண்டும்.

19 ஆவது இடத்தில் இருக்கும் தமிழை நான்காவது இடத்திற்கு கொண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை தருகிறார். கிட்டத்தட்ட 40 லட்சம் வார்த்தைகள் அருளி அய்யா போன்றவர்களால் ஏற்கனவே உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனை கணினி மயமாக்குவது மட்டுமே நாம் செய்ய வேண்டிய வேலை. பல நூற்றாண்டுகளாக கடந்து வந்த தமிழ் சொற்கள் காகிதத்தோடு நிற்கிறது. அதனை கணினிக்கு எடுத்துச்செல்லும் தமிழ் பணியை செய்ய விரும்பும் உறவுகள் விருப்பம் தெரிவிக்கவும். முதற்கட்டமாக 2 லட்சம் வார்த்தைகளை டிஜிட்டலாக்க தயாராக இருக்கின்றனர். 

அதனடிப்படையில் தொடங்கினால் மூன்று மாதத்தில் இதனை செய்து விட திட்டம் வைத்துள்ளனர். மதுரையை மையமாகக் கொண்டு இதனை செயல்படுத்த திட்டம். மற்றபடி இதனை சரி பார்ப்பது, இடம், வாடகை போன்றவற்றை நாங்களே பார்த்துக் கொள்கிறோம். தமிழுக்காக தொண்டு செய்ய விரும்பும் நல்ல உள்ளங்கள் அந்த ஆசிரியரை அணுகி உதவவும். இதனை செய்து விட்டால் மொழிபெயர்ப்புகள் வருங்காலத்தில் மிகவும் எளிதாகும். கணினியில் தமிழ் அழியா பொருளாகும்.

ஒருங்கிணைப்பது யார் ?


இந்த திட்டத்தினை யோசித்து, ஒருங்கிணைப்பவர் இங்கர்சால் செல்வராஜ். மயிலாடுதுறையை பூர்வீகமாகக் கொண்டவர். இப்பொழுது நார்வேயில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு தன் தமிழ்ப் பணியாற்றி வருகிறார்.

இணைத் தமிழ் வளர்ச்சித் திட்டம் இது தான்
விக்கிமூலம் - தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க இலக்கிய நூல் முதல் இன்றைய கணிப்பொறி நூல் வரை ஆக சிறந்த தமிழ் நூல்களின் இணையத் தொகுப்பு. இதில் மெய்ப்பு (Spell Check) பார்க்கப்படாத 3,77,321 பக்கங்கள் இருப்பது வேதனை. உங்களால் முடிந்தால் ஒரு பக்கத்தையாவது சரி பாருங்கள். தமிழை அழியா மொழியாக்க அனைவரும் பங்கு பெறலாம் இணையுங்கள், இதனில். மெய்ப்பு பார்க்காத பக்கத்தை, மெய்ப்பு பார்த்த பின், மஞ்சள் வட்டத்தை தேர்வு செய்து பக்கத்தை மெய்ப்பு பார்த்ததாக உறுதி செய்யுங்கள். மற்ற விளக்கங்கள் கமெண்ட்டில் பார்க்கவும்.

ஆங்கில சொற்களுக்கு தமிழ் சொற்களை பலர் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள், புத்தகமாக வெளியிட்டு உள்ளார்கள், புத்தகமாக வெளியிட்டாலோ அல்லது இணையத்தில் அகராதியாக வெளியிட்டாலோ கணினி அதனை கற்றுக் கொள்ளாது., அதை (Artificial Intelligence) கணினி நுண்ணறிவுக்கு கற்றுத்தர வேண்டுமென்ற முனைப்பில் கணினிக்கு கற்பிப்போம் தமிழை என்ற முழக்கத்தை முன்வைத்து சிறிய முன்னெடுப்புகளை எடுத்து வந்தோம். அவை அனைத்தும் நீண்டகால செயல்பாடுகள் என்ற குழப்பத்திலிருந்தபோது, முனைவர் தமிழ்ப்பரிதி மாரி எங்களுக்கு 40 லட்சம் தமிழ் சொற்களை கணினி மயமாகும் திட்டம் இருப்பதாக கூறினார். அதனை முதன்மைப்படுத்தி செய்தால் நமது இலக்கை அடைந்துவிடலாம் என்ற நோக்கத்தில் அவருடன் இந்த பணியை சேர்ந்து செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம். முதல்கட்டமாக காப்புரிமை நீக்கப்பட்ட அகராதிகளை தேடுபொறி வசதியுடன் மின்னாக்கம் செய்து அதனை காப்புரிமை இல்லாததாக அறிவித்து அனைத்து தமிழர்களுக்கும் பொதுவுடமையாக்கி கணினி நுண்ணறிவை பயன்படுத்தும் விக்கி, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற அனைத்து நிறுவனங்களுக்கும் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த முன்னெடுப்பை வள்ளுவர் வள்ளலார் வாசகர் வட்டம் என்ற குழுவினர் செய்துவருகின்றனர். குறிப்பாக, இத்திட்டம் தொடர்பான பரப்புரைகளும், வழிகாட்டல்களும் செய்து புதியவர்களையும் ஊக்குவிக்கிறார்கள். பயனர் இங்கர்சால், நார்வே உடன் தமிழ் விக்கிமீடியப் பங்களிப்பாளர்களான முனைவர் தமிழ்ப்பரிதி மற்றும் நீச்சல்காரன் போன்றோர் ஒருங்கிணைக்கிறார்கள்.

தமிழ்ப்பல்கலைக்கழகம் பின்வரும் கலைச்சொல் நூல்களை வெளியிட்டுள்ளது. அவை, இயந்திரவியல் இயந்திரப் பொறியியல் கலைச்சொற்கள், இயற்பியல், வேதியியல், கணிதவியல் கலைச்சொற்கள் இரும்புத் தொழில் கலைச்சொல்லகராதி, உயிரியல் கலைச்சொல் விளக்க அகராதி, சமூகவியல் மற்றும் மானிடவியல் கலைச்சொல்லகராதி, தொழில் கலைச்சொல் அகராதி, பொறியியல் தொழில் நுட்பவியல் கலைச்சொற்கள், மருத்துவக் கலைச்சொற்கள், மின்னணு-மின்னியல் கலைச்சொல் விளக்க அகராதி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் கலைச்சொற்கள், வேளாண்மையியல் மண்ணியல் கலைச்சொற்கள் என்னும் இந்த நூல்கள் எதுவும் இன்னமும் இணையத்தில் தேடுபொறி வசதியுடன் மின்னாக்கம் செய்யப்பெறாமல் அச்சு நூல் வடிவத்தில் மட்டுமே உள்ளன. இந்த நூல்களில் காணப்பெறும் தமிழின் வேர்ச்சொல் அடிப்படையிலான சொல்லாக்கங்கள் இணையத்தில் தரவேற்றம் செய்யப்பெற வேண்டும்.

தமிழுக்குத் தோள் கொடுப்போம், கைக் கொடுப்போம்…

தொடர்பிற்கும் இத்திட்டம் தொடர்பாகக் கூடுதல் தகவலுக்கும் குழுவில் இணைவதற்கும்
மின்னஞ்சல்  Valluvar.Vallalar.Vattam@gmail.com
வாட்ஸ்அப் +4796700193

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com