தேச விரோதச் சட்டமும் குற்றவாளிகள் லிஸ்டும்! (விடியோ)

தேச விரோதச் சட்டத்தின் கீழ் சுதந்திரத்திற்கு முன்பும் சரி நாடு சுதந்திரமடைந்த பின்பும் சரி யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? எதற்காக அவர்கள் மீது அச்சட்டம் பாய்ந்தது என்பது பற்றியெல்லாம் இந்த
தேச விரோதச் சட்டமும் குற்றவாளிகள் லிஸ்டும்! (விடியோ)

இன்று தமிழக மக்களிடையே பரபரப்பாகப் பேசுபொருளாகி இருக்கும் தேச விரோதச் சட்டத்தை இயற்றியது இந்தியா அல்ல. அது பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் போது வெள்ளை அரசால் கொண்டு வரப்பட்ட ஒரு சட்டம். அதை நீக்க வேண்டும் என்பது தான் நேருவின் விருப்பமாக இருந்தது. ஆனாலும் இன்று வரை அதை நீக்க முடியாததோடு, யாரெல்லாம் அரசுக்கும் அதன் திட்டங்களுக்கும் எதிராகக் குரல் எழுப்புகிறார்களோ அவர்களை எல்லாம் கைது செய்து ஒடுக்குவதற்கான ஒரு ஆயுதமாகவும் பயன்பட்டு வருவது வேதனை. தேச விரோதச் சட்டத்தின் கீழ் சுதந்திரத்திற்கு முன்பும் சரி நாடு சுதந்திரமடைந்த பின்பும் சரி யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? எதற்காக அவர்கள் மீது அச்சட்டம் பாய்ந்தது என்பது பற்றியெல்லாம் இந்தக் காணொலி வாயிலாக நாம் இப்போது தெரிந்து கொள்வோம்.

இந்த சட்டத்தின் கீழ் சுதந்திரத்துக்குப் பிறகு தண்டிக்கப்பட்டவர்களில் வைகோ குறிப்பிடத்தக்கவர். அவருக்கு இச்சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். அதற்கான தீர்ப்பு இன்று வெளியிடப்படவிருப்பதாகத் தகவல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com