அறிவியல் ஆயிரம்: எகிப்திய மம்மிகளின் புது வாழ்வு
By பேரா. சோ. மோகனா | Published On : 27th December 2020 04:52 PM | Last Updated : 27th December 2020 04:52 PM | அ+அ அ- |

மம்மிகள்
எல்லோருக்கும் மம்மி என்றால் என்று தெரியும். உடலை அப்படியே முழுமையாக பதப்படுத்திய உருவம் என்பதுதான். அப்படியொரு எட்டு எகிப்திய மம்மிகளின் மேல் மூடியுள்ள கவசத்தைப் ஏடு ஏடாகப் பிரித்து, மம்மிகளை ஸ்கேன் செய்த பின், அதிலிருந்து கிடைத்த ஆய்வுத் தகவல்கள் நமக்கு மம்மியைப்பற்றிய புதுப்புது தகவல்களை அற்புதமாக வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு யாரும் இப்படி மம்மியின் முடி, தசைகள் மற்றும் எலும்பைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பார்த்ததில்லை; தெரிந்து கொண்டதில்லை. ஒவ்வொரு மம்மியையும் ஒவ்வொரு சிறப்பு சி.டி. எடுத்துள்ளனர். இந்த நபர்கள் யார், அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், என்ன நோயினால் கஷ்டப்பட்டார்கள் எப்படி இறந்தார்கள் என்பது பற்றிய பல விவரங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு மம்மியும், பதப்படுத்தப்பட்டு பல்வேறு அடுக்குகளால் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு அடுக்கையும் அருங்காட்சியக ஊழியர்கள் அழகாகப் பிரித்து கட்டுகளின் அடியில் இருக்கும் நபரின் முகத்தை முதன் முறையாகப் பார்த்தனர். அத்துடன் அவர்களின் வயது, அவர்கள் சாப்பிட்டவை மற்றும் அவர்கள் அனுபவித்த நோய்கள் போன்றவற்றை ஆய்வுகளின் மூலம் அறிய முடிந்தது. மம்மிகள் பற்றிய விஷயங்கள் இப்போதுதான் முதன்முறையாக வெளியே வந்துள்ளன.
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த ஜான் டெய்லர், மம்மிகளின் படங்களைக் கண்டதும் திகைத்துப் போனதாகக் கூறினார்.
"நீங்கள் ஓர் இருண்ட அறையில் ஒளியை கொண்டுவந்தது போலவும், விஷயங்கள் ஒரு தெளிவுடன் வெளியேறுகின்றன, அங்கு இந்த மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் உண்மையில் என்ன என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்" என்று அவர் கூறினார்.
ஆராய்ச்சியாளர்கள் அந்த மம்மிகளின் பண்டைய உடல்களில் தசைகள் மற்றும் தமனிகளைக்கூட காண முடிந்தது. சில தமனிகள் கொழுப்புகளால் அடைக்கப்பட்டிருப்பதைக்கூட அவர்கள் கண்கூடாகக் கண்டார்கள் என்பதை அறிய மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இதன்மூலம் நாம் அறிய வரும் தகவல் என்னவென்றால், இந்தக் குறிப்பிட்ட மக்கள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டார்கள் என்றும் மற்றும் இதய நோயால் இறந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. .
காய்ந்து உலர்ந்து போன தசையை உரித்தபின், ஆராய்ச்சியாளர்கள் மம்மிகளின் எலும்புக்கூடுகளை விரிவாகவும் மிகவும் அதிசயமாகவும் அவற்றைக் கண்டனர். அவர்கள் இடுப்பு மற்றும் பற்களிலிருந்து மம்மிகளின் தனிப்பட்ட வயதை யூகிக்க முடிந்தது. அவர்களில் பலருக்கு புழுக்கள் இருந்ததற்கான (நோய்த்தொற்றுகள்) அறிகுறிகளுடன் மோசமான பற்கள் இருந்தன, அந்த மம்மிகள், வாழ்வில் வேதனையாக இருந்திருந்திருப்பார்கள் என்றும் கருதினர்.
மம்மிகளின் ஒரு ஸ்கேன் மம்மியின் மண்டைக்குள் ஒரு கத்தி போன்ற ஒன்று இருப்பதைக் (spatulaSSSpatula ) (பச்சை நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) காட்டுகிறது.. மம்மியை உருவாக்க பல கட்டுகளைப் போட்டு மூளையை மூக்கின் வழியே இழுத்தபோது இந்த கத்தி பயன்பட்டிருக்கலாம். அதில் விடுபட்டுப்போன மூளையின் ஒரு பகுதி கூட இருக்கிறது. மம்மியை மூடிய மனிதன் ஒழுங்காக அதனைச் செய்யவில்லை. கி.மு. 3,500ல் மற்றும் கி.பி. 700 களில் வாழ்ந்த மம்மிகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் அனைவரும் எகிப்தின் நைல் பள்ளத்தாக்கில் வசித்து வந்தனர் என்றும் பதிவிட்டுள்ளனர்.
[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
மேனாள் மாநிலத் தலைவர்]