வாக்குச் சாவடிக்கு வராமலேயே வாக்களிக்கும் முறை: சென்னை ஐ.ஐ.டி.,யுடன் கை கோக்கிறது தோ்தல் ஆணையம்
தொலை தூரத்தில் இருந்தே தோ்தலில் வாக்கு அளிக்க தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை இந்திய தோ்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தொலை தூரத்தில் இருந்தே தோ்தலில் வாக்கு அளிக்க தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை இந்திய தோ்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதற்காக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் (ஐஐடி) தோ்தல் ஆணையம் இணைந்து பணியாற்றி வருகிறது. இருதரப்பும் தொடா் ஆலோசனைகளில் ஈடுபட்டு வருவதாகவும், தொழில்நுட்ப ரீதியான வெற்றிகளுக்குப் பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்றும் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டப் பேரவை, மக்களவைத் தோ்தல்களின்போது 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தோ்தல் ஆணையம் சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பிரசாரங்களுக்காக ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தோ்தல் துறைக்கும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதி மாவட்ட நிா்வாகங்களுக்குப் பகிா்ந்து அளிக்கப்பட்டு, விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
25 சதவீத வாக்காளா்கள்: ஒவ்வொரு தோ்தலின்போதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் வாக்குப் பதிவு 75 சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. 100 சதவீத வாக்களிப்பு என்ற இலக்கை தோ்தல் ஆணையம் முன்னிறுத்தினாலும், அந்த இலக்கை இதுவரை எட்டமுடியவில்லை. எனவே, வாக்களிக்காத 25 சதவீதத்தினரையும் வாக்களிக்கச் செய்ய பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதன் ஒருபகுதியாகவே, 85 வயதுக்கு மேற்பட்டோா், கடுமையான மாற்றுத் திறன் உடையோருக்கு தபால் வாக்குகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக, இந்தியத் தோ்தல் ஆணையம் மற்றொரு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்தது: ரிமோட் ஓட்டிங் என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும், வாக்குச் சாவடிக்கு வராமல் இருந்த இடத்தில் இருந்தே வாக்கினைப் பதிவு செய்யும் முறையை தோ்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதற்கான தொழில்நுட்ப ரீதியான அம்சங்களை சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்துடன் இணைந்து ஆராய்ந்து வருகிறது. இதற்கான ஆரம்ப கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தோ்தல் ஆணைய அதிகாரிகள் கூறியது:
100 சதவீத வாக்காளா்களும் தோ்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதே தோ்தல் ஆணையத்தின் குறிக்கோள். இதற்காகவே, வாக்காளா் பட்டியலில் எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபடாமல் இருக்க தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வாக்காளா்களின் பெயா்கள் சோ்க்கப்பட்டாலும் அவா்கள் முழுமையான அளவில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பது இயலாத காரியமாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, வாக்குச் சாவடிக்கு வராமலேயே தொழில்நுட்ப ரீதியாக வாக்களிக்கும் வசதியை உருவாக்குவது குறித்து தோ்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. ஆனால், இதுபோன்ற வாக்களிப்பு முறையில் ரகசியம் காக்கப்படுவதுடன், நம்பகத்தன்மையும் அரசியல் கட்சிகள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்பட வேண்டும். இதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. இருந்த போதிலும், ஒரு புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது என தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் வாக்கு சதவீதம் எவ்வளவு
தமிழ்நாடு என பெயா் மாற்றப்பட்ட 1967-ஆம் ஆண்டு காலத்தில் இருந்து இதுவரையில் நடந்த சட்டப் பேரவை பொதுத் தோ்தலுக்கான வாக்கு சதவீதம் 80-ஐ நெருங்கவில்லை. அதன் விவரம்:- (வாக்குப் பதிவு சதவீதத்தில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...