பழம்பெருமைமிகு இந்தியா...5 மொழி, கலைகள் எப்படி இருந்தன?

பண்டைய கால இந்தியாவில் மொழிகள் மற்றும் சமூகம் சார்ந்த சிறப்புகள் பற்றி...
Ancient India: Evolution of Indian languages and arts
கோப்புப்படம்ENS
Published on
Updated on
3 min read

மொழியியல்

இந்திய இலக்கியம் சில தடைகளை எதிர்கொண்டாலும் பல புதுமைகளைக் கண்டுள்ளன. நவீன எழுத்தாளர்கள் பண்டைய கதைகள் மற்றும் பழக்கவழக்கங்களை குறிப்பாக காலனி ஆதிக்கத்திற்கு எதிராக எழுதியுள்ளனர்.

கிமு 300ல் பிராமி, கரோஷ்டி எழுத்துகள் கண்டறியப்பட்டன. சிந்து சமவெளி நாகரிகத்தில் உள்ள எழுத்துகளில் இருந்து இவை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவை இந்திய எழுத்துகளின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது. பிராமி எழுத்துகள் புத்த மதத்தைப் பரப்புவதற்கும் உதவியது, அசோகர் பற்றிய நூல் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவின் பழமையான மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதம், தேவநாகரி வடிவத்தில் உள்ளது. இது செவிவழியான போதனைகளை வலியுறுத்துகிறது. இது இந்தியாவின் அறிவுசார்ந்த கலாசாரம் மற்றும் ஆன்மிகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டைய இந்திய இலக்கியங்கள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. மதம், தத்துவம், இலக்கியத்திற்கான அடித்தளமாகவும் இருக்கிறது.

பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன் பிலியோஸத், சமஸ்கிருதம் பேச்சுவழக்குகளை ஒன்றிணைக்கும் ஓர் உலகளாவிய மொழி என்று குறிப்பிடுகிறார். தமிழ் இலக்கியங்களும் ஆழமான நெறிமுறை கருப்பொருள்களைக் கூறுகின்றன. அதேநேரத்தில் சமண மற்றும் புத்த மரபுகள், பாலி மற்றும் பிராகிருதம் மொழியிலான நூல்கள் மூலமாக அறிவை வளர்க்க உதவின.

பாணினி சமஸ்கிருத மொழி இலக்கணத்தைப் படைத்துப் புரட்சியை ஏற்படுத்தினார். காத்யாயனா என்பவர் இவரின் படைப்புகளை மேலும் செம்மைப்படுத்தினார். பதஞ்சலியின் மகாபாஷ்ய உரை, சமஸ்கிருத இலக்கணத்தில் உள்ள இடைவெளியை நிரப்பியது.

கல்வெட்டுகளில் சமஸ்கிருதம்
கல்வெட்டுகளில் சமஸ்கிருதம்

மொழியியலாளர் பரத்ரஹரியின் 'வாக்யபாதீயம்' என்ற நூல், சமஸ்கிருத வாக்கியங்கள், சொற்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரையாகும். காளிதாசரின் இலக்கியப் படைப்புகள் சமஸ்கிருத மொழிக்கு மேலும் வலுசேர்த்தன.

2017ல் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் ஜேம்ஸ் ஹார்ட்ஸெலின் ஆய்வு, பண்டைய கால சமஸ்கிருத நூல்களைப் படிப்பது மூளைப்பகுதியில் உள்ள சாம்பல் நிறப் பகுதியை அதிகரித்து நினைவாற்றலை மேம்படுத்துகிறது, மூளையின் நெகிழ்வுத்தன்மையையே அதிகரிக்கிறது என்று கூறியது.

செய்யறிவு மற்றும் மொழி செயலாக்கத்திற்கு சமஸ்கிருதம் ஏற்றது என நாசா விஞ்ஞானி ரிக் பிரிக்ஸ் கூறியுள்ளார்.

ஹிந்தி, பெங்காலி, மராட்டி போன்ற மொழிகளில் சமஸ்கிருத சொற்கள் நிறைய காணப்படுகின்றன. கடவுளர்களான இந்திரன், மித்ரன் பெயர்கள் சமஸ்கிருதம் என்று சொல்லப்படுகிறது. இவை சமஸ்கிருத நாகரிகத்தை எடுத்துரைக்கின்றன.

தென் கிழக்கு ஆசிய மொழிகளிலும் சமஸ்கிருதம் ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்மா, யோகா போன்ற சமஸ்கிருத சொற்கள் ஆங்கிலத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஸ்ரீமத்வாச்சாரியாரின் பகவத் கீதை உரைகள் உள்ளிட்ட படைப்புகள் பக்தியின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன.

கிருஷ்ணரின் பிருந்தாவனத்தில் பக்தி நடைமுறைகள் மற்றும் தத்துவத்தை பரப்புவதில் பங்காற்றிய 6 சீடர்களின் சம்ஸ்கிருத படைப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கிருஷ்ணா, ராதா அன்பை வெளிப்படுத்துபவையாக இந்த படைப்புகள் அறியப்படுகின்றன.

கலைகள்

கி.மு. 3300 முதல் கி.மு. 1300 சிந்து சமவெளி நாகரிகத்தின் கலை மற்றும் ஆன்மிகத்துக்கு முக்கியத்துவம் அளித்ததை அங்கு கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் முத்திரைகள் காட்டுகின்றன.

அஜந்தா, எல்லோரா குகைகள் கி.மு. 2-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 6-ம் நூற்றாண்டு வரை பண்டைய இந்தியாவில் அதிகம் பேசப்பட்டன. இங்குள்ள பாறைகளில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் ஓவியங்களும் புத்த மதம், இந்து மதத்தின் ஆகிய இரண்டைப் பற்றியும் எடுத்துரைக்கின்றன. இந்து மதத்துடன் ஆன்மிகத்தை இணைக்கும் கதைகளைச் சொல்கின்றன.

பரத முனிவரால் நாட்டிய சாஸ்திரம் கி.மு. 200-ல் எழுதப்பட்டது. இது நாடகம், இசை மற்றும் நடனத்துக்கான கொள்கைகளை எடுத்துரைத்தது. மேற்கத்திய நாடுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் நாட்டியம் தோன்றியதை இது காட்டுகிறது.

இந்திய கலாசாரம் தென்கிழக்கு ஆசியாவிலேயே அதிகம் பரவியது. கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட் போன்ற கோயில்கள் இந்தியக் கட்டடக் கலையைத் தழுவியே இருக்கிறது. வர்த்தகம் மூலம் அண்டை நாடுகளுக்குப் பரவிய கலைநயங்கள் இந்தியாவின் சிறப்பை எடுத்துரைக்கின்றன.

முதலில் கோயில்களில் தோன்றிய பாரம்பரிய நடனம் ஆன்மிகம் மற்றும் கலாசாரத்துடன் தொடர்புடையது. நாட்டிய சாஸ்திரம் போன்ற நூல்கள் பாரதநாட்டியம், கதக், ஒடிசி போன்ற நடனங்களுக்கான வடிவங்களையும் நுட்பங்களையும் விவரிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தோன்றிய பரதநாட்டியத்தில் காட்டப்படும் கை முத்திரைகள் பழமையான கதைகளைச் சொல்கின்றன. இந்த நடனங்கள் கலாசாரம் மற்றும் வழிபாட்டு நடைமுறைகளுடன் நேரடி தொடர்புடையவை. தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளிலும் பல்வேறு கலைகளை உருவாக்க வழிவகுத்தது.

இந்திய இசை சாம வேதத்தில் தோன்றியது. குப்தர் காலத்தில் கிபி 4 முதல் 6ம் நூற்றாண்டு வரை, ராகங்கள், தாளங்கள் இந்தியாவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றன.

வீணை, மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்கள் இசைக் கலைஞர்களின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவின் இசைக் கலைகள் மத்திய ஆசியா, திபெத், மங்கோலியா ஆகிய இடங்களுக்கும் பரவின. புத்த மதத்தைப் பரப்பவும் பெரிதும் பயன்பட்டது.

கலைகளுடன் இந்தியாவில் களரி பயிற்சி போன்ற போர்க் கலைகளும் இருந்தன. உடல் ரீதியாக மட்டுமின்றி அவை தத்துவ அடிப்படையிலும் கற்பிக்கப்பட்டன. தனுர்வேதம் போன்ற நூல்கள் வில்வித்தை, போர் உத்திகளை விவரிக்கின்றன. போதி தர்மர் சீனாவுக்குச் சென்று இந்தியாவின் போர்க் கலைகளை பரப்பினார். இதுவே சீனாவின் குங்பூ பயிற்சிக்கான தாக்கத்தை ஏற்படுத்தியது.

பண்டைய இந்தியரின் உணவுப் பழக்கங்கள் சமநிலையும் நிலைத்தன்மையையும் அடிப்படையாகக் கொண்டவை. முக்கியமாக தாவர உணவுகள், தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்புகள், ஆயுர்வேதக் கொள்கைகளுடன் பிணைந்தவை. மசாலாக்கள் சுவைக்காக மட்டுமல்லாது மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்தப்பட்டன. இதனால் பண்டைய இந்தியர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவுகளை உட்கொண்டனர். அவர்களின் உணவுப் பழக்கம், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதாக இருந்தது.

விவசாயத்தில், சிந்து சமவெளி நாகரிகத்தின் நீர்ப்பாசன முறைகள் மற்றும் பயிர் மேலாண்மை முன்னேற்றத்துடன் காணப்பட்டன. அர்த்த சாஸ்திரம், அக்னி புராணம் போன்ற நூல்கள் இதனை விவரிக்கின்றன.

மொகஞ்சதாரோ, ஹரப்பா நகரங்களில் நீர்வழிப் பாதைகள், கட்டடக்கலை சிறப்பாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

Summary

Ancient India boasted a rich tapestry of linguistics and arts; Sanskrit as a prominent language of religious and scholarly texts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com