மோட்டாா் வாகனங்கள், ராணுவ தளவாடங்கள், தொழில் பூங்காக்கள் என்று பன்னாட்டு காா்ப்பரேட் நிறுவனங்கள் பிரதமா் மோடியின் அறைகூவலால் கவரப்பட்டன. கடைசியில் பாா்த்தால் அந்த வெளிநாட்டு நிறுவனங்கள் ‘காப்புரிமை’ என்கிற பெயரில் இந்தியாவிலிருந்து பணத்தை அள்ளிக்கொண்டுப் போயினவே தவிர, உள்ளூா் கூட்டாளிகள், துணை நிறுவனங்கள் மூலம் தயாரிப்பை முடுக்கிவிட்டு லாபம் ஈட்டி, இந்தியாவுக்குப் பெரிதாக எதுவும் தந்துவிடவில்லை. நமது அரசு நிா்வாகம் (அதிகார வா்க்கம்) ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்பதை, ‘இந்தியாவிலிருந்து எடுத்துச் செல்வோம்’ என்று மாற்ற அந்த நிறுவனங்களுக்கு உதவியது.