ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் முதல்முறையாக 9,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில், நேற்று தில்லியில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் தில்லி அணி 75 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், பெங்களூரு அணி 6.3 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில், நட்சத்திர வீரர் விராட் கோலி 23* ரன்கள் அடித்திருந்த நிலையில், ஐபிஎல் வரலாற்றில் 9,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 9,012 ரன்களுடன் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை 8 சதங்கள் மற்றும் 66 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஒரு போட்டியில் அவரது அதிகபட்ச ரன்கள் 113* ஆக உள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்:
விராட் கோலி (பெங்களூரு) - 9,012 ரன்கள் (275 போட்டிகள்)
ரோஹித் சர்மா (மும்பை) - 7,183 ரன்கள் (276 போட்டிகள்)
ஷிகர் தவான் (பஞ்சாப்) - 6,769 ரன்கள் (222 போட்டிகள்)
டேவிட் வார்னர் (தில்லி) - 6,565 ரன்கள் (184 போட்டிகள்)
கேஎல் ராகுல் (தில்லி) - 5,580 ரன்கள் (153 போட்டிகள்)
Summary
Virat Kohli record as first player in history of the IPL to cross the 9,000-runs
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் கோப்பை வென்ற விராட் கோலிக்கு கால்பந்து வீரர் ஹாரி கேன் வாழ்த்து!

டி20 போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை சமன்செய்த விராட் கோலி!

சந்தேகப்பட்டவர்களை சதத்தால் அமைதியாக்கிய விராட் கோலி; முன்னாள் கேப்டன் பாராட்டு!

ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை; விராட் கோலிக்கு க்ருணால் பாண்டியா புகழாரம்!
விடியோக்கள்

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics



